Sunday 21 June 2020

மேதையின் சைக்கிள் பயணம்.



தந்தையர் தினத்தை முன்னிட்டு ராஜுவின் மகள் நாகேஷ்வரி அவருக்கு ஒரு சைக்கிளைப் பரிசளித்து வாழ்த்தினாள்.
சாவியைக் கையில் வாங்கியபோது அந்தச் சாவி கணமாக இருப்பதுபோல் அவருக்குத்  தோன்றியது. அது சாவியின் கணமா அல்லது சாவியைப்பிடித்திருக்கும் இதயத்தில் சுகமாய் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளின் கணமா என்பதை அந்த இரு இதயங்கள் மட்டுமே அறியும்.
“அப்பா, என் பரிசு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” “என்னம்மா! இந்தக் கேள்வியை நீ கேட்கலாமா? பதில் தெரிந்தக் கேள்வியைக் கேட்டு நேரத்தை வீணடிக்காதே. தயாராகி வா. இருவரும் இதில் ஏறி ஒரு பயணம் சென்று வரலாம்.” இப்படிச் சொல்லும் அந்த மனிதரின் வயது 60ஐ கடந்திருக்கும்.
இருவரும் தயாராகி வெளியே வந்துச் சைக்கிளில் ஏறி அமர்ந்தனர். பெடலில் காலை வைத்து அவர் மிதிக்கத் தொடங்க அடுத்த அடி எடுத்து வைக்காதபடி நினைவுகள் அவரைத் தடுத்து நிறுத்தியது.
பல வருடங்களுக்கு முன்:
தன் மகளை பேருந்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்த ராஜு சைக்கிள் கடையில் நல்ல சைக்கிளாக வாங்க வேண்டுமென்று சைக்கிள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்றுதான் அவர் மகள் பள்ளிக்கு செல்லும் முதல்நாள். முதல்நாளே அவர் மகள் பேருந்தில் ஏற கஷ்டப்படுவதையும், அவளுடன் ஏறும் பயணிகள் அவளை ஏறமுடியாதபடி தடுமாறவைப்பதையும் பார்த்தவர் இனி ஒருநாள்கூட தன் மகள் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தார்.
 அவளை யாரும்  தொந்தரவு செய்யமுடியாதபடி பார்த்துக்கொள்ளவும்,  தன் மகளை தானே சுமக்கவும்   இந்த இரண்டுச் சக்கரக் காரை வாங்குகிறார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்து, குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி, ஒரு கடையில் உடைகளுக்குப் பொத்தான் தைக்கும் பையனாக  வேலையில் சேர்ந்து, தொழிலைக் கற்றுக்கொண்டு தையல்காரராக உயர்ந்திருக்கும் அவருக்கு இது நிச்சயம் கார்தான்.
ஏழுரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் இப்போதுதான் பலநூறுகளையும், சில ஆயிரங்களையும் பார்க்கிறார்.
சைக்கிளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். “ஏற்கனவே இடுப்புவலின்னு சொல்றீங்க. மருந்துச் சாப்பிடுறீங்க. இதில் நாளெல்லாம்உட்கார்ந்தபடி மெஷினை   மிதிக்கனும். கத்தரிப்பிடிச்சி துணி வெட்டனும். வயசு நாற்பதாகப்போகுது. இவ்வளவு கஷ்டத்துல உங்கப்பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டுப்போகனுமா? உடம்பு என்னாகுறது.  பஸ்ல போக அவ  பழகிடுவா. வேண்டாமே” என்றார் அவர் மனைவி.
அவர் மனைவியின் பேச்சைக் கேட்பதாக இல்லை. மறுநாள் பயணத்திற்கு தன்னையும் தன் சைக்கிளையும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய மகளுக்கு ஒரே சந்தோஷம். அவர் எதிர்பார்ப்பதும் அதைத்தானே.
மறுநாள் அவரின் சைக்கிள் பயணம் இனிதே தொடங்கியது. மெஷின் பெடலை மிதித்தக் கால்கள் சைக்கிள் பெடலை மிதிக்கத் தயாராயின. கத்தரிப்பிடித்து காப்புக்காய்ச்சியிருந்தக் கைகள் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டிருந்தன.
பின்னால் அமர்ந்திருந்தவள் விழாமலிருக்க  அவள் அப்பாவைப் பிடித்துக்கொண்டாள். பயணம் தொடங்கிய இடம் நந்தனம் ஹௌசிங் போர்டிலிருக்கும் ஐந்தாவது மெயின் ரோடு. சென்று சேர வேண்டிய இடம் ஜெமினி பிரிட்ஜிற்கு பக்கத்திலிருக்கும் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி.
சைக்கிள் ஓட ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் கடந்ததும் தன் மகளிடம் இது சர்ச் என்று வந்திருக்கும் இடத்தை விளக்கினார். சிறிது தூரம் சென்றதும் இது சிவாஜி வீடு என்றார். இப்படியே அவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து பள்ளி சென்று சேரும்வரை வழியில் கடந்து செல்லும் இடங்களையெல்லாம் அவளுக்கு விளக்கிக்கொண்டே சென்றார்.
அவளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். இப்படித்தான் அவர்களின் ஒருநாள்  பயணம் இருக்கும். மாலையில் பள்ளி வாசலுக்கே பேருந்து வருவதால் அவள் அன்னை அழைத்து வந்துவிடுவார்.
பயணத்தின்போது அவருக்கு அவர் பெண்ணிடம் பேசிக்கொண்டே வரவேண்டும். ஒருநாள் அவள் முகத்தைத் தூக்கிக்கொண்டால் அந்தப் பயணமும் அன்றைய நாளும் அவருக்கு கசந்துவிடும். அதற்காக அவர் மகளின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை நிரைவேற்றிவிடுவார்.
அவர்களின் ஆத்மார்த்தமான பாசத்திற்கு சாட்சி பழைய பாடல்கள். கண்ணதாசன் வரிகளும் சௌந்தராஜன் சுஷீலா குரல்களும்தான் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவள் கண்விழிப்பதும், இரவு கண்மூடி உறங்குவதும் அந்தப் பாடல்களைக் கேட்டபடிதான்.
பயணத்தின்போதும் ராஜு மகிழ்ச்சியாக அந்தப் பாடல்களை தன் மகளின் காதில் கேட்கும்படி முனுமுனுத்தபடி செல்வார்.
 வீட்டுச்சூழல், வேலைப்பளு, கடன் சுமை, பிள்ளைகளின் எதிர்காலம், உடல்நலக்குறைவு இவையனைத்தையும் மறந்து முகத்தில் புன்னகையோடும் மனதுக்கு நிம்மதியோடும் அவர் பயணிக்கும் அழகான தருணமது.
பள்ளிக்குள் சென்று இறங்கும்போது, அவர் மகள் அவர் கையைத் தொட நேரிடும். அப்போது அவள் தன் கைகளில் வியர்வையின் பிசுபிசுப்பையும் ஈரத்தையும் உணர்வாள். ஓர் உழைப்பாளியும் பாசவெறி கொண்ட மனிதனுமான தன் தந்தையின் உன்னதத் துளிகள் அவை என்பதை அந்தப் பேதை நெஞ்சமும் புரிந்துக்கொள்ளும்.
எப்போதாவது அவர் மாலையில் அவளை அழைக்க வரும்போது வழியில் இருக்கும் தேனீர்கடையில் அவளுக்கு காஃபி பட்டர்பிச்கட்வாங்கிக்கொடுத்துவிட்டு அவரும் தேனீர் அருந்திவிட்டு அழைத்து வருவார்.
அவர் மகள் மதிய உணவை மறந்துவிட்டு வரும்போதும், கோபத்தில் சாப்பிடாமல் பிடிக்காதச் சாப்பாட்டை வீட்டில் விட்டுவிட்டு வரும்போதும், மதிய வேளையில் வெயிலைப் பொருட்படுத்தாமல், சைக்கிளில் பள்ளிக்கு வந்து அவளுக்குப் பிடித்த உணவை வாங்கிக்கொடுத்துவிட்டுச் செல்வார்.
காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் சைக்கிளில் பள்ளிக்கும் வீட்டிற்கும் மாறி மாறிச் சென்ற நாட்களும் உண்டு.
சிலநேரம் அவர் மகள் தூங்கிக்கொண்டே வருவாள். அப்படி அவள் தூங்கி வழியும் வேளையில், அவள் விழாதபடி தன்னையும் தன் சைக்கிளையும் பேலன்ஸ் செய்வார். அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சைக்கிளை ஓட்டுவார்.
அவள் தூங்காமலிருக்க அவளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே வருவார். குறிப்பாக பள்ளியில் நேற்று நடந்ததைப்பற்றியும், இன்று நடக்கப்போவதைப்பற்றியும் கேட்பார். “இதோ வந்துடிச்சும்மா. இன்னும் கொஞ்ச தூரம்தான். தூங்காதே.” என்று அன்பாகச் சொல்வார்.
பந்தபாசத்தைத் துறந்து கன்னியாகவே வாழ்ந்து உலகிற்கு சேவை புரிவோம் என்று உறுதிகொண்ட நெஞ்சங்களிலும் பாசத்தின் ஈரத்தைச் சுறக்கச் செய்தப் பயணமது.
அவள் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைத் தைத்தும், அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு உடைகள் தைத்தும் தன் தொழிலில் முன்னேறினார்.
பெண்களை மரியாதையுடன் பார்க்கும் அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவரின் பாசத்திற்காகவே அவரை மதித்தனர்.
அவர் மகளை டெய்லர் மகள் என்று கொண்டாடினர். தன் மகளைப்போல் மற்றவரையும்    பாசத்தோடு வருடும் அவர் குரலும் செய்கையும் அங்கு படிக்கும் மாணவமாணவிகளை பெரிதும் கவர்ந்தது. அங்க்கிள் அங்க்கிள் என்று அன்போடு அழைத்தனர்.
ஒருநாள் அவர் மகள் தான் கவிதைப் போட்டியில் கலந்திருப்பதாகவும், ஒரு கவிதைச் சொல்லித்தர வேண்டுமென்றும் அவரைக் கேட்டாள். 5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர்,  அவள் பள்ளியில் இருப்போரால் அவருக்குக் கிடைத்த நன்மைகளை வைத்து, ‘வானம்தான் எங்கள் பள்ளி அதிலிருக்கும் நட்சத்திரம்தான் எங்கள் ஆசிரியர்கள்’ என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொடுத்தார்.
அவள் அந்தக் கவிதையைச் சொல்லி இரண்டாம் பரிசைப் பெற்றாள். அடுத்தமுறை கவிதைக் கேட்டபோது அவளையே எழுதிக்கொள்ளச்சொல்லி அவள் கவித்திறனைத் தூண்டிவிட்டார்.
மேடையில் பேச வேண்டியவற்றை அவள் ஆசிரியர்கள் அவளுக்கு எழுதிக்கொடுப்பார்கள். அவள் அப்பா அதைப் படித்து அவளுக்குச் சொல்லிக்கொடுப்பார். தங்குத் தடையின்றி அவள் பேசிக்காட்டும்வரை அவளை திரும்பத் திரும்பச் சொல்ல வைப்பார்.
தமிழ்தான் அவருக்குப் படிக்கமுடியும். ஆங்கிலப் பேச்சையும் அவளைப் பேசச் சொல்வார். அதையும் அவள் தடையில்லாமல் சொல்ல வேண்டும். இலக்கணப்பிழை வராமலும், ஒரு வரியைக்கூட  விடாமல் பேசவும் அவள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேடையில் பேசும் நாளன்று, அவள் பேசிமுடித்து மற்றவரிடம் கைத்தட்டல்களும், வாழ்த்துக்களும் வாங்கும்வரை நின்று பார்த்துவிட்டு தன் சைக்கிளில் வீடு திரும்புவார்.
பரிட்சை நேரங்களில் சைக்கிளில் பயநிக்கும்போது, “இன்னைக்கு என்னம்மா பரிட்சை?” ”தமிழ்.” “படிச்சியா?” “படிச்சேன்.” “நல்லா எழுதுவியா?” “ம்.” “நீ எழுதிடுவம்மா என் பெண்ணாச்சே.” இப்படித்தான் இவர்களின் உரையாடல்கள் இருக்கும்.
ஏதோ ஒருநாள் அவள் அப்பா அதைக் கேட்காவிட்டால் அவளுக்கு அந்தப் பரிட்சை நன்றாக இருக்காது. அதை அவள் அப்பாவிடமும் சொல்வாள். அவரும் அதைப் புரிந்துகொண்டு  மறக்காமல் கேட்டுவிடுவார். மறக்கும் சமயங்களில் மனதுக்குள் கேட்டுக்கொண்டதாக மகளிடம் சொல்வார்.
இவர்களின் சைக்கிள் பயணம் 13 வெயில் காலங்களையும், 13 மழைக்காலங்களையும் 13 குளிர் காலங்களையும் சந்தித்திருக்கிறது. படிப்பில் பெண்ணவள் மனம் சலித்து விடுமுறை எடுத்தாலும் தந்தையவர் உடல் சலிக்காமல் விடுமுறைகளை தவிர்த்துவிட்டு அழைத்துச் செல்வார். ஒருநாள்கூட அவள் தாமதமாக செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கடைசிவரை அதைக் கடைபிடிக்கவும் செய்தார்.
ப்லஸ்டூ படிக்கும்போது அவள் படிப்பிற்காக ஹாஸ்டலில் சேர்ந்தாள். வாழ்க்கைநிலையில் ஏற்பட்ட மாறுதல்களாலும் வயது மூப்பினாலும் அதற்குமேல் அவர்களால் அந்த சைக்கிள் பயணத்தைத் தொடர இயலவில்லை.
பல வருடங்கள் கழிந்தும், அந்தப் பல வருடங்களில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் வந்தபோதும், அந்த நினைவுகள் மட்டும் அவர்கள் இதயத்தில் பசுமையாய் இருக்கிறது.
அவர் சைக்கிளைவிட்டு இறங்கினார். அவளும் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள். அவர் மகள் அவருக்குப் பரிசளித்தப் பொக்கிஷத்தைப் பத்திரமான இடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு அவரும் உள்ளே சென்றார்.
வாழ்க்கையில் இழந்துவிட்டப் பருவங்களையும், கடந்துவிட்டத் தருணங்களையும்  மீண்டும் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அந்த நினைவுகளின் கணமும், ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பும்,  சோகம் கலந்த சுகமும் குறைந்து காணாமல் போய்விடும்.
அதனால்தான் நம்மிடமிருந்து எது பரிக்கப்படுகிறதோ, அது அதுவாகவே திரும்பக் கிடைப்பதில்லை.
இவர்களுக்கும் தங்களின் நினைவுகளின் கணத்தைக் குறைக்கவோ இறக்கி வைக்கவோ விருப்பமில்லை.
வாழ்நாள் முழுதும் அந்த நினைவுகளின் பாரத்தைச் சுகமாய் சுமக்க நினைக்கிறார்கள்.
சுமக்கட்டுமே!
பின் குறிப்பு:
இந்தக் கதையை என் தந்தைக்கும், அவரைப்போலவே பிள்ளைகள் மேல் பாசத்தைப் பொழியும் அனைத்துத் தந்தையர்க்கும் சமர்ப்பிக்கிறேன்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

40 comments:

  1. அபி
    அற்புதம். தந்தை மகள் பாசம் தான் உலகத்தில் சிறந்தது.
    வித்யா

    ReplyDelete
  2. அபி, முடியல தல சுத்துது.. நவீன் டொஸ்..

    ReplyDelete
  3. இன்றைய நாளுக்கு ஏற்ற நெஞ்சை கணக்கச் செய்த கதை.
    இன்று பாட்ஷா படம் பார்த்துக்கொண்டிருந்தபோது 25 வருடங்களுக்கு முன் என் தந்தையுடன் திறையரங்கம் பார்த்த நியாபகம் வந்தது.
    வாலிப வயது வந்தால் சண்டையிட தொடங்குவான் என்று பயந்தோ என்னவோ என் தந்தை என் 17 வயதிலேயே காலமானார்.
    அணைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் கதையை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அரவிந் சார். யார் சொன்னது உங்கள் தந்தை இறந்துவிட்டார் என்று. பாட்ஷா படம் பார்க்கும்போது அவருடன் படம் பார்த்தது நினைவுக்கு வந்தது என்றீர்களே அந்த நினைவுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவருடன் வாழ்ந்தக் காலங்களின் சாட்சியாய் எதுவெல்லாம் இருக்கிறதோ. எதையெல்லாம் நீங்கள் நினைத்துப்பார்க்கிறீர்களோ. அந்த நினைவுகளில் அவர் வாழ்ந்து உங்களை வழிநடத்துகிறார். வருந்த வேண்டாம்.

      Delete
    2. ஆம் உண்மை. மிக்க நன்றி.

      Delete
  4. No one can replace our father's place...lovely article...very nice keep rocking abinaya

    ReplyDelete
  5. கதையைப் படித்தேன் அது எனக்கு கதையாகத் தோன்றவில்லை! உங்களுடைய கதையில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது, அதேசமயம் சுவாரசியமாகவும் இருக்கின்றது எனவே இத்தோடு நில்லாமல் உங்கள் எழுத்துக்கள் வழியே நல்ல நல்ல படைப்புகளை தர வேண்டுமாய் வாழ்த்துகிறேன் தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படித்து உங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

      Delete
  6. முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் படைத்த அற்புதமான படைப்பை இப்போது தான் என்னால் படிக்க முடிந்தது என்ன ஒரு அற்புதம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படித்து உங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

      Delete
  7. தொடரட்டும் உங்கள் பதிவுகள்அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்|றி சார். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete
  8. நெகிழ்ச்சியான நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  9. தந்தை - மகள் பற்றிய பாசஉறவை விக்கிய விதம் அருமை வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  10. கதையல்ல நிஜம்...

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். கதையல்ல நிஜம். அதனால்தான் கொஞ்சம் நன்றாக இருக்கிறதுபோல.

      Delete
  11. மறக்க முடியா நினைவுகள்....

    தந்தையர் தினத்தில் சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். மறக்க முடியாத நினைவுகள்தான். என் தந்தையும் இதைப் படித்துவிட்டு அழுதுவிட்டார்.

      Delete
  12. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் மேடம் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. அட! என்ன தம்பி மரியாதையெல்லாம் பலமா இருக்கு? ம். பரவாயில்லை. நன்றி.

      Delete
  13. heart touching post, convey my wishes and regards to your Father. keep up the lovely work.

    ReplyDelete
    Replies
    1. sure. fernando. i will convey your wishes. thank you so much.

      Delete
  14. அருமையான கதை. மனதை நெகிழ்த்தியது. இது போன்ற பொக்கிஷமான நினைவுகள், அனுபவங்கள் ஒவ்வொரு மகளுக்கும் தந்தைக்கும் இருக்கும். வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. துளசிதரன் சாருக்கும் கீதா மேடமிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete

    2. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. என்னை பிரிந்து ஆனது ஆண்டுகள் பல.

      உங்களது "அபியும் நானும்" சிறப்பு.

      Delete
    3. மிக்க நன்றி சார்.உங்கள் தந்தை உங்களை நிழலாய் தொடர்ந்து வழிநடத்துவார். என்றும் உங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

      Delete
  15. தந்தையர் தினத்தன்றே பதிலுரை எழுத முயன்றபோது அலைபேசி ஒத்துழைக்கவில்லை. மண்ணிக்கவும். இப்போது மடிக்கணினிதான் எனக்கு மதிப்பு தருகிறது. மூன்றாவது நபர் பானியில் கதையை நீங்கள் செதுக்கியவிதம் ஒன்றை மட்டும் தெளிவாக எனக்கு புரியவைத்துவிட்டது. தொடர்ந்து எழுதினால் உங்களை இந்த உலகம் நிச்சையம் கொண்டாடும் என்பதுதான் அது. நம்மிடமிருந்து எது பரிக்கப்படுகிறதோ, அது அதுவாகவே திரும்பக் கிடைப்பதில்லை.
    என்ற வார்த்தையில் உங்களின் எழுத்தின் முதிர்ச்சி தெரிகிறது. கதையின் போக்கு அழகாகவும் சொல்லியவிதம் அற்புதமாகவும் இருக்கிறது. எனது இந்த பதிலுரையை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். எங்காவது குறித்துவைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விடாமல் தொடர்ந்து இது போன்ற நல்ல படைப்புகளை சிறப்பான முறையில் தருவதன் மூலம் ஒருநாள்... நிச்சையமாக ஒருநாள்... அது நடக்கும்போது சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் தொடர்ந்து நல்ல படைப்புகளைக் கொடுக்க முயர்ச்சிக்கிறேன்.

      Delete
  16. Latha Tr.
    அருமையான படைப்பு.
    உன் பேச்சு திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இப்போது உன் எழுதும் ஆற்றலை கண்டு வியந்து போனேன்.
    Super Nageswari or should I call you Abinaya? Very touching real life incidences have been recalled vibrantly as you walked down the memory lane.
    A fitting tribute by a grateful daughter to her loving father. I am proud of you my Student. I am sure your father is too. God bless you! Keep going.��
    Convey my wishes to your father.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டீச்சர். உங்கள் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். உங்கள் மாணவியாக இருப்பதில் பெருமையடைகிறேன். என்னை உங்களுக்கு எப்படிக் கூப்பிடத் தோன்றுகிறதோ அப்படிக் கூப்பிடுங்கள். உங்கள் வாழ்த்துக்களை என் தந்தைக்குத் தெரிவிக்கிறேன்.

      Delete
  17. வணக்கம் மேடம் உங்களது இந்த படைப்பானது என்னை வியப்பில் நிகழச் செய்தது அன்புள்ள இரண்டாம் ஆண்டு மாணவன் ஆகிய முனிய பிள்ளை விருதாச்சலம்

    ReplyDelete
  18. வணக்கம் மேடம் எனது பெயர் முனிய பிள்ளை இரண்டாம் ஆண்டு இளங்கலை நீங்கள் எழுதிய இந்த கட்டுரையின் இந்த கருத்தானது என் மனதை நெகிழச் செய்தது தொடரட்டும் உங்களது பயணமானது நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.

      Delete
  19. SHYAMALA SMART15 July, 2020 16:49

    மூடை சுமந்து குடும்பத்தை தாங்கி,
    மிதிவண்டி மிதித்து என்னை அறிவுத்தேடலுக்கு உட்படுத்தி,
    எனது அசைவுகளில் இன்பம் கண்ட
    எனது தந்தையின் நினைவுகள் நிழலாடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. thank you shyamala. i dont know what to say for this comment. but your father will be always with you and your happiness.

      Delete