Thursday, 21 October 2021

யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல

வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து நான்கு மாதங்களாகுது. படிச்சு எழுதி அதற்கு மேலயே ஆகுது.

இந்த இடைப்பட்ட மாதங்கள்ள எனக்கு வேலை கிடைச்சிருக்கு. ஆன்லைன் ரேடியோ ரேடியோ ப்லாக்‌ஷீப்ல. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை அன்புடன் அபினு கவிதை ஷோ பண்ணேன். கவிதை சொல்லி அதுக்கு தொடர்பான விஷயங்கள பேசுறது. இப்போ ஆடியோ புக்ஸ் போடுற ஷோ குடுத்துருக்காங்க. அது  இன்னும் ஒலிபரப்பாக ஆரம்பிக்கல. ப்லே ஸ்டோர்ல bs value செயலி இன்ஸ்டால் பண்ணி உள்நுழைவு செய்து, மைக் லைவ் ரேடியோனு வரும், கிலிக் பண்ணா ரேடியோ பேனர் ப்லே இல்ல லைவ் ரேடியோ வரும். அத கிலிக் பண்ணனும். சர்வதேச உரிமம்.

சின்ன சின்ன மின்மினிகள் என்ற மின்நூல் வெளியிட்டேன். கவிதை தொகுப்பு. கூகுல்மீட்ல ஒரு சிறிய விழா நடத்தி வெளியிடப்பட்டது. அதன் அமேசான் லின்க் கீழே.

சின்னச் சின்ன மின்மினிகள்


முதல்ல ஒரு பழைய ஃபோன் வாங்கி தொலைச்சிட்டு மறுபடி புது ஃபோன் வாங்கியிருக்கேன். கிலப்ஹௌஸ், அலுவலகம்  மூலமா நிறைய புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. சொல்லிக்கிற அளவு இதுதான் நடந்தது.

கிலப்ஹௌஸ்ல அறிமுகமான ஒரு நண்பரின் கவிதையோடு இந்த பதிவை முடிக்கிறேன்.


யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல 


என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது


எவனோ ஒருவன் போல் நான்

அமர்ந்து கொண்டிருக்கிறேன்


தாடி வளர்க்கும் வயதும் இல்லை

போடி என்று சொல்ல மனமும் இல்லை..


என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்


அவரோடு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்கிறாள்


கன்னத்தில் முத்தமிட மறுத்தவள்


அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டுக்

கொண்டிருக்கிறாள்


அழகான கூரைப் புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்

இருக்கும் நெற்றியில்

நெற்றிச்சுட்டி


நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்


அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது


அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை

அணிந்திருக்கிறாள்


அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல


யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள்


இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்


ஏமாந்தவன் எதிரிலே இருக்க


இன்னொருவனுடன் உனக்குத் திருமணம்


இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்து விட்டு எரிகிறது


அவள் கழுத்திலே தாலி கட்டப் போகும் கணவன் இருக்கிறான் பாசத்தோடு


உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்

கங்காராஜ் MA. B.ED. MPHIL

     

9 comments:

  1. புதிய வேலைக்கும், புதிய மொபைலுக்கும் மின்னூலுக்கும் வாழ்த்துகள். கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  2. சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. வாழ்த்துகள்.

    புதிய வேலை - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் அபி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி அரவிந்த் சார்

      Delete
  4. உங்கள் கவிதை மிகவும் படிப்பதற்கு அருமையாகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் வேலை உங்களுக்கு வெற்றி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் படைப்புகளை மேலும் தாருங்கள் உங்களுடைய அனுபவங்களும் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முனீஸ்வரன் சார் வருகைக்கு நன்றி

      Delete
  5. அபி ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். நாங்களும் பதிவுலகம் வராமல்தான் இருந்தோம் இப்போதுதான் வருகிறோம்....புதிய வேலை + புதிய மொபைல் + மின் நூல் எல்லாவற்றிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    கவிதையை ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete