எத்தனையோ அடையாளங்கள்!
எடுத்துக்காட்டவே விதம்விதமாய் அட்டை வகைகள்!
சேய் என்று தாய் சொன்னாள்!
செல்வமகள் என்று தந்தைச் சொன்னார்!
பசியாறும் முன்னே பெற்றவர் பெற்றார் என் பிறப்புச் சான்றிதழ்!
சாமிக்கு சான்றிதழில்லை!
சாதிக்கோ சான்றிதழ் ஏராளம்!
குடும்பத்தார் இவரென்று குடும்ப அட்டைச் சொன்னது!
குறைப்பாட்டுச் சான்றிதழும் கூடவே வந்தது!
படிக்கச் செல்லவும் அட்டை வேண்டும்!
பயணம் செய்யவும் அட்டை வேண்டும்!
வாக்கைப் பதிக்கவும் அட்டை வேண்டும்!
வறுமானத்தைக் கணிக்கவும் அட்டை வேண்டும்!
அலுவலகம் செல்லவும் அட்டை வேண்டும்!
ஆயுள் முழுமைக்கும் ஆதார் வேண்டும்!
பெண் இவளென்று இயற்கை சொன்னது!
பேசும் மொழி தமிழென்று சூழல் சொன்னது!
மண் இதுவென்று பாரதம் சொன்னது!
மதம் இந்து என்று மனிதன் சொன்னது!
மனிதம் எதுவென்று யார் சொல்வது?
என் தங்கை இவள் என்று தமயன் சொன்னாலும்,
என் மனைவி இவளென்று கணவன் சொன்னாலும்,
என் தாய் இவள் என்று குழந்தை சொன்னாலும்,
என் பாட்டி இவளென்று பெயரன் சொன்னாலும்,
எழுத்தாளர் இவளென்று நட்பு சொன்னாலும்,
பேச்சாளர் இவளென்று பெருமை கொண்டாலும்,
வானொலித் தொகுப்பாளர் இவளென்று வாழ்த்துச் சொன்னாலும்,
வாழ்வில் நான் ரசிக்கும் அடையாளம் டெய்லர் மகளென்பதே!
இது என் பள்ளி தந்த அடையாளம்!
இன்பத்தை அள்ளித்தந்த அடையாளம்!
இதுவும் ஓர் அடையாளம்!
இதுவே என் அடையாளம்!
Vidya
ReplyDeleteஅருமை.
அடையாளத்தை பெருமையாக ஏற்றுக்கொள்வது சிறப்பான தொடக்கம். அதிலிருந்து மேலும் வளர்ந்து புது சிறந்த அடையாளத்தை உருவாக்குவாய்.
ReplyDeleteமிக்க நன்றி அரவிந் சார்.
Deleteமிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஆஹா... சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அபிநயா. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Delete