ஹாய் நண்பர்களே.
ஒரே சீரியஸ் கருத்துக்களாவே போகுது. இன்னைக்கி ஒருநாள் சிரிக்கலாமா?
எனக்கு குறும்பு செய்யுறதும், குறும்பு செய்யுறவங்களையும் ரொம்ப பிடிக்கும். பார்த்தா அப்படி தெரியலயேன்னு நீங்க நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
அட! இப்பத்தானே ஆரம்பிச்சுருக்கேன். இனி போக போக பாருங்க. சரி நான் விஷயத்துக்கு வரேன்.
என் குரல் இருக்கே அதுதான் எனக்கு முதல் எதிரி. சதிகார குரல். எங்க எப்படி ஒலிக்கனுமோ அப்படி ஒலிக்காது. அதுதான் எனக்கு பலமும்கூட. என்ன செய்யுறது? கடவுள்
இந்த சிற்பத்தை அப்படி செதுக்கிட்டாரு.
நான் டெந்த் படிக்கும்போது. அப்போ எனக்கு படிப்புதான் எல்லாமே. சும்மா சும்மா படிச்சிட்டே இருப்பேன். அதுக்காக பப்ளிக் எக்சாமுக்கும் விழுந்து விழுந்து படிச்சேன்னு
நினைக்காதீங்க.
ஆரம்பத்துல நல்லா படிச்சிட்டு திமிரா பப்ளிக் எக்சாம் டைம்ல சொப்பு சாமா விலையாடினேன். அட! டென்ஷன் ஆகாதீங்க இதெல்லாம் என் விளையாட்டுகளில் ஒன்று.
அப்போ போகி வந்தது. எனக்கு இந்த வானொலில ஒரு நேயரா பேசுறது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஏதாவது போட்டி வெச்சா கலந்துக்க நினைப்பேன்.
அப்படித்தான் சூரியன் வானொலில ஒரு போட்டி வெச்சாங்க. போகிக்கு புதுமையா எந்த மாதிரியான விஷயங்கள எரிக்கலாம் கேட்டாங்க. சரியா சொல்றவங்களுக்கு பரிசு. அதுவும்
பருத்திவீரன் ப்ரியாமணி வீட்டுக்கு வந்து தருவாங்களாம்.
2 மணியிலருந்து 3 மணிவரைக்கும் மகளிர் மட்டும்னு ஒரு நிகழ்ச்சி வரும். 3 மணிக்கு சிறுவர் நேரம். நான் நேர்மையா 2 மணியிலருந்து கால் பண்ணேன். 2 3 முறை லைன் கிடைச்சது.
ஆனா என் குரலை கேட்டு கட் பண்ணிட்டாங்க. அதாவது என் குரல் குழந்தை போல இருக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. அதன் உண்மைத்தன்மை இது.
சிறுவர் நேரம்ல 1 முதல் 5ஆம் வகுப்புக்குள்ள படிக்கிறவங்க கால் பண்ணனும். நான் சிறுவர் நேரம்ல கால் பண்ணேன். அபினயா பேசுறேன். 5ஆம் வகுப்பு படிக்கிறேன் சொன்னேன்.
நம்பி பேசினாங்க.
அடுத்தவங்கள புண்படுத்துற எந்த விஷயத்தையும் எரிக்கனும் சொன்னேன். ஜெயம் எனக்கே.
ப்ரியாமணி வீட்டுக்கு வந்தாங்க. அன்னைக்கு எனக்கு அறிவியல் சிறப்பு வகுப்பு. எங்க அப்பா ச்கூலுக்கு போய் விஷயத்தை சொல்ல அவங்க சந்தோஷமா விடுமுறை கொடுத்துட்டாங்க.
என் குறும்பை மட்டும் சொல்லல. நானேவீட்ல யார்கிட்டையும் சொன்னேனா தெரியாது.
ப்ரியாமணி வீட்டுக்கு வருவதற்கு முதல்நாள் சூரியன் வானொலிலருந்து ஒருவர் வந்து என்னையும் பார்த்துட்டு விலாசம் சரியா இருக்கான்னு வெரிஃபை பண்ணிட்டுப்போனாரு.
அப்பவும் அவரால என்னை கண்டுபிடிக்க முடியல.
அந்த நடிகை வீட்டுக்கு வந்து பிரியானி அரிசி, இனிப்பு, வீஜீபிக்கு 4 டிக்கட் கொடுத்துட்டு புகைப்படம் எடுத்துட்டு நல்லா பேசிட்டு போனாங்க.
அவங்க அம்மாவும் இன்னும் சில சூர்யன் வானொலி தொகுப்பாளர்களும் வந்தாங்க.
கொஞ்சநாள் கழிச்சு ஜப்பான் மாடல் ஆடோமேடிக் கேசடுப்பும் கிடைச்சது.
அப்புறம் அப்படியே 2 வருஷத்துல நான் ப்லஸ் டூ முடிச்சிட்டு ரிசல்ட் வந்ததுமே ஆஹால வேலைக்கு போய்ட்டேன். எனக்கு ரிசல்ட் வர அன்னைக்குதான் இரண்டாம் கட்ட நேர்கானல்.
அன்னைக்கு வேலையும் கிடைச்சிடிச்சி. ஜூன் முதல் தேதியிலருந்து போகனும்.
அங்க இருக்க எல்லாரும் நல்லா பழகுவாங்க. ஜாலி டைப். கோல்மால் கனேஷ்னு ஒரு அண்ணா இருந்தார். ஒருநாள் நாங்க எல்லாம் சும்மா பேசிட்டு இருக்கும்போது.
இவங்க வேற வானொலி, சூரியன் வேற வானொலி. இவங்க அவங்ககிட்ட இதை சொல்லவாப்போறாங்க. நான் ஒன்னு சொல்றேன், சூரியன் வானொலி தொகுப்பாளர்கள்கிட்ட சொல்லக்கூடாதுன்னு
சொல்லிட்டு 2 வருஷம் முன்னாடி நடந்த விஷயத்தை சொன்னேன்.
அப்போதான் எனக்கு பெரிய டிவிஸ்ட் வந்தது. கோல்மால் கனேஷ் எல்லாம் அமைதியா கேட்டுட்டு, ப்ரியாமணி வீட்டுக்கு வந்த முதல்நாள் அட்ரஸ் சரி பார்க்க ஒருத்தர் வந்துருப்பாரேனு
கேட்டாரு.
சரி எல்லா இடத்துலயும் அப்படித்தான்னு நினைச்சு ஆமாம் வந்தாரு. ஆனா அவர்கூட என்னை கண்டுபிடிக்கலைன்னு கெத்தா சொன்னேன்.
அப்படி வந்ததே நாந்தான்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்திருக்கும்.
என்னது? நீங்க சூரியன் வானொலில இருந்தீங்களான்னு திரும்பவும் கேட்டேன். அதற்கு தொகுப்பாளர் ரோஹினி ஆமாம் இருந்தாருன்னு சொன்னாங்க.
எல்லாரும் சிரிச்சாங்க.
இவ்ளோநாளா உன்னை எங்கையோ பார்த்த மாதிரியே இருந்ததுன்னு நினைச்சேன். நீதானா அந்த பாப்பானு கேலி செஞ்சாரு.
சிரிச்சேன். நான் சொன்னா என்னை பார்த்தும் ஏன் கண்டுபிடிக்கலன்னு கேட்டேன். நீ அப்போ அப்படித்தான் இருந்த அதான் உண்மைன்னு நம்பிட்டேன் சொன்னாரு.
ஆக 2 வருஷம் முன்னாடி நீ என்னை ஏமாத்தியிருக்கன்னு சிரிச்சாரு. நல்ல கோயின்சிடன்ஸ் ன்னு எல்லாரும் சிரிச்சாங்க. அவர் கோல்மால் ஷோ பண்ணாரு.
இது கோல்மால்கிட்டயே கோல்மால் இல்லையா?
ஹாஹா ஹா இன்னும் நிறைய இருக்கு. அப்போ அப்போ பார்க்கலாம்.

அப்ப பிஞ்ஜு மூஞ்ஜ வச்சிக்கிட்டு எல்லா நஞ்ஜு வேலைகளையும் பார்த்திருக்க?
ReplyDeleteஎன்ன சார் பன்றது. என் நேர்மையை அவங்க மதிக்கலை. அதான் ஒரு குட்டி பணிஷ்மெண்ட். எப்படி?
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி
Deleteசூப்பர். கில்லாடி அபி.
ReplyDeleteஹா ஹா ஹா நன்றி நவீன்.
DeleteVidya
ReplyDeleteEnjoyed
thank you mam.
Deleteஒரு சந்தேகம். அபி உன் புணைப்பெயரா? உன்னை நன்கு தெரிந்தவர்கள் வித்யா னு அழைக்கிறார்களே?
ReplyDeleteவித்யா மேடம் ஒரு வாசிப்பாளர். நமக்கு புத்தகம் படித்து ஆடியோவா ஒலிப்பதிவும் செய்து தருவாங்க. அவங்க கருத்தைப்போடும்போது அவங்களோட பெயர் வராம அண்ணோன் வருது. நான் அவங்கதான்னு தெரிஞ்சிக்கனும்னு அவங்க பெயரோட அனுப்புறாங்க. அபி என்னோட புனைப்பெயர்.
Deleteைய்யோ! செம செம ரசித்தேன்.
ReplyDeleteநன்றி. நல்லா சிரித்து சந்தோஷமா இருங்க.
Deleteபுதிதாக தனது எழுத்துப்பயணத்தை ஆரம்பித்திருக்கும் அபிக்கு வாழ்த்துகள். தங்களின் எழுத்துப்பயணத்தை விரல்மொழியரோடு தொடர அழைக்கிறோம்.
ReplyDeleteviralmozhiyar@gmail.com
தங்களின் வாழ்த்திற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி சார். நிச்சயம் என் எழுத்துப்பயணத்தை விரல்மொழியரிலும் தொடங்குகிறேன்.
Delete
ReplyDeleteநடந்த கதை கேட்டபிறகு உங்கள் புனைபெயர் இப்படியாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்.
"கோல்மால் குறும்பி" எப்படி ?
பொருத்தமான பெயர் வைத்ததற்கு நன்றி சார். என் குறும்பை ரசித்தது மட்டுமின்றி அப்படியே பெயரும் வைத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.
Delete