மலரென்று சொல்லாதே, வாடிவிடுவேன்.
மானென்று சொல்லாதே, ஓடிவிடுவேன்.
நிலவென்று சொல்லாதே, தேய்ந்துவிடுவேன்.
உன் நிழலென்று சொல், என்றும் உன் கூடவே வருவேன்.
. அபினயா.
வணக்கம் நண்பர்களே.
என் பெயர் அபினயா.
நான் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.
முதுகலை மற்றும் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன்.
லிட்டில் ப்ளவர் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தேன்.
பிறவியிலேயே பார்வையற்ற பெண். அதனால் என்ன! அறிவுக்கண்களாலும் அனுபவங்களாலும் அனைத்து நல்ல உள்ளங்களையும் உலகையும் அறிந்துகொள்கிறேன்.
பள்ளிப்படிப்பு முடிந்ததுமே வானொலி தொகுப்பாளராக ஆஹா வானொலியில் சேர்ந்தேன்.
2009 முதல் 2012 ஆம் ஆண்டுவரை வானொலி தொகுப்பாளராக பணிபுரிந்தேன்.
பின் சில தனியார் நிறுவனங்களில் டெலிகாலராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
நான் படித்த பள்ளியிலேயே சிறிதுகாலம் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
இப்போது என்னை முழுமையாக எழுதுவதில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல எழுத்தாளராக ஆசை. பள்ளிப்பருவத்திலிருந்தே கவிதை எழுதுவேன்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் கவிதை, பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்துகொள்வேன். முதல் 3 பரிசுகள் உறுதி.
தலைக்கணம் அல்ல. இது தன்னம்பிக்கை.
கதைகள் மற்றும் பாடல்களும் எழுதிவருகிறேன்.
கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். கதைகளும் பாடல்களும் சமீபத்தில் எழுத தொடங்கியதால் கொஞ்சமே கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். விரைவில் அதிகமாக்கிவிடுவேன் என்ற
நம்பிக்கையுடன் தான் இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
மேலே குறிப்பிட்டுள்ள கவிதை, நான் ஆஹா வானொலியில் பணிபுரிந்தபோது இந்து ஆங்கிலநாளிதழ் என்னை பேட்டிகான வந்தபோது நான் தமிழில் சொன்னதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து
எழுதியிருக்கிறார்கள்.
அதன் லின்க் கீழே கொடுத்திருக்கிறேன்.
Saying it in verse
என்னை எழுதவும் படிக்கவும் தூண்டிய என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இந்த வலைப்பக்கத்தை வாசித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவு செய்தால், என் எழுத்துக்கள் மேலும் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும்.
அடுத்தநொடி நிச்சயமில்லா வாழ்வில், நிலையான புகழுடன், நெகிழவைக்கும் அன்புடன், போவது போகட்டும் வருவது வரட்டும் என்று வாழ்வை வாழ்ந்து ரசிப்போம்.
சிரிப்போம், மற்றவரை சிரிக்கவைப்போம்.

சூப்பர் அபிநயா...நல்வரவு...
ReplyDeletethanks naveen.
ReplyDeleteSuper Abinaya
ReplyDeleteWishing you more and more success and best wishes
thank you friend
Delete
ReplyDeleteSuper Abinaya
Wishing you more and more success and best wishes
thanks a lot for reading. keep reading
DeleteGood intro abi
ReplyDeletenandri friend. thodarnthu paarunga.
Deleteவாழ்த்துக்கள் அபி. உன் கவிதைகளை சீக்கிரம் கிண்டிலில் ஏற்று.
ReplyDeleteநன்றி அரவிந் சார். கண்டிப்பா ஏற்றிவிடுகிறேன்.
Deletesuper intro! wellcome to the blog world. surely you will become a writer soon.
ReplyDeletethanks a lot for your wishes.
DeleteSuperb sis... definitely you will reach your peak soon...good start..all the best...
Deletethanks for your wishes keep reading.
Deleteநல்லதொரு அறிமுகம். வலைப்பூவில் எழுதத் தொடங்கியுள்ள உங்களுக்கு வாழ்த்துகள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteஅபி வாங்க வாங்க இருகரம் நீட்டி வரவேற்கிறறோம். உங்கள் அறிமுகமே அதிரடி அட்டகாச மா இருக்கு...நிறைய எழுதுங்க அபி. வாழ்த்துகள்!
ReplyDeleteகீதா
அன்பான மகிழ்ச்சியான வரவேர்பிற்கு நன்றி மேடம். மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் ஆதரவை பார்க்கும்போது. நன்றி மேடம்.
DeleteSuper Abinaya. Best wishes.
ReplyDeletethank you friend.
DeleteCongratulations Darling❤️Way to go🌠✨
ReplyDeletethanks d.
Deleteஅன்றய எழுத்தாளர்கள் அவர்களது படைப்புகளை பத்திரிக்கைகளில் வெளியிட்டனர்.
ReplyDeleteஇன்றய எழுத்தாளர்கள் BLOG மூலம் வெளியிடுகின்றனர்.
பார் போற்றும் பார்வையற்ற படைப்பாளியாய் உருவாக வாழ்த்துக்கள்.
thank you my dear friend shyamala
Delete