7.
அதன்பின் வந்த நாட்களெல்லாம் நிலவினிக்கும் குழந்தைகளுக்கும் வசந்தகாலம்தான். அவளும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டாள். குழந்தைகள் அவள் கைத்தொடும் தூரத்தில் ஓடி விளையாடுவார்கள். யாரேனும் இரு குழந்தைகள் நிலவினியின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி மற்ற குழந்தைகளிடமிருந்து தப்பித்து விளையாடுவார்கள். தமிழழகி வந்தால் அவளை ஒரு வழி செய்துவிடுவார்கள்.
“ஹேய் நிலா நீ குழந்தையா அவங்க குழந்தையாடி. ஏண்டி இப்படி அமர்க்களம் பண்ற? ” என்று தமிழ் கேட்டால், “ம்? அவங்க எனக்கு குழந்தைங்க. நான் அவங்களுக்கு குழந்தை. அப்படிதாண்டி என் பிள்ளைங்க எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கான்க.” என்று சிரிப்பாள். இவர்களைக் கட்டி மேய்ப்பதே ஷெண்பகத்திற்கு சுகமான சுமையாக இருக்கும்.
ஷெண்பகத்திற்கு கணவன் பிள்ளைகள் என்று குடும்பம் இருப்பதால் காலையில் சீக்கிரம் இல்லத்திற்கு வந்து இரவு தாமதமாக வீட்டுக்குப் போய்விடுவார். அப்படியே போனாலும் அவருக்கு குழந்தைகள் நினைப்பாகவே இருக்கும். இப்போது நிலவினி வந்துவிட்டதால் நிதானமாக வந்து சீக்கிரம் சென்றுவிடுகிறார். ஏற்கனவே அங்கு வேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் தாமரை மல்லிகாவோடு நிலவினிக்காக மேலும் இரு பெண்களைப் பணியில் அமர்த்தியிருந்தார் ஷெண்பகம். அவர்கள் நிலவினிக்கு இரவும் பகலும் துணையாக இருப்பர். வெளியில் செகியூரிட்டி இருப்பார்.
விளையாட்டுத்தனமாக இருந்தாலும் நிலவினி தன் தாய்மைக்குரிய கடமைகளிலிருந்து தவறமாட்டாள். சின்னக் குழந்தைகளைக் குளிக்கவைத்து உடை மாற்றி அலங்கரித்துவிடுவாள். அவள் வசதிக்கு ஏற்றபடி மல்லிகா உடைகளை செட் செடாக அடுக்கி வைத்திருப்பாள். அவள் ஊட்டிவிட, குழந்தைகள் சமத்தாக வந்து வாங்கிக்கொள்வார்கள். அன்பாக இருந்தபடியே அழுத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரைகளைப் பதிய வைத்துவிடுவாள். வேலைக்கே போகப் பிடிக்கவில்லை என்று பாசத்தில் சொன்னவள், வேலைக்குப்போய் வரும் சம்பளம் முழுவதையும் குழந்தைகளுக்கே செலவழிப்பாள். ஃபோனில் பாடிய தாலாட்டை நேரில் பாடி தூங்க வைப்பாள். நாளுக்கு ஒரு குழந்தை என முறை வைத்து குழந்தைகளை அவள் மடியில் படுக்கவைத்து தூங்கப் பண்ணுவாள். பக்கத்தில் படுக்கவைத்து அணைத்தபடி அவளும் உறங்கிப்போவாள். படிக்கவைக்க நிலவினி என்றால் எழுதவைக்க ஷெண்பகமும் தமிழும்.
தாய்மை உணர்வு நிலவினிக்கு இருந்தபோதும் தாழ்வு மனப்பான்மையால் அவள் தொலைக்கவிருந்த சந்தோஷத்தை குழந்தைகள் அவர்களின் பாசத்தால் மீட்டுக்கொடுத்துவிட்டனர். அன்று முகிலனின் நினைவுநாள். அனைவரும் அதை விசேஷ சிறத்தையோடு அனுசரித்தனர். நிலவினி இந்த வாழ்க்கையை தனக்குக் கொடுத்த முகிலனுக்கு கைக்கூப்பி நன்றி சொன்னாள். தான் பாதியில் விட்டுச் சென்ற ரோஜாத்தோட்டத்தை செழுமையாக வளர்த்துவரும் நிலவினியையும், அவளை ஏற்றுக்கொண்டு முழுமனதோடு நேசிக்கும் குழந்தைகளையும், நிலவினியை தன் மகளாகவே பார்த்துக்கொள்ளும் ஷெண்பகத்தையும், தோழிக்கு தக்க நேரத்தில் நல்வாழ்வைத் தேடிவைத்த தமிழையும், மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரையும் முகிலன் ஆசீர்வதித்தார்.
மகிழ்வான நிறைவு.
ReplyDeleteதங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.
Deleteசுபமாக இருந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்க நலம்.
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.
Deleteமகிழ்ச்சியான நிறைவு.
ReplyDeleteமுகிலனின் ஆவி இன்னைக்கு இரவு 12 மணிக்கு வந்து உன்னையும் ஆசீர்வதிக்கட்டும்.
மிக்க நன்றி அரவிந் சார். போறபோக்குல ஆவி வரும்னு பயப்பட வைக்கிறீங்களே.
Deleteநல்ல சுபமான நிறைவான முடிவு! வாழ்த்துகள்! பாராட்டுகள்
ReplyDeleteதுளசிதரன்
நல்ல முடிவு அபி. சுபம்!
ReplyDeleteவாழ்த்துகள்.
கீதா
கதையின் முடிவு உங்களுக்கும் பிடித்தமைக்கு மிக்க நன்றி துளசிதரன் சார் கீதா மேடம்.
Deleteமுடிவு நிறைவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.
Delete