வணக்கம் நண்பர்களே.
குழந்தையோட பிடிவாதம் சிலநேரம் நல்லது. சிலநேரம் கெட்டது. இது எல்லாருக்கும் தெரியுமே. ஆனா இந்தக் குழந்தையோட பிடிவாதத்த எதுல சேர்க்கிறது தெரியல. முடிஞ்சா
நீங்க கண்டுபிடிங்க.
ஒரு பாப்பா யூ.கே.ஜி. படிச்சது. அவளோட ஸ்கூல்ல ஸ்போட்ஸ்டே வந்தது. அன்னைக்குன்னு பார்த்து அவ அம்மா அவளுக்கு நல்ல சில்க் கௌன் போட்டு அழகா மேக்கப் பண்ணி வெச்சிருந்தாங்க.
இன்னும் கொஞ்சம் மேக்கப் பண்ணிவிடவும் சாமி கும்பிடவும் அவளோட பெரியம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாங்க. அந்தப் பெரியம்மாவோட மாமியாருக்கு திதி.
சாமி கும்பிட்டு எல்லாரும் சாப்பிட்டாங்க. அந்த குட்டிப்பாப்பாக்கும் சாப்பாடு கொடுத்துட்டு, அவளை விளையாட விட்டுட்டு சமையல் அறையில அவ அம்மாவும் பெரியம்மாவும்
பேசிகிட்டு இருந்தாங்க. பெரியம்மாவோட மூனாவது பையன் ஹால்ல டீவி பார்த்துட்டு இருந்தார். பூஜையறையில ரெண்டு பெரிய குத்துவிளக்கு எரிஞ்சிட்டிருந்தது.
இந்தக் குட்டிப்பாப்பா மெதுமெதுவா பூஜையறைக்குள்ளப் போய் சாமி கும்பிடுறேன்னு தன் கௌனை குத்துவிளக்குல காட்டிடிச்சு. சில்க் கௌன் இல்லையா? பத்திக்கிச்சு. ஆனா
அப்படி பத்திக்கிட்டது தெரியாமலே அந்தப் பாப்பா ஹாலுக்கு வந்து சுவரோரமா திரும்பி விளையாடிட்டு இருந்தது.
அதுக்கு போரடிச்சதோ இல்ல ஏதோ தோணியதோ ஹால்ல இருந்த அவ அண்ணாவை கூப்பிட்டது. கூப்பிட்டக் குரலுக்கு திரும்பியதும்தான் தெரிஞ்சது அந்தப் பாப்பாக்கு தீப்பிடிச்சது.
ஐயோ! அம்மா! வாங்க பாப்பாவுக்கு தீ பிடிச்சிடிச்சுன்னு கத்திக்கிட்டே தன்ன் கையிலத் தொட்டு அணைக்கப் பார்க்க அவர் கையிலையும் கொஞ்சம் நெருப்பு.
அவ அம்மாவும் பெரியம்மாவும் அலரிக்கிட்டு வந்து எப்படியோ கஷ்டப்பட்டுத் தீயை அணைச்சிட்டாங்க. ஆனாலும் கை கால்ல தீக்காயம் லேசா ஏற்பட்டுடிச்சு. அவ அம்மா அவளை
மடியில உட்காரவெச்சுகிட்டு அழறாங்க.
அந்தப் பாப்பாவுக்கு மனசுல என்னத் தோணிச்சுத் தெரியுமா? சே சாயங்காலம் ஸ்போட்ஸ்டேக்கு போகனுமே. இப்படி ஆய்டிச்சேன்னு யோசிச்சது. அவளோட அப்பாவும் வந்தார்.
நேரம் கடந்து சாயங்காலமாச்சு. நான் ஸ்போட்ஸ்டேக்குப் போயே ஆகனும்னு பிடிவாதம் பிடிச்சது. சமாளிக்கவே முடியல. அவளோட அப்பா அவ எது கேட்டாலும் செய்வார். அப்படித்தான்
அவளை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப்போனார்.
பிரின்சிபல்கிட்ட விஷயம் சொன்னாங்க. அவங்களும் கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்தாங்க. நான் ஸ்போட்ஸ்டேல ஓடியே தீருவேன்னு சொல்லிடிச்சு. வேற வழியில்லாம ஒரு டீல் பேசப்பட்டது.
நீ ஓட வேண்டாம். வேற ஒரு பொண்ணை ஓடவெச்சு அவ வின் பன்ற பரிசை உனக்கு தரசொல்றேன் சொன்னாங்க.
எப்படியோ பரிசு கிடைச்சா போதும், நான் ஸ்போட்ஸ்டேல கலந்துகிட்டா போதும்னு புரியாத வயசுல அந்த டீலுக்கு ஒத்துக்கிச்சு. அதன்படி அவ வகுப்புல படிக்கிற ஒரு அப்பாவிப்
பொண்ணை ஓடவெச்சாங்க. மேடையில எல்லோர் முன்னாடியும்வாங்கினப் பரிசை அந்தப் பெண் இவளுக்கு விட்டுக்கொடுத்துடிச்சு. இந்தக் குட்டிப்பாப்பாவும் சந்தோஷமா வாங்கிகிச்சு.
விட்டுக்கொடுத்து வாங்குற வெற்றி தவறுன்னு அப்போ பாவம் அதுக்குப் புரியல. நாம வாங்குற பரிசை விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு அந்த அப்பாவிப் பொண்ணுக்கும் புரியல.
இந்தப் பாப்பா நான்தான்னு உங்களுக்கு இன்னுமா புரியல?
அபி, நீ தான் அடுத்த போர்ல சகுனியா இருப்பேன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteசகுனிய கூட 18 ஆவது நாள்ள போட்டு தள்ளிடுவாய்ங்க. இவ மத்தவங்கள தனக்காக போரிட்டு அவங்க ரத்தத்த கொண்டுவந்து கூந்தல்ல பூசச் சொல்லிட்டு தூரத்தில சேஃபா உக்காருர திரௌபதியா மாரிடுவா.
Deleteஹா ஹா ஒரு பச்சக்குழந்தையைப் போய் சகுனி த்ரௌபதி சொல்றீங்களே. தப்பு. தப்பு. தோப்பு கரணம் போடுங்க.
Deleteஅபி
ReplyDeleteஅற்புதம். Your childhood memory but you had burns is making me feel sad
அட! என்ன மேடம் எப்பவோ நடந்ததுக்கு இப்ப ஃபீல் பன்றீங்களே. விடுங்க. கவலை வேண்டாம்.
Deleteநீங்கள் தான் அந்தப் பாப்பாவாக இருக்கும் என்று தெரிந்துவிட்டது!!
ReplyDeleteதுளசிதரன்
கீதா
நன்றி. கண்டுபிடிச்சிட்டீங்களே. அதாவது நீங்களாவது என்னைப் பாப்பான்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. மேலே எனக்குக் கொடுக்கப்பட்டப் பெயர்களைப் பாருங்க. என் சின்ன மனசு வலிக்கிது.
Deleteமகிழ்ந்ததில் நிறைவே...
ReplyDeletethank you sir
Deleteஆனாலும் பாவம் அந்த கோஸ்ட் ரன்னர்!
ReplyDeleteஅப்போ எனக்குத் தெரியல. இப்போ நினைச்சா பாவமாதான் இருக்கு.
Deleteஓடிப் பரிசு பெற்றும் வைத்துக் கொள்ள முடியாத அந்தப் பெண் பாவம். சிறு வயது குறும்புகள் இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி தான். தொடரட்டும் பதிவுகள்.
ReplyDeleteஉண்மைதான் சார். நினைக்க நினைக்க இனிக்கும் விஷயங்கள். கண்டிப்பா பதிவுகள் தொடரும்.
Deleteஅது அறியாத வயசு..
ReplyDeleteஇப்ப திருந்திட்டீங்கல்ல...
Deleteகுறும்பு செய்வேன். ஆனா அடுத்தவங்கள ஹர்ட் பண்ணமாட்டேன். அந்த விஷயத்துல திரிந்திட்டேன்.
எழுத்துருவை கொஞ்சம் பெருசாக்கலாமே!
ReplyDeleteஅடுத்தப் பதிவில் பெருசாக்கிடுறேன். நன்றி மேடம்.
Deleteகுத்துவிளக்கிற்கு என்ன ஆச்சி பாப்பா .
ReplyDeleteமகா நடிகன் படத்தில் சத்யராஜை பார்த்து ஒரு இயக்குனர் ஒரு கதை சொல்லுவார் அதுல அந்த குழந்தையை நீங்கதான் சார் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு
நீ என்னோட பள்ளித்தோழன். 5ஆம் வகுப்புவரை. யூகேஜில நடந்ததே ஞாபகம் இருந்தா அதுக்கப்புறம் நடந்ததும் ஞாபகம் இருக்கும். இப்படி குத்துவிளக்குக்கு என்னாச்சு. ஃபேனுக்கு என்னாச்சு கேட்டா. அடுத்த பதிவுல உன் இமேஜை டேமேஜ் பண்ணிடுவேன்.
Deleteஅருமையான பதிலடி கொடுக்க மனம் துடிக்கிறது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் மனதையும், கையையும் கற்சங்கிலி மூலம் கட்டிப்போட்டு விட்டது..
Deleteஅது. அந்தப் பயம் இருக்கட்டும்.
Deleteஓ இதற்குப் பெயர்தான் பயமா?
Deletesuper post. realy enjoyed. "விட்டுக்கொடுத்து வாங்குற வெற்றி தவறுன்னு அப்போ பாவம் அதுக்குப் புரியல. நாம வாங்குற பரிசை விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு அந்த அப்பாவிப் பொண்ணுக்கும் புரியல.
ReplyDeleteஇந்தப் பாப்பா நான்தான்னு உங்களுக்கு இன்னுமா புரியல?" ultimate!
ஹா ஹா நன்றி ஃபெர்நாண்டோ.
Deleteகடைசி வரி அற்புதம். ஆனால் இதில் புரியாத இன்னொரு விஷையமும் இருக்கு. அது எனக்கு புரிந்துவிட்டது. எனது ஊகம் சரியாக இருக்குமே ஆனால் அந்தப் பரிசை உங்களது வகுப்புத் தோழி விட்டுக்கொடுக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் விட்டு இருக்க மாட்டார்கள். அந்தக் குழந்தைக்கு என்ன பரிசு கிடைத்ததோ அதே போன்ற பரிசை உங்களுக்கு எடுத்துக்கொடுத்து இருப்பார்கள். மெடலோ டிஃபன்பாக்சோ. எதுவாய் இருந்தாலும் அந்தப் பள்ளியில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வாங்கி வைத்திருப்பார்கள். இப்படி ஏடாகூடமான குழந்தைகள் எங்கிருந்தாவது கிளம்பும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?
ReplyDeleteயாருக்கு தெரியும் இருந்தாலும் இருக்கலாம். பரிசு கிடைச்சதுல்ல அது போதும். என்னை ஏடாகூடமான குழந்தை என்று வர்ணித்ததற்கு நன்றி. என்ன செய்ய? பிறவிதோஷம்.
Delete