Wednesday 29 July 2020

'சிரிங்க, ஆனா சிந்திக்காதீங்க.'

    

வணக்கம் நண்பர்களே.
ரொம்பநாளா நான் உங்களை சிரிக்கவைக்கலை இல்லையா? இன்னைக்கு சிரிக்கலாமா?

நான் முன்னாடி வேலை செய்த அலுவலக எம்டியும் அங்க வேலை செய்த இன்னும் சிலரும் சேர்ந்து எனக்கு கண் பார்வை வரவைக்கணும்ற நல்ல எண்ணத்துல பெயர் சொல்ல விரும்பாத ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்மெண்ட் வாங்கித்தர முடிவு பண்ணாங்க. கொஞ்சநாள் முன்னாடியே எங்களுக்கு தகவல் சொல்லிட்டாங்க. அதுனால எங்க அம்மா ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.

“நல்லா சாப்பிடு இப்பவே. அடுத்த வாரம்லாம் ரொட்டியும் பாலும்தான் சாப்பிடனும்.” அப்படின்னு சொல்ல, அப்பா காரணம் கேட்டார். அதுதான் அவளுக்கு கண் ஆப்பரேஷன் பண்ணப்போறாங்களே ஹாஸ்பிட்டல்ல வேற என்ன கொடுக்குறதுன்னு சொன்னாங்க.


ஹாஸ்பிட்டலுக்கு போகிற நாள் வந்தது.  போனோம். காலையிலருந்து வெயிட் பண்ணி உள்ளப்போனோம். ஒரு லேடி டாக்டர் இருந்தாங்க. ரெண்டு கண்களையும் திறந்து திறந்து பார்த்தாங்க. லைட் அடிச்சிப் பார்த்தாங்க. இது தெரியிதா? அது தெரியிதான்னு கேட்டாங்க.
கடைசியா ஒரு கேள்வி கேட்டாங்க. பார்வை வராது வேற என்ன பண்ணனும்? நான் மனசுல நினைச்சிக்கிட்டேன் வேற என்னதான் பண்ணப்போறீங்க? அதையே கொஞ்சம் நாகரிகமா அவங்ககிட்ட கேட்டேன். செயற்கை கண் வைக்கலாம் அழகுக்குன்னு சொன்னாங்க. யோசிச்சி சொல்லுறோம்னு வந்தாச்சி. அம்மா எதிர்பார்ப்பு டொய்ங்னு ஆய்டிச்சு. அந்த டாக்டரை குறை சொல்வதற்கு இல்லை. பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை வரவைக்க முடியாதுதான். அது தெரிஞ்சிதான் அலுவலக அதிகாரிகளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சென்றோம். இது தெரிஞ்சும் எங்க அம்மா எதிர்பார்ப்பு அதுக்கு அந்த டாக்டர் வைத்த ஆப்பு. ஹா ஹா. அவங்க சொன்ன விஷயம் சரிதான். ஆனா சொன்னவிதம் சிரிப்பா இருந்தது.


இப்போ எல்லாரும் ஒவ்வொரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதுல வீடியோ போடுறாங்க. அது தப்பில்லை. ஆனா போடுற வீடியோ ஒழுங்கா இருக்கணும் இல்லையா? சமீபத்துல நான் டெலிகிராம் பயன்படுத்த கத்துக்க ஆரம்பித்ததும் யூடியூப்ல டெலிகிராம் பற்றி போட்டுருக்க வீடியோலாம் பார்த்துட்டு இருந்தேன். அதுல ஒரு வீடியோ ஆஹா அருமை அருமை. ஒருத்தர் டெலிகிராம் படிப்படியா எப்படி இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லிட்டே வந்தார். சரியா இன்ஸ்டால் பண்ணவும் செஞ்சாரு. பெயர் ஃபோன் நம்பர் ஓடீபி லாம் கொடுத்தாரு. கடைசியா என்ன சொன்னாரு தெரியுமா? இதுல வருத்தத்திற்குறிய விஷயம் என்னன்னா இது எனக்கு சப்போர்ட் பண்ணல. உங்க யாருக்காவது சப்போர்ட் பண்ணா எனக்கு தெரியப்படுத்துங்க. அவ்வளவுதான் வீடியோ.

 எதையோ புதுசா கத்துக்கப்போறோம்னு ஆர்வமா இருந்த எனக்கு எப்படி இருக்கும்? எனக்கு மட்டுமா அதை எத்தனை பேர் பார்க்கிறாங்க அவங்கலாம் என்ன நினைப்பாங்க? சப்போர்ட் பண்ணுமா பண்ணாதான்னு தெளிவா தெரிஞ்சிகிட்டு                                                                                         போடவேண்டாமா?

இப்போ நான் புதுசா ஆடியோ எடிட்டிங் பண்ணி விளையாட ஆரம்பிச்சிருக்கேன். நான் போய் விளையாடிவிட்டு அடுத்தப் பதிவை எழுதத் தொடங்குகிறேன். மறுபடியும் சந்திக்கலாம். வரட்டுமா?

12 comments:

  1. இதற்கு அந்த வீடியோ போடாமல் இருந்திருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் நானும் அங்க கமெண்ட் பண்ணலாம்னு நினைச்சேன். பாவம் சின்னப்பையன் பிழைத்துப் போகட்டும்னு விட்டுட்டேன் சார்.

      Delete
  2. உங்களது முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார்.

      Delete
  3. அபிநயா,

    முதல் சிரிப்பு(?) இதயத்தில் வேதனை கண்ணீர்.

    இரண்டாம் சிரிப்பு முகத்தினில் ஏமாற்ற வெந்நீர்.

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவர் சரிங்க. ஹா ஹா புதிய முயர்ச்சிக்கு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார்.

      Delete
  4. முதலில் நீங்க சொன்னது வேதனை அபிநயா. அது நகைச்சுவையாகக் கொள்ள இயலவில்லை.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    அபி யுட்யூப் பத்தி சொல்லாதீங்க. நானும் அதைப் பத்தித்தானே பதிவு போட்ட்டேன்.

    நீங்க சொல்லிருக்கறதுக்கு அந்த நபர் வீடியோ போட்டிருக்கவே வேண்டாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இடுக்கண் வருங்கால் நகுக துளசிதரன் சார். முயர்ச்சியை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார். நான் இன்னும் உங்க யூடியூப் பதிவைப் படிக்கல கீதா மேடம். படிச்சிட்டு பின்னூட்டம் இடுகிறேன். எனக்கும் அந்த நபர்கிட்ட அப்படி எதாவது சொல்லலாமா தோனிச்சு. ஆனா என்ன பயன் இருக்கப்போகுது.

      Delete
  5. முதல் விஷயம் சிரிப்பில் சேர்க்க முடியவில்லை.  நெகிழ்ச்சி.  இரண்டாவது விஷயம் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. மறப்போம் சிரிப்போம் சார். மிக்க நன்றி.

      Delete
  6. முதலாவது வருத்தம் தான் மிஞ்சியது.

    யூ ட்யூப் - இதற்கு அவர் வீடியோ போடாமலேயே இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருத்தம். இதுவும் கடந்து போகட்டும் சார். இப்படி வீடியோ போடுறவங்கலாம் பேர் சம்பாதிக்க போடுறவங்க. அதான் சும்மா பேருக்கு ஒரு வீடியோ

      Delete