Saturday, 4 July 2020

'ஒரு மாதக் குழந்தை'



என்ன இவ்வளவு லேட் பண்றீங்க. சீக்கிரம் ஹால் ரெடி பண்ணுங்க. அவங்க எல்லாம் வர நேரமாகிடிச்சி. ”அபி. இந்த கொரோனா நேரத்துல இது தேவையாடி?” “தேவைதான் மகி. எல்லாம் சும்மா ஜாலிக்குதானே. நீ போய் ரெடி பண்ணு. நான் அவங்க எல்லாரையும் வரவேற்கிறேன்.” நான் வாசலுக்கு வந்தேன். என் தோழியர் ஹாலை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்திலே ஒரு கார் வந்தது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார்.
வாங்க வித்யா மேடம். வாங்க வாங்க.” “வாழ்த்துக்கள் அபி. ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு. நீங்க இதைவிட பெரிய பெரிய விழாலாம் கொண்டாடனும்.” “ரொம்ப நன்றி மேடம். ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க வந்ததுல.” நான் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றொரு கார் வந்தது.
அடடே வாங்க வெங்கட் சார் எப்படி இருக்கீங்க? என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி.” “ம். நல்லா இருக்கேன். வரலேன்னு சொன்னா மட்டும் விடவாப்போறீங்க? எனிவே வாழ்த்துக்கள்.” “நன்றி சார். உள்ள வாங்க.” அவர் உள்ளே சென்றதும் சிறிது நேரத்தில் வரிசையாக கார்கள் வரத் தொடங்கியது.
வாங்க கில்லர்ஜி சார். வாங்க வாங்க. “வாழ்த்துக்கள் அபி. ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலயா?” “ஹா ஹா தெரியலயே. என்ன சார் பண்றது இதைக் கொண்டாடனும்னு தோனிச்சு அதான். உள்ள வாங்க சார்.” அவரும் உள்ளே சென்றார்.
வாங்க துளசிதரன் சார். வாங்க கீதா மேடம்.” “அபி எங்களுக்கு கேக் கிடைக்கிதோ இல்லையோ. கைக்கழுவ சேனிடைசர் கிடைச்சது. முகக்கவசம் அணிஞ்சிருக்கோமான்னு செக் பண்ணாங்க. ஹப்பா. கூட்டம் கூடாதுன்னு சொல்லுற இந்த நேரத்துல உங்களுக்கு ஏங்க இந்தக் கொலைவெறி.” “ஹா ஹா வாங்க கீதா மேடம். வாழ்க்கைய இப்ப வாழலன்னா எப்போ வாழ்வது. என் ஃபோனுக்கே பிறந்தநாள் கொண்டாடினேன். இதுக்கு கொண்டாடலன்னா எப்படி?” “ம். உங்க ஒரு மாத ப்லாகிற்கு பிறந்தநாளா? உங்க குறும்புக்கும் கற்பனைக்கும் அளவே இல்லை.” என்று சிரித்தார் துளசிதரன் சார். இருவரும் என்னை வாழ்த்திவிட்டு உள்ளே சென்றனர்.
 வாங்க ஸ்ரீராம் சார்.”"அபி இதெல்லாம் டூ டூ மச். வாழ்த்துக்கள்.” “ஹாஹா நன்றி ஸ்ரீராம் சார்.அடுத்த முறை இதைவிட அமர்க்களப்படுத்தி ஃபோர் மச் ஆக்கிடுறேன்.” பேசிக்கொண்டிருந்தபோதே ராஜி மேடம் வந்தார்கள். “ஹாய் ராஜி மேடம், வாங்க வாங்க.” “என்ன அமைதியின் சிகரமே. எப்படி இருக்கீங்க? எல்லாம் ரெடியா?” “நல்லா இருக்கேன் மேடம். எல்லாம் ரெடி.” “உங்க குட்டித் தொண்டையில காரக்குழம்பு குடையிதோ இல்லையோ. உங்க குட்டி மூளைக்குள்ள நிறைய சிந்தனைகள் குடையிது. அதுவும் கொரோனா நேரத்துல கூட்டம் கூட்டி கேக் வெட்டனும்ற வில்லங்கச் சிந்தனைகள்.” “ஹா ஹா வாங்க மேடம்.” அவர்களும் உள்ளே சென்றதும் அமுதா மேடம் வந்தார்கள்.
அதன் பின் திருப்பதி மகேஷ் ஒரு பெரிய குழுவாக வந்திருந்தான். அதில். அரவிந் சார், நவீன், பாஷா, பரத்,  ஃபெர்நாண்டோ வினோத் ஆகியோர் இருந்தனர். “ஹாய் ஹாய் வாங்க வாங்க, எப்படி எல்லாரும் ஒன்னா வந்தீங்க?” “ம், தனித்தனியா வரவேற்றா உனக்கு வாய்வலிக்குமே. அதான் ஒன்னா வந்து வரவேற்க வெச்சிட்டோம்.” வினோத் கலாய்த்தார். சிறிதுநேரம் மகேஷ் குழு முடிந்தமட்டும் என்னைக் கேலி செய்துவிட்டு உள்ளே சென்றனர்.
வாங்க கோயில்பிள்ளை சார், வாங்க விசு சார். விசு சார் நீங்க எனக்கு பின்னூட்டம் போடாததால நான் கொஞ்சம் நல்லா எழுதலியோ. இன்னும் என்னை வளர்த்துக்கனுமோனு தோனிச்சு. உங்கள் கருத்துக்கள்தானே எங்க வளர்ச்சிக்கு ஆதாரம்.” “நீங்க போட்ட அனுபவப் பதிவுகளப் பார்த்துட்டு அரண்டு போயிருப்பார்.” கோயில்பிள்ளை சார் சொல்ல, விசு சார் சிரித்துவிட்டார். இருவரும் உள்ளே சென்றதும் திண்டுக்கல் தனபாலன் சார் வந்தார்.
வாங்க தனபாலன் சார்.” “வாழ்த்துக்கள் அபி. எல்லாரும் வந்தாச்சா?” “நன்றி சார். எல்லாரும் வந்துட்டாங்க.” தனபாலன் சார் உள்ளே சென்றதும் ரம்யா மேடம் வந்தார். அவரும் உள்ளே சென்றதும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா வந்தார்.
வாங்க ஐயா. என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்தமைக்கு ரொம்ப நன்றி.” “உங்களின் எழுத்துக்கள் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்.” “நன்றி ஐயா.” ராஜேஷ்வர கௌதம், முனியபிள்ளை,யாதொரமணி, லத்தா டீச்சர் மற்றும் பல வாசகர்கள் வந்ததும் விழாத் தொடங்கியது.
 ஹாப்பி பர்த்டே டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ அபி ப்லாக் ஹாப்பி பர்த்டே டூ யூ. என்று வாழ்த்திப்பாட, கேக் வெட்டப்பட்டது. அபியின் தோழியரும் பெற்றோரும் அனைவருக்கும்  கேக், மிக்சர், சாக்லேட்டோடு ஜூசும் பரிமாறினார்கள்.
சிற்றுண்டியை உண்டபடியே அனைவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கப்பட்டது. சிறிதுநேரத்தில் நான் இந்த ஒரு மாத எழுத்து அனுபவங்களை ஷேர் பண்ணுவதற்காக எழுந்து நின்றேன். “ஒரு மாசமா பெரியப் பெரிய பதிவாப் போட்டு வாசிக்க வெச்சிக் கொல்லுற. இப்போ பேசிக் கொல்லப்போறியா? வேண்டாம் அபி. ப்லீஸ்.” அரவிந் சார் போலியாய் கெஞ்ச அனைவரும் சிரித்தனர். இருந்தாலும் நான் விடாமல் என் கடமையில் கண்ணானேன்.



என் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றோடு நான் வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாதம் ஆகுது. இந்த ஒரு மாத காலமும் நல்ல அனுபவமா இருக்கு.
சுவாரசியமா இருக்கு. ஒவ்வொருவரின் கருத்துக்களைப் படிக்கும்போதும் சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்னாடியும் எழுதுவேன் ஆனா பெருசா எங்கையும் பப்லிஷ் பண்ணதில்ல. நட்புக்குள்ளதான் தெரியும். இப்போ எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கவே பெருமையா இருக்கு. இன்னும் அதிக வேகத்தோட எழுதத் தூண்டுது.
ஒவ்வொரு பதிவை எழுதி முடிச்சு பப்லிஷ் பண்ணும்போதும் எதையோ சாதிச்ச சந்தோஷம். இன்னும் நிறைய படிக்கணும், நிறைய விஷயங்கள கத்துக்கணும், எழுத்து வன்மையை மேலும் பெருக்கணும். சீக்கிரமா அமேசானில் புத்தகமா வெளியிடணும். இதுதான் என்னோட நோக்கம் லட்சியம் எல்லாம். எதாவது கான்செப்ட் பத்தி யோசிச்சா கனவுல அந்த கான்செப்ட் தொடர்பா எதாவது வருது.
எல்லாரோட பதிவைப் படிக்கிறதும் சுவாரசியமா இருக்கு. பாசிடிவ் நெகட்டிவ் கருத்துக்கள் வருது. இது இரண்டையும் கேட்கும்போதும் இன்னும் எப்படியெல்லாம் எழுதினா நல்லா இருக்கும்னு யோசிக்க வைக்கிது. எப்பவும் எழுத, படிக்கன்னு பாதிநேரம் அழகாவே கழியிது. மனசெல்லாம் சிந்தனை மயம்தான்.
ஒரு புத்தகத்தை நாங்க நோட்பேட்ல மாத்தி இன்சர்ட் டௌன் ஏரோ கொடுத்துப் படிப்போம். அப்போ பத்தி, கேப், எழுத்துரு, கலர், இதெல்லாம் கவனிக்கப்படாது. எல்லா உச்சரிப்புக்களும் ஒரே மாதிரி ஒலிக்கிறதால ந், ன், ண், கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டம். இப்போ நீங்க எல்லாரும் படிக்கும்போதுதான் என்னென்ன தவறுகள் இருக்குன்னு தெரியவருது. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை தவறு தவறுதான். சலுகைகள் கூடாது.
ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் சரி செய்துவிடுகிறேன். ராஜி மேடம் எழுத்துருவை பெருசாக்கச் சொல்லியிருந்தார். அதன்படி நானே இந்தப் பதிவில் எழுத்துருவை சரி செய்திருக்கிறேன். சரியாக வந்திருக்கிறதா என்று கருத்தில் சொல்லுங்கள். கில்லர்ஜி சார் சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, சரி செய்ய சொல்லியிருந்தார். ’அமைதியும் ஓர் ஆயுதம்தான்கதையில் அதை சரி செய்து எழுதியிருக்கிறேன். கீதா மேடம் தொலைப்பேசியில் பத்திப் பிரித்து எழுதச் சொல்லியிருந்தார். ms word ல் எழுதும்போது எனக்கு அடிக்கடி சிஸ்டம் ஹேங் ஆகும். கம்ஃபர்டபிளா இருக்காது அதுனால நோட்பேடில் எழுதுவேன். அதுல பத்திப் பிரிக்க முடியாததால கேப்விட்டு எழுதுறேன். அதுவும் சரியா என்று சொல்லுங்கள்.
இதைப் பற்றியெல்லாம் வித்யா மேடமிடம் தொலைப்பேசியில் கேட்டதற்கு எல்லாம் கரக்டா இருக்கு என்றார்கள். என் எழுத்துக்கள் இன்னும் உங்கள் பார்வைக்கு விருந்தாக அழகாக அமைவதற்கான வழிமுறைகளை நீங்களும் சொல்லுங்கள். பொதுவில் சொல்லத் தயங்கினால் abi.idi.0603@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
என்னை எழுதத் தூண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், ப்லாக் ஆரம்பித்துத் தந்த மகேஷிற்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சரி. ரொம்ப மொக்கப்போடுறேன். வாங்க எல்லாரும் சாப்பிடப் போகலாம். “ஒரு மாசத்துக்கே இந்த அக்கப்போரு பண்றாங்களே. இன்னும் ஒரு வருஷம் பல வருஷமெல்லாம் ஆனா நாமெல்லாம் என்ன கதிக்கு ஆளாவோமோ. கடவுளே, இதைக் கேட்பாரே இல்லையா!” என்று பாஷா புலம்ப அனைவரும் சிரித்துக்கொண்டே சாப்பிடச் சென்றனர்.
மட்டன் பிரியாணி, வெஜ்பிரியாணி, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, தயிர் பச்சடி எல்லாம் மணக்க மணக்க அவர்களை வரவேற்றது.

பின் குறிப்பு:
என்னை நானே பன்மையில் சொல்வது நீங்கள் உங்கள் கருத்துகளில் என்னை அப்படி குறிப்பிடுவதால் மட்டுமே.

27 comments:

  1. அபி
    வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
    Wishing you more and more success and best wishes and happiness.
    Vidya

    ReplyDelete
    Replies
    1. கற்பனை விழாவிற்கு முதல்ல வந்தமாதிரி கருத்தையும் முதல்ல பதிவு செய்தும் வீட்டுல வெஜ் பிரியாணி செய்தும் என் கற்பனையை கொஞ்சம் நிஜமாக்கிட்டீங்க மேடம். நன்றி.

      Delete
  2. ஆஹா... வலைப்பூ தொடங்கி ஒரு மாதம்! வாழ்த்துகள் அபி. பதிவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா! மகிழ்ச்சி.

    தொடர்ந்து எழுதுங்கள். சில எழுத்துப் பிழைகள் வருவது சகஜம் தான். எழுத எழுத,சரியாகிவிடும். தொடர்ந்து எழுதி பல பதிவுகளை வரும் காலங்களில் எழுதிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி வெங்கட் சார். நேரம் வந்தால் பதிவர்கள் விழாவை நிஜமாக்கிடலாம்.

      Delete
  3. மிகவும் நன்றி... தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார். கற்பனை விழாவிற்கே நன்றியா. உண்மையில் நான் நல்ல நிலைக்கு வரும்போது இந்த விழாவை நிஜமாக்கிடுறேன்.

      Delete
  4. அழைப்பிற்கு மிக்க நன்றி


    பிரியாணி சாப்பிட்ட பிறகுதான்.இன்னும் ஒரு வருஷம் பல வருஷமெல்லாம் இந்த விழா,அரங்கேற வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்...

    ReplyDelete
  5. உங்கள் கனவு விரைவில் ஈடேற இறைப்பேராற்றல் துணைபுரியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஷா. பிரியாணி சாப்பிட்டதும் சாப்பிட்ட மயக்கத்துல எங்க பேசாமல் இருந்திடுவீங்களோன்னு நினைச்சிதான் முன்னாடியே பேச வெச்சிட்டேன்.

      Delete
  6. அபி பிளாக்கின் முதல்மாத பிறந்தநாள் விழாவில் கலந்து விட்டு இப்பொழுதுதான் வீட்டுக்குள் நுழைந்தேன் அதற்குள்.

    அங்கு கண்ட காட்சிகள் பதிவாக... ஆஹா அழகு தொடரட்டும் எழுத்து வீச்சு.

    வாழ்த்துகளுடன் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா கில்லர்ஜி சார். இப்போதான் வீட்டுக்கு போனீங்களா? அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்ததற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  7. வாழ்த்துக்கள் அபி.
    சீக்கிரம் அமேசான்ல புக் பப்ளிஷ் பண்ணு.
    கொரானா தடுப்பூசி பெரும்பாலும் சுதந்திர தினத்தில் வந்திடும்.
    அப்பரம் மூனு மாசம் முடிச்ச வெற்றி விழாவ வச்சு, குவாட்டர் விழாவா வரவங்களுக்கெல்லாம் ஒரு குவாட்டர் குடுத்து கொண்டாடலாம்.
    வாசல்ல சாணட்டைசருக்கு பதிலா வர எல்லா பதிவர்களுக்கும் கொரானா தடுப்பூசி போட்டுவிடு.
    மறக்காம சமைக்கிற மட்டன் பிரியானி ஆட்டுக்கும் கொல்லுரதுக்கு முன் தடுப்பூசி போட்டுட்டுதான் பலி போட்டாய்ங்கன்னு உறுதி செஞ்சுக்க.
    முக்கியமா உனக்கு தடுப்பூசிய நானே வாயிலயே போட்டுவிடுறேன்.
    பதிவு எழுதுர கை பாவம், பொழச்சு போகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அரவிந் சார் போரபோக்குல உங்களுக்கு குவாட்டர் வேணும்னு சொல்லிட்டு போரிங்களே. தடுப்பூசி உங்க வாய்க்குதான் போடணும். என்னடா அரவிந் சார் அமைதியா வாழ்த்துறாரே இது அவரோட பாணியில்லையேன்னு நினைச்சேன். ம். வெரி குட். வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  8. Wow...wat a talent you have abi really amazing happy birthday to abi blog🎂🎂🎂sema kalakureenga...all the best abi for your future progress...god bless you dear...and then don't call me as madam...you just call me as Amutha that's enough abi

    ReplyDelete
    Replies
    1. thank you so much dear amudha. keep reading and give your opinions.

      Delete
  9. வலைப்பக்கம் தொடங்கி ஒரு மாதம்  ஆனதற்கு வாழ்த்துகள்.   அதற்கே எல்லாப் பதிவர்களுக்கும் விருந்து!  சூப்பர்.  பத்தி மட்டும் இன்னும் இடம் விடணும்.

    ReplyDelete
  10. விருந்துக்கு என்னையும் அழைத்திருப்பதற்கு  நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி சார். அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் இடம்விட்டு எழுதுகிறேன். என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  11. அபிநயா நீங்கள் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டதா வாழ்த்துகள்! இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து நீங்கள் வலையுலகில் உலா வந்து அமேசானில் புத்தகம் வெளியிட்டு பல சாதனைகள் படைத்திட வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள்

    எல்லா பதிவர்களையும் குறிப்பிட்டு எங்களையும் விருந்திற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

    துளசிதரன், கீதா

    அபி எல்லாம் ஜூம் லதானே!!! ஹா ஹா ஹா ஹா

    ஃபான்ட் பெரிசாகியிருக்கு. தெரியும் அபி நீங்கள் எல்லாரும் எப்படி எழுதறீங்கன்னு. ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு செய்யலாம். பெரிய விஷயமில்லைமா..

    வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் சார். என் அழைப்பை ஏற்று விருந்திற்கு வந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
    2. நன்றி கீதா மேடம். ஜூம் நான் உபயோகிச்சதில்லை. அதைக் கற்றுகொண்டபின் கண்டிப்பா ஒரு மீட்டிங் வெச்சி பேசுறதை மட்டும் நிஜமாக்கிடலாம். சீக்கிரமே எழுத்தையும் அழகுபடுத்திடுறேன்.

      Delete
  12. நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி பாரதி சார்.

      Delete
  13. அபி, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அனைத்து பதிவர்களையும் ஒன்றுகூட்டி ஓரிடத்தில் சந்திக்க வைத்தமைக்கு நன்றிகள். சமுக இடை வெளி விட்டு அமர்ந்ததால் வலது பக்கம் விசுவும் இடதுபக்கம் அமர்ந்திருந்த திண்டுக்கல் தனபாலையும் தவிர மற்றவர்களுக்கு அமர்ந்த இடத்திலிருந்தே கை அசைத்தும் பெயர் சொல்லி சத்தமாக அழைத்தும் வாழ்த்து சொல்லவேண்டி இருந்தது. பலரும் முக கவசம் அணிந்திருந்தால் எனக்கு யார் அவர்கள் என்றுகூட அடையாளம் காண முடியாமல் இருந்தது, நல்ல வேளை , உங்களின் ஏற்புரையின்போது எல்லோரையும் self introduce செய்ய சொன்னதற்கேற்ப (ஆமாம் நீங்கள் சொன்னீர்கள் , மறந்துட்டீங்களா?) ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் அவர்களது வலைதளத்தின் பெயரையும் சொல்ல அது எல்லோருக்கும் எல்லோரையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.

    முனைவர் ஐயா ஜம்புலிங்கம் , திரு ஸ்ரீராம் அவர்கள் உட்பட, பலரை நேரில் காண துடித்திருந்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    இதுவரை இப்படி யாரேனும் ஒரு(மாத ) பிறந்த நாள் விழாவை இத்தனை சீரோடும் சிறப்போடும் கொண்டாடி இருப்பார்களா?

    திருப்திமகேஷ் திருப்தியிலிருந்து எனக்கு (மட்டும்) லட்டு வாங்கி வந்ததாக சொல்லி ஒரு பெரிய பையை என்னிடம் கொடுத்து சென்றார் ஆனால் அதை மறந்துபோய் நான் அமர்ந்திருந்த அந்த ஒற்றை சீட் சோபாவின் வலது பக்கம் வைத்ததை விமானம் பிடிக்கும் அவசரத்தில் எடுக்காமல் வந்துவிட்டேன் . ஒருவேளை எனக்கு வலதுபக்கம் அமர்ந்திருந்த விசு " ஆட்டையை" போடாதிருந்து அது இன்னமும் அங்கேயே இருந்தால் என் பெயரை சொல்லி ஒரு கட்டு கட்டுங்கள்(வயிறு வலிக்கும்தான்). எனினும் அவசரம் கருதி சாப்பிடாமல் செல்ல இருந்த எனக்கு நீங்கள் பார்சல் செய்து கொடுத்த அந்த பிரியாணியும் எண்ணெய் கத்தரிக்காயும் லண்டனில் வைத்து சாப்பிடும்போதும் சுவையாக இருந்தது.

    டெல்லியில் பல வருடங்களுக்கு முன் திரு வெங்கட்டுக்கு மட்டும் கொடுத்த கீதா மேடத்திடம் எப்போதோ நான் கேட்டிருந்த ஊறுகாயை மறவாமல் எனக்கென்று தயாரித்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து மேலும் பிளாஸ்டிக் கவர் கொண்டு பத்திரமாக பார்சல் செய்து கொண்டுவந்து கொடுத்த அந்த "ஆவக்காய்"ஊறுகாய் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்ததை அவர்களிடம் சொல்லி விடுங்கள்

    தமது அரசியல்?? செல்வாக்கை பயன்படுத்து எல்லோருக்கு E பாஸ் பெறுவதில் உதவியாக இருந்த கில்லர்ஜி அவர்களுக்கு நன்றியுரையில் எங்கள் எல்லோர் சார்பாக நீங்கள் நன்றி சொன்னது (ஆமாம் சொன்னீர்கள்) சிறப்பு.

    இருந்தாலும்…..மகி கேட்டதுபோல் "அபி இந்த கொரோனா நேரத்தில இதெல்லாம் தேவையாடி ?....

    அபி சொன்னதுபோல் , "தேவைதான் மகி".

    Brillent!!!! மீண்டும் வாழ்த்துக்கள். நூறாவது நாளில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆமாம் சார் நாந்தான் அந்த லட்டை சாப்பிட்டேன். ஓசி லட்டு அதுவும் அடுத்தவங்களுக்கு வாங்கிய லட்டா ஆஹா சுவையோ சுவை.

      எனக்கும் உங்க எல்லோரையும் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்.ெங்க அப்பாவுக்கு மாங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். அதுனால கீதா மேடம்கிட்ட மாங்காய் ஊறுகாய்கு அப்லிகேஷன் போட்டுருக்கேன். அவங்க எப்படி உங்க 2 பேருக்கு மட்டும் தரலாம்?
      பாவம் கில்லர்ஜி சார் விழாவிற்கு வர epass வாங்கித் தந்து கஷ்டப்பட்டது மட்டுமில்லாம வீட்டுக்கு ரொம்ப லேட்டா போனாராம். அதுக்குள்ள நான் நடந்ததையெல்லாம் ஒரு பதிவா போட்டுட்டேன்.
      பிரியாணிக்குரிய பாராட்டுக்களை நான் எங்களுக்கு தெரிஞ்ச சமயல்காரர்தான் அவர். அவர்கிட்ட சொல்லிடுறேன்.
      அடுத்தமுறை வரும்போதாவது ஃபாரின் சாக்லேட் வாங்கிட்டு வரணும் மறக்காம ப்லீஸ் சார்.

      ஹா ஹா ஹா ஆனாலும் அதீத கற்பனை சார் உங்களுக்கு. நன்றி நன்றி நன்றிகள்.

      Delete
    2. என்ன இருந்தாலும் உங்களுக்கு இத்தனை ஞாபக மறதி இருக்கக்கூடாது. உங்களை பார்த்து என் பெயரை சொல்லி வணக்கம் கூறி உங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் உங்கள் கைகளில் ஒரு gift ஐ கொடுத்து வாழ்த்துசொன்னேனே, மறந்துட்டீங்களா? அது என்ன gift ? அதுதான் இங்கிருந்து வாங்கி வந்த Cadbury சாக்கலேட் ஐந்துகிலோ எடைகொண்ட சிங்கள் bar. நீங்க கூட பாரம் தாங்க முடியாமல் உங்கள் அருகில் இருந்த மகியிடம் கொடுத்து உள்ளே வைக்க சொன்னீர்களே? ஓடிப்போய் பாருங்கள் , எடுத்து பிரிஜில் வைத்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து சாப்பிடுங்கள்.

      Delete
    3. அச்சோ அதுதானா அது? அதை மகி என்னைத் தவிர எல்லாருக்கும் கொடுத்து சாப்பிட்டுட்டா. நான் கூட விருந்துல வெச்ச குலோப் ஜாமுன்னு நினைச்சேனே. சுவீட்னு சொன்னா நீங்க தந்த சுவீட்னு சொல்லலியே. சரி பரவாயில்லை. எனக்கு மன்ச் கிட்கெட் தான் பிடிக்கும். வேணும்னா நீங்க ஒரு 100 பௌண்ட் என் அக்கௌண்ட்கு அனுப்புங்க வாங்கிக்கிறேன்.

      Delete