Wednesday 15 July 2020

எளிமையின் நாயகன்


தலைப்பைப் பார்த்ததுமே புரிந்திருக்கும் இது காமராஜர் பற்றியப் பதிவு என்று. இன்று காமராஜர் பிறந்தநாள் மட்டுமா? கல்வி வளர்ச்சி நாளாயிற்றே. படிக்காத மேதையைப் பற்றிப் படிக்காதவன் யாரும் மேதையாக இருக்க முடியுமா?

 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் மறைவிற்கு பின் குடும்பச்சூழல் காரணமாகப் பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு, வேலை செய்து கொண்டே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

திருமணத்தை மறுத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். 1922ல் சாத்தூர் தாலுக்கா காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் வந்திருந்தார். அந்த மாநாட்டில்தான் காமராஜருக்கு தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி கிடைத்தது.

இதுதான் அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பம். இதன்பிறகு அவர் படிப்படியாகப் போராடி, பல பதவிகளைப் பெற்று, இரண்டுமுறை தமிழக முதல்வராகி 9 ஆண்டுகளைப் பொற்காலங்களாக்கிய நெகிழவைக்கும் நிகழ்வுகளெல்லாம் அனைவரும் அறிந்ததே. கையெழுத்துப்போடும் பெற்றோருக்குப் பிறந்தப் பிள்ளைகளைவிட கை ரேகையொற்றும் பெற்றோரின் பிள்ளைகளுக்குத்தான் படிப்பு முக்கியம் என்று ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தக் கருப்புக் காந்தியவர்.

1967ஆம் ஆண்டு தந்தைப் பெரியார் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தொண்டர் அவரிடம் வந்து தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னார். உடனே பெரியார் லண்டன், மாஸ்கோ என்று வெளிநாடுகளின் பெயராக வைத்தார். “என்னங்க ஐயா பெயர் வைக்கச் சொன்னால் நாடு பெயராச் சொல்றீங்களே.” என்றார் அந்தத் தொண்டர். விடுபவரா பெரியார்? “நீங்க மட்டும் பழனி, சிதம்பரம் வெக்கறீங்க? நீங்க தமிழக லெவல்ல யோசிக்கிறீங்க. நான் வெளிநாடு லெவலுக்கு யோசிக்கிறேன்.” என்றார். அந்தத் தொண்டர் கடவுள் பெயராக வைக்கச்சொல்ல, பெரியார் வைத்தப் பெயர் காமராஜர். கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தப் பெரியாரையே கடவுள் பெயர் வைக்கச் சொன்னதும், காமராஜர் பெயரை வைக்கத்தூண்டியக் கர்மவீரரவர்.

ஒருமுறை காமராஜர் தஞ்சையிலுள்ள ஒரு பழையக் கோவிலைப் பார்க்கச் சென்றிருந்தார். சிதிலமடைந்தக் கோவிலாக இருந்தபோதும் அதன் கட்டிடக்கலை அவரை ஈர்த்தது. உடனிருந்த அதிகாரிகளிடம் அந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என்று கேட்டார். அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. மேலே இருந்த டியூப்லைட்டைக் காட்டி, “பல காலம் நிலைத்திருக்கப்போகும் கோவிலைக் கட்டியவர் பெயர் தெரியவில்லை. ஒரு மாதம் எரியப்போகும் லைட்டில் உபயதாரர் பெயர் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் சொன்னதைக் கேட்டு உடன் இருந்தவர்கள் சிரித்தனர்.

தொழில்துறை அமைச்சராக இருந்த திரு இரா. வெங்கட்ராமன் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றிருந்தார். மே மாத வெயிலைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் அவர் டேபிள் ஃபேனை வாங்கி காமராஜரின் தாயாருக்குக் கொடுத்துவிட்டு வந்தார். தாயாரைப் பார்க்கச் சென்ற காமராஜர், கோபமாக இது ஏது என்று விசாரிக்க, சிவகாமி அம்மையார் நடந்ததைச் சொன்னார். “இந்த நாட்டுல எத்தனையோ மூதாட்டிங்க கஷ்டப்படுறாங்க முதலமைச்சர் அம்மாவுக்கு மட்டும் என்ன தனிச் சலுகை.” என்று கத்திவிட்டு அதை எடுக்கச்சொன்னார். பல வருடங்களாக அந்த ஃபேன் துருப்பிடித்துப்போய் விருதுநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கிறது. உயரிய பதவியில் இருந்தபோதும் தான் மட்டும் எளிமையாக வாழாமல் தன் தாயாரையும் கடைசிவரை எளிமையாக வாழவைத்த மக்கள் தலைவரவர்.

இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டேப் போகலாம். ஆனால் நான் இங்கே எதையும் குறிப்பிடப்போவதில்லை. காமராஜரின் பிறந்தநாளை ஒரு கட்டுரைப் பதிவோடு நிறுத்திவிடுவேனா? பிக்பூஸ்டர் யூடியூப் சேனலில், உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கும் வகையில், காமராஜர் பற்றிய ஒளிப்பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
சேனலை சப்ஸ்கிரைப் செய்து வீடியோவைக் கண்டுகளித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடவும்.

காமராஜரின் நலத்திட்டங்களடங்கியப் பாடல்

17 comments:

  1. சரியான நாளில் மிகவும் சரியான பதிவு.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  2. அருமையான தொகுப்பு ஃபேன் வாங்கிய விடயம் இன்றுதான் அறிந்தேன் நன்றி.

    பத்து தினங்களாக நம்ம ஏரியாப்பக்கம் வரவேயில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார். டெலிகிராம் கணிணில எப்படி உபயோகிக்கணும்னு கத்துக்குறேன். அதான் அதுல மூழ்கிடுறேன்.

      Delete
  3. அபி
    அருமை, அற்புதம்.
    வித்யா

    ReplyDelete
  4. எளிமையான ஆனால் இந்ததியாவின்  வலிமையான, நேர்மையான மனிதர் பற்றிய பதிவு.  அருமை.

    ReplyDelete
  5. கர்ம வீரர் காமராஜ் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு. காங்கிரஸ்காரர்கள்தான் அவரை மறந்து விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார். நல்லவங்களை இந்த உலகம் ஞாபகம் வெச்சிக்காது.

      Delete
  6. நல்லவேளை பாரதி,காந்தியை போன்று காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை......

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. ஆனா என் கருத்துப்படி வீட்டையும் ஜெயிச்சு நாட்டையும் ஜெயிக்கணும். நீங்க சொல்ற மாதிரி திருமணம் செய்தவங்க அவங்க குடும்பத்திற்கும் ஞாயம் செய்திருக்கணும்

      Delete
  7. பொருத்தமான பதிவு.
    ஆனா நீ சொன்ன மாதிரி வீட்டையும் ஜெயித்து நாட்டையும் ஜெயிக்க முடியாது.
    வீட்டுக்கு வந்த ஃபேன் அ திருப்பி அணுப்பினா அம்மா வேணும்னா பொருத்துப்பாங்க.
    பெண்டாட்டினா அவர பிரிச்சு மேஞ்சிடுவா.
    இன்னைக்கு அவர் எளிமையை புகழ்ந்து எழுதலாம்,
    ஆனா வெளிநாட்டு செட்டிள்டு மாப்பிள்ளைகளை எதிர்ப்பார்க்கும் இன்றைய தலைமுறை, அவர் போன்றோரை துணைவர்களாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  8. மிக்க நன்றி அரவிந் சார். வெளிநாட்டு மோகமெல்லாம் இங்கிருந்து போகும்வரைதான். அதுக்கு அப்புறம் அவங்க புலம்பல்களை ஒரு புத்தகமா போடலாம் ஆல்ரெடி போட்டுருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆம். என் சொந்தத்திலேயே பல புலம்பல்களை கேட்டிருக்கேன்.

      Delete