Monday, 29 June 2020

மாத்தியோசி.

இந்த உலகத்துல எல்லாருக்கும் எதெல்லாமோ பிரச்சனையா இருந்திருக்கு. ஆனா பூஜியம் பிரச்சனையா இருந்திருக்கா? பணக்காரங்களுக்கு மிகச் சிலநேரத்துல அவசரமா செக் சைன் பண்ணும்போதுதான் பிரச்சனை வரும். ஆனா என் வாழ்க்கைல பூஜியம் ஒரு குட்டி விளையாட்டு விளையாடியிருக்கு.
 எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஃபேமிலி இருந்தாங்க. அந்த ஆண்ட்டிதான் எனக்கு ப்ளஸ்1 புக்ஸ் ரெகார்ட் பண்ணித்தருவாங்க. அவங்களுக்கு இரண்டு பசங்க. நவீனம்மான்னு சொல்லுவோம். நவீன் அவங்க இரண்டாவது பையன்.
நாங்க வீடு காலி செஞ்சு போனதுக்கு அப்புறம் அவங்களும் வேற இடத்துக்கு போய்ட்டாங்க.
எங்க அம்மா அவங்கள வழியில பார்த்ததா சொன்னாங்க. இன்னொரு முறை பார்த்தா போன் நம்பர் வாங்குங்கன்னு சொன்னேன். அவங்களும் சொன்னதை செஞ்சாங்க. நான் அம்மா சொன்ன அந்த நம்பருக்கு போன் பண்ணேன்.
ஒரு ஆளோ பையனோ எடுத்து அவங்க வெளிய போயிருக்காங்கன்னு சொன்னான். நீங்க யார்னு கேட்டதுக்கு அவங்க தம்பின்னு சொன்னான் பேரு லெனின்.
இன்னொரு நாள் போன் பண்ணேன் அதே பதில். மூன்றாம் முறை பண்ணேனான்னு தெரியல. நானே வெளிய போகும்போது அந்த ஆண்ட்டிய பார்த்தேன். கூட அம்மாவும் இருந்தாங்க. என்ன ஆண்ட்டி எப்போ போன் பண்ணாலும் நீங்க வெளிய போயிருக்கீங்கன்னு உங்க தம்பி சொல்றாருன்னு கேட்டேன்.
என் தம்பி ஊர்ல இருக்கானே என்கூட இல்லையேன்னு சொன்னாங்க. என்னது? உங்க தம்பின்னு சொன்னாரே. உங்களுக்கு லெனின்னு ஒரு தம்பி இருக்காரான்னு கேட்க. இல்லை. எனக்கு ஒரே தம்பிதான் அவர் பேர் வேற எதையோ சொன்னாங்க. உங்க போன் நம்பர் சொல்லுங்க ஆன்ட்டின்னு கேட்டேன். அந்த போன் நம்பர்லதான் எங்க அம்மா மாத்தியோசி விளையாடியிருக்காங்க.
அவங்க போன் நம்பர் சொன்னாங்க. அந்த நம்பர்ல 00னு இருந்தது. ஆனா எங்க அம்மா எனக்கு சொன்னது 2 0. அந்த ஆண்ட்டிகிட்ட நடந்ததை சொல்லிட்டு வந்துட்டேன். அப்பவும் எங்க அம்மா அவங்க கெத்தை விடல. எதுக்கு அப்படி மாத்தி சொன்னீங்கன்னு கேட்டதுக்கு நான் எங்க மாத்தி சொன்னேன்? 2 0 இருக்குன்னு சொன்னேன் சொன்னாங்க.
அதாவது நம்ம பாஷைல டபுள் 0 சொல்லுவோம். அவங்க இரண்டு சாக்லேட் இருக்கு சொல்ற மாதிரி 2 0 சொல்லிருக்காங்க. அந்த லெனினுக்கு போன் பண்ணி எதுக்கு பொய் சொன்னன்னு கேட்டதுக்கு, உன் குரல் நல்லா இருக்கு. உன்னோட நட்பை வளர்த்துக்க தோனுச்சி சொன்னான். எனக்கு எரிச்சலா இருந்தது. அதுக்கு இப்படியா பொய் சொல்லுவேன்னு திட்டினேன். ஃப்ரெண்ஷிப்வேணும்னு  கெஞ்சினான்.
அப்படி நடிச்சிருக்கான். எனக்கு யாரையும் அவ்வளவு சீக்கிரம் முகத்துல அடிச்ச மாதிரி தவிர்க்க வராது. அதேநேரம் ரொம்பவும் எச்சரிக்கை உணர்வோட இருப்பேன்.
ஒரு வாரம் இருக்கும்னு நினைக்கிறேன். மேபி அதற்கும் குறைவான நாட்கள் டெய்லி கால் பண்ணான். ஒரு தோழனுக்கு எந்த அளவு முக்கியத்துவமோ அதைவிட பலமடங்கு குறைவான பேச்சுகள். என்ன பன்ற, சாப்பிட்டியா, இந்த ஸ்லாம் புக்ல வருமே. என்னென்ன பிடிக்கும் பிடிக்காது. இப்படி.
ஒருநாள் எங்கையாவது வெளிய போகும்போது இன்ஃபார்ம் பண்ணு நான் உன்ன மீட் பண்ணனும் சொன்னான். நானும் எங்க அம்மாவும் பியூட்டி பார்லர் போகும்போது சொன்னேன்.
ட்ரெஸ் கலர் சொல்லியிருந்தேன். நான் போன வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன். அவன் வந்தானா பார்த்தானான்னுலாம் தெரியல. ஆனா ரொம்பநாளா கால் வரல. எனக்கு ஒரு யூகம் இருந்தது. அதை உறுதி செய்ய போன் பண்ணேன். என் யூகம் சரியா இருந்தது.
நா போன் பண்ணி என் பெயர் சொன்னேன். சாரி ராங் நம்பர்னு சொன்னான். திரும்ப பண்ணேன் எடுக்கல. அப்போதான் தெரிஞ்சது அவன் என்னைப் பார்த்திருக்கான். நான் பார்வையற்ற பொண்ணுன்னு தெரிஞ்சிகிட்டிருக்கான்.  அந்தநொடியே நட்பையும் கட் பண்ணியிருக்கான்னு.

30 comments:

  1. இவர்கள் பொழுது போக்குவதற்காக பழக நினைப்பவர்கள் இவர்களைப் போன்றவர்களை தவிர்ப்பதே நல்லது.

    தங்களுக்கு விழி தெரியாது என்பதை இன்றே அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார். ஆனா நட்புக்காக சரத்குமார் மாதிரியே நடிக்கிறதுல இவங்கல்லாம் சாமர்த்தியசாலிகள். என்னோட அறிமுகவுரைப் பதிவை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

      Delete
  2. என்ன comment எழுதுவது என்று தெரியவில்லை அபி

    வித்யா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா இந்த கமெண்ட்டே சூப்பரா இருக்கு மேடம்.

      Delete
  3. பூஜ்யத்தின் மதிப்பு தெரியாதவங்க

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சார். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete
  4. நீங்கள் அறியாத ஒருவருக்கு இவ்வளவு விவரங்கள் கொடுத்திருக்கக் கூடாது.  இனி கொடுக்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார், நானே இதை உணர்ந்திருக்கிறேன். எனக்கு அப்போலாம் அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லை. எதையும் செஞ்சி முடிச்சதுக்கு பிறகு இதை செய்திருக்க வேண்டாமோ என்று யோசிப்பேன். இப்போ மாறிட்டேன். ஒவ்வொரு தவறும் ஓர் அனுபவம்தானே.

      Delete
  5. குறல் அழகுல ஐய்யா கொலாப்ஸ் ஆகி இருக்கிறார்!
    ராங்க் நம்பர் அடிச்சு ராங்க் நன்பன் கிட்ட மாட்டிக்கப் பார்த்திருக்க.
    சில சமயம் நம் குறைகள் நமக்கு நன்மையையே செய்வது விசித்திரமான உண்மை, ஒரு பொருக்கியிடம் மாட்டிக்காம காப்பாத்திருக்கு.
    பார்வை இல்லை என்றாலும் பணம் பிடுங்கும் எண்ணத்துடன் நட்பு வளர்ப்பவர்களையும் வாழ்வில் நீ சந்தித்திருப்பாய்.
    அப்படினா நம்ம கோயம்பத்தூர் நவீன் ஓட அம்மாதான் ரெக்கார்டிங் பண்ணினாங்களா?

    ReplyDelete
    Replies
    1. எங்க அம்மாக்கு ரெக்கார்டிங் லாம் தெரியாது.

      Delete
    2. ஹா ஹா அரவிந் சார் நீங்க போட்ட கமெண்ட்ட்ல நவீன் அரண்டுபோய் அவசரமா அது எங்க அம்மா இல்லைன்னு சொல்றாரு. அவங்க சென்னைல இருக்காங்க.

      Delete
    3. அதுதான் சதிகார குரலாச்சே அப்படித்தான். என்ன செய்யிறது எல்ல்ஆம் என் நேரம். நீங்க சொல்றது நிஜம்தான். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்வைக் குறைபாடுதான் சீக்கிரம் காட்டிக்கொடுத்தது.

      Delete
  6. இந்த பதிவ வாசிச்சதும் எனக்கு இயக்குநர் அட்லியின் முகப்புத்தகம் - குறும் படம்தான்
    ஞாபகத்துக்கு வருது.

    ReplyDelete
  7. ஒருமுறை ஒரு பாட்டி சும்மா கால் பண்ணாங்கன்னு அவங்களை கேப்விடாம திட்டினேன். கடைசியில் என் நண்பரின் அம்மா அவர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு சுவாரசியமான பதிவு அவ்வளவுதான். அப்படிப்பட்ட நினைவுகள் மட்டுமே என் நெஞ்சில் இருக்கிறது. காலில்லாதவர் கண் பார்வையற்றவரின் புகைப்படத்தை மேட்ரிமோனியில் பார்த்துவிட்டு வேண்டாம் என்றாராம். தவறு யார்மேல்? தனக்கு ஒரு குறை இருக்கும்போதே மற்றொரு குறைபாடை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்மேலா? அல்லது தான் பார்வையற்றவர் என்று தெரிந்தும் கல்யாணத்திற்கு மேட்ரிமோனியில் பதிவு செய்தவர்மேலா?

    ReplyDelete
    Replies
    1. காலில்லாதவர் கண் பார்வையற்றவரை வேண்டாம் என்று சொன்னது நல்லதுதான். தன்னம்பிக்கையை எல்லாம் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கையின் எதார்த்தத்தில் இருந்து பார்த்தால் இருவருக்கும் அது ஒத்துவராது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

      Delete
    2. அதுவும் உண்மைதான் வினோத் ஆனா சம்பந்தப்பட்ட பெண் என்கிட்ட வந்து சொல்லும்போது பாவமா இருந்தது.

      Delete
  8. மேலே குறிப்பிட்டிருப்பதைப்போல இது நட்பிற்கும் கீழான ஒரு நிகழ்வு. அதற்கே இப்படியென்றால் பார்வையற்றவனைக் காதலித்ததற்காகவே அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டிய பெண் இருக்கிறாள். அதை என்னவென்று சொல்வது? இது ஒருபுறம் வலி. மறுபுறம் அவர்களின் அறியாமையை எண்ணிச் சிரிப்பு.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கதையை எழுதுங்களேன். உங்களது வழக்கமான பானியில்.

      Delete
    2. கண்டிப்பா எழுதுறேன்.

      Delete
  9. அடடா... பலரும் இப்படி இருக்கிறார்கள். நல்லவேளை இந்த அளவில் நின்றதே.

    ஜாக்கிரதையாக இருங்கள் அபிநயா.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார்.

      Delete
  10. //நா போன் பண்ணி என் பெயர் சொன்னேன். சாரி ராங் நம்பர்னு சொன்னான். திரும்ப பண்ணேன் எடுக்கல. அப்போதான் தெரிஞ்சது அவன் என்னைப் பார்த்திருக்கான். நான் பார்வையற்ற பொண்ணுன்னு தெரிஞ்சிகிட்டிருக்கான். அந்தநொடியே நட்பையும் கட் பண்ணியிருக்கான்னு.// ஹஹா.. அதுதான் லெனினுக்கான மாத்தி யோசி டைம். உங்களைப் பாத்த உடனே மாத்தி யோசிச்சிட்டான். சரி இப்போ சீரியசான கமெண்ட்டுக்கு வருவோம். உங்களுடைய குரலைக்கேட்டு அவன் விழுந்ததுல ஆச்சர்யம் ஒன்னுமில்ல. ஏனென்றால் உங்கள் குரல் அப்படி. சீரியசாதான் சொல்லுரேன். நீங்க வேணும்னா திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பார்களே ஒரு கூட்டம். அதுதாங்க டப்பிங் யூனியன். அங்கப் போயி உங்களுடைய குரலைப் பதிவு செய்து வாய்ப்புக் கேட்டு பாருங்கள். கதா நாயகிகள் நடிக்கும்போது காட்டும் உணர்ச்சியை சந்தர்ப்பத்தை விவரமாகக் கேட்டுவிட்டு உங்கள் குரலில் நீங்கள் அவர்களின் நடிப்புக்கேற்ப காட்டினால் கதா நாயகிகளுக்கு இல்லையென்றாலும் ஏதாவதொரு பெண் கதாப்பாத்திரத்துக்கு உங்களின் குரளுக்கு வாய்ப்புத் தருவார்கள். குறிப்பாக சாதுவான கதாப்பாத்திரங்கள். முயர்ச்சி செய்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. முயர்ச்சி செய்கிறேன் வினோத். டப்பிங் ல எனக்கு அந்த அளவு யாரும் காண்டாக்ட் இல்ல.

      Delete
  11. சரி. நேருல பாத்துட்டான். அதுக்கென்ன? உண்மையிலேயே ஃப்ரெண்ட்லியா பழகனும்னு நெனைக்குறவனுக்கு சம்மந்தப் பட்டப் பொண்ணுக்குப் பார்வை இருந்தா என்ன இல்லனா என்ன? திரும்ப கால் பண்ண அப்போ ராங் நம்பர் நு என்ன வெங்காயத்துக்கு சொல்லனும்? நான் உங்கள பாத்தேன். ஆனா சட்டுனு வந்து பேசத்தோனல நு சொல்ல வேண்டியதுதான? நீங்க அந்த உரவ நட்புக்கு கீழே நு சொல்லி இருந்தீங்க. ஆனா அவன் எல்லாம் மனுஷ ஜென்மத்துக்கும் கீழ.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு. எனக்காக ஒரு ஜீவன் அவனை இப்படி திட்டுறது. அரவிந் சார் கூட திட்டியிருக்கார்.

      Delete
  12. கவனமாக இருக்க வேண்டும் அபிநயா.

    துளசிதரன்


    அபி இனி ராங்க் கால்னு தெரிஞ்சப்புறம் கண்டினியூ பண்ணாதீங்க. தெரியாத நபரிடம் உங்கள் தகவல்களைச் சொல்லாதீங்க. கான்ட்டாக்ட் கைச்சுக்காதீங்க. யாரையும் எளிதில் நம்பிவிட முடியாது. கவனமா இருங்க அபி.

    இப்படியான அனுபவம் எனக்கும் உண்டு. கட் செய்துவிடுவேன். அப்புறம் தெரியாத நம்பர் வந்தால் எடுக்கவே மாட்டேன். மீண்டும் தொடர்பு கொள்ளவும் மாட்டேன். வேணும்னா அவன எஸ் எம் எஸ் செய்யலாமே தாங்கள் யார் என்று. நான் அப்படித்தான் செய்வது வழக்கம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கவனமாக இருக்கிறேன் துளசிதரன் சார் கீதா மேடம். எனக்கு இத்தனை அன்பு உள்ளங்களோட சப்போர்ட் இருக்கும்போது என்ன கவலை.

      Delete
  13. சில ஜென்மங்கள என்னசொல்லுரதுன்னே தெரியல. கவணமாக இருங்கள். பதிவு நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அவங்க இயல்பே அப்படித்தான் ஃபெர்நாண்டோ. வாழ்த்திற்கு நன்றி.

      Delete