Friday, 24 February 2023

எலும்பால் வந்த அலும்பு

                            

வயசு ஆக ஆக தான் நம்ம உயிர் வெல்லக்கட்டியா இனிக்கிறது. அதுவரை நீ உயிர் தானே ஒரு ஓரத்தில் கிட என்று கிடப்பில் போட்டுடுறோம். பெரிய பெரிய நோய் வந்தாலும் ஏதோ சளி காய்ச்சல் வந்த மாதிரி நினைச்சுகிட்டு நானெல்லாம் மழைக்கு கூட மருத்துவமனைக்கு போனதில்லன்னு கெத்து காட்டுவோம். வாழும்போது வைத்தியம் பாத்துக்காம சாகும்போது சங்கரா சங்கரான்னா சாமி கண்ண குத்தாம என்ன பண்ணும்?



சின்ன வயசுல அம்மா அப்பாக்கு டிமிக்கி கொடுத்துட்டு, அண்ணனுக்கும் அக்காக்கும் அல்வா கொடுத்துட்டு, தம்பி தங்கைக்கு டாட்டா காட்டிட்டு பல்லு விளக்காம சாப்பிடும்போது திருட்டு மாங்கா சாப்பிடுற மாதிரி ஜிவ்வுன்னு தான் இருக்கும். வளர வளர தான் தெரியும் விளைவு. சரி ரொம்ப மொக்கை போடாம விஷயத்துக்கு வரேன்.



தலைவலிக்குதுன்னு கவலையா யார் கிட்டையாவது சொன்னா தலையை கழட்டி வை சொல்லுவாங்க. ஆனா உண்மையா அதை செய்ய முடியாதே. அப்படியே செஞ்சாலும் எமன் வந்து டிக்கெட் கொடுத்து அள்ளிகிட்டு போய்டுவானே. ஆனா பல்லு வலிச்சா பல்லை கழட்டி வைக்கலாமில்லையா. அப்படி நினைச்சு அறியா புள்ள தெரியாம பல்லு கழட்டி வச்சி அப்புறம் ஐயோ பாவம் நான்னு வருத்தப்பட்டதெல்லாம் தனிக்கதை. அதுக்கப்புறம்தான் புரிஞ்சது சாகும்வரை சந்தோஷமா சாப்பிட்டுகிட்டே சாகனும்னா பல்லு வேணும்னு. கழட்டுவேனா இனி காப்பாற்றத் தான் பார்ப்பேன். காப்பாற்றியும் வந்தேன். கறியும் காயும் வளைச்சிகட்டி தின்னு தீர்த்து தீபாவளி தினம் தினம் கொண்டாடிக் கொண்டிருந்த போது என் தலையில் இடி வந்து விழுந்தது.



ஒரு சொத்தைப் பல் வாடகை தராம பல வருஷமா என் வாய் வீட்டுக்குள்ள குடியிருந்துச்சு. சரி இருந்து தொலைன்னு விட்டுட்டேன். அதுவும் எனக்கு எந்த தொந்தரவும் தராம இருந்துச்சு. நானும் அதை கண்டுக்காம இருந்துட்டேன். என்னோடு வாழ்ந்து போரடிச்சிருக்கும் போல ரத்து கேட்டு தொல்லை பண்ணுச்சு. நானும் எவ்வளவோ சமாதானம் செஞ்சுப்பார்த்தேன்.. மலையிறங்கமாட்டேன்னு முரண்டு பிடிச்சிச்சு. போய் தொலையட்டும் நாமளாவது நிம்மதியா சாப்பிடலாம்னு ரத்து கொடுக்க முடிவு பண்ணி டாக்டர்கிட்ட போனேன். அவங்களும் அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சம் ஆட்டிப்பார்த்தாங்க. பாவி பல்லு பாசத்துல வரமாட்டேன்னு பாதியில விவகாரம் பண்ணுச்சு. இவளோடான உன் வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சதுதான்னு ஒருவழியா வெளிய இழுத்து தள்ளிட்டாங்க. தள்ளினது மட்டுமில்லாம உங்க பொண்ணு வாயிலிருந்து முழுசா வந்திருக்கும் பல்லைப் பாருங்கன்னு வசனம் வேற. கூடவே வாழ்ந்த பல்லுக்கு பல்லை இளிச்சுகிட்டே கடைசியா டாட்டா காட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். காயம் கொஞ்சம் அதிகம். ஆற கொஞ்சம் லேட் ஆகும் சொன்னாங்க. கொடுத்த மாத்திரை எல்லாம் விழுங்கினேன். ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சது.



ரொம்ப யோசிச்சு ஆராய்ச்சி பண்ணதுக்கு பிறகுதான் புரிஞ்சது போன பல்லு அந்த எலும்பையும் சேர்த்து உடைக்க வெச்சு என்னைப் பழி வாங்கிடுச்சுன்னு. சதிகார பல்லுக்கு சாபம் கொடுத்து சந்தோஷப்பட்டாலும் உண்மையாவே பயம் கோபம் அழுகையெல்லாம் போட்டிப்போட்டுட்டு வந்துச்சு. வலி ஒரு துளி கூட இல்லை. ஆனா எலும்பு தெரியிதே. சரியாகிடும்னு மூளை சொன்னாலும் மனசு கேட்கல. சாப்பிட கஷ்டப்பட்டேன். மெதுவா சாப்பிடுவேன். பிடிச்சதைக் கூட சாப்பிட பயமா இருக்கும். ஒரு வாரத்துக்குள்ள ஒரு வழியாகி எல்லார்கிட்டையும் சொல்லி சொல்லி அவங்களையும் பயம்காட்டி படுத்தி எடுத்தேன். இதுக்கு மேல தாங்காதுன்னு வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அந்த டாக்டரும் நல்லா செக் பண்ணிப் பார்த்துட்டு எலும்புதான் உடைஞ்சிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருப்பாங்க அதான் இப்படி. காயம் இருக்கு. ஆறினதுக்கு பிறகு கூடிடும்னு சொன்னாரு. நம்பிக்கை இல்லைனா எக்ஸ்ரே எடுத்துக்க சொன்னாரு. அவர் மேல இருந்த நம்பிக்கையில் எக்ஸ்ரேலாம் எடுக்கல. பார்க்கலாம் கொஞ்சநாள் நினைச்சு வந்துட்டேன்.



நாட்கள் தான் கடந்ததே தவற எலும்பு இருந்த இடத்தைவிட்டு நகரல. சட்டமா சம்மணமிட்டு உட்கார்ந்துகுச்சு. நான் புது வேலைல சேரவேண்டிய நாள் நெருங்குச்சு. அது என்ன வேலைன்னு அப்புறம் தனியா சொல்லுறேன். வீட்ல மெதுவா சாப்பிடலாம். ஆஃபீஸ்ல சாப்பிட முடியுமா? சேருற நாளை தள்ளிப்போட மேனேஜர்கிட்ட கேட்டபோது வாய்ப்பில்ல சொல்லிட்டாரு. ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்துட்டாங்க எல்லாருக்கும்தான். இது போதுமே. அந்த கவலை முடிஞ்சது.



சாப்பாட்டைத் தவிற எதுவும் சாப்பிடமாட்டேன். அதுவும் சாப்பிட்டாகனும்னு கட்டாயத்துக்காக சாப்பிடுவேன். பிடிச்ச ஸ்னாக்ஸ் வீட்ல இருந்தும் ஒரு வாய் வெக்கமாட்டேன். கடைசிவரை நாம இப்படியே இருந்துடுவோமான்னு அழுவேன். பொத்தி பொத்தி பாதுகாத்தேன். கை கால்ல சாதாரண காயம்னா பரவாயில்லை விட்டுடுவேன். தோல் பிதுங்கினாலும் சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கும். முன்ன பின்ன எலும்பு முரிஞ்சியிருந்தாதானே தெரியும் பயப்படக்கூடாதுன்னு. பிடிச்சதை சாப்பிட முடியாத வருத்தம்தான் உண்மையாவே பெருசா தெரிஞ்சது. என்னடா இவ இப்படியே பேசுறான்னு நினைக்கலாம். ஆனா நோயாளிகளுக்கு மட்டுமே தெரியும் இந்த வருத்தம். சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் இருக்கு உங்களுக்கு. இனிமே இதையெல்லாம் சாப்பிடாதிங்கன்னு ஒரு பெரிய பட்டியல் தருவாங்களே. பாவம் மத்தவங்களுக்காகவும் தான் உயிர் வாழவும் சாப்பிடாம இருந்தாலும் மனசுக்குள்ள கண்டிப்பா பெரிய வலி இருக்கும். நல்லவேளை எனக்கு எப்பவும் அந்த பிரச்சனையெல்லாம் இருந்ததில்லை. அதுக்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லனும். சரி வழக்கம்போல டுவிஸ்டுக்கு வருவோம்.



இப்படியே இருந்தா வேலைக்காகாதுன்னு பல்லு எடுத்த டாக்டர்கிட்டையே காட்டலாம்னு அப்பாயின்மென்ட் கேட்டேன். மூனு நாள் ஆகும்னு சொன்னாங்க. சரி வெயிட் பண்ணலாம் வேற வழியில்லன்னு விட்டுட்டேன். அன்னைக்குன்னு பார்த்து பல்லு இருந்த இடத்துமேல ரொம்ப ஆசை வந்துச்சு. எலும்பை தொட்டு தொட்டு பார்த்தேன். வெட்கப்பட்டுகிட்டு பொசுக்குன்னு என் மடியில வந்து விழுந்துடுச்சு. அட கடங்கார எலும்பே! இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதுவேறயா? பகீர்னு இருந்துச்சு. இரத்தம் வேற லைட்டா வர மாதிரி தெரிஞ்சிச்சு. பயம் கிலோ கணக்குல ஏறுது. அம்மாவை கூப்பிட்டு காட்டினேன். அவங்களுக்கும் பாவம் ஒன்னும் புரியல. அப்பவும் ஒரு வலி இல்ல. இதுக்கு முன்னாடி போன வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போனோம்.



அவரும் அன்பா விசாரிச்சாரு எலும்பு கூடிடுச்சா கேட்டாரு. இல்லை சொன்னேன். செக் பண்ணிப் பார்த்துட்டு சரியாகிடுச்சேன்னு சொன்னாரு. அப்போதான் அதை காட்டினோம். எதை?



உடைஞ்ச எலும்பை பேப்பர்ல மடிச்சு எடுத்துட்டு வந்ததை. அட இம்சை புடிச்சதுகளா எங்கயிருந்துதான் கிளம்பி வருவீங்களோன்னு எங்களை டாக்டர் மனசுக்குள்ள வறுத்தெடுத்துகிட்டு வெளிய கொஞ்சமா பொறுமையா சொன்னாரு. ஏம்மா இது ஒரு வேலைன்னு எடுத்துட்டு வந்திருக்கீங்களே தூக்கிப்போட்டுட்டு வேற வேலையைப் பாருங்க. இது தேவையில்லாத எலும்பு. காயம் ஆறி எலும்பு கூடிடுச்சு. விட்டுருந்தா அதுவே உதிர்ந்திருக்கும். இதை போய் பெருசு பண்ணிகிட்டு. சொன்னாரு. பயமா இருந்துச்சு சொன்னேன். எதுக்கு பயம்னு கேட்டுட்டு மருத்துவபாணியில் எனக்கு புரியிற மாதிரி விளக்கி சொன்னாரு. மறுபடியும் செக் பண்ணிட்டு ஒட்டியிருந்த கொஞ்ச எலும்பையும் எடுத்துவிட்டுட்டாரு.



உடம்பை அதன் போக்குல விட்டுடுங்க செய்ய வேண்டியதை அதுவே செஞ்சிக்கும். கூட வேண்டிய எலும்பெல்லாம் கூடியாச்சு. இது தேவையற்ற மிச்ச எலும்பு. அதான் உடைஞ்சிடுச்சுன்னு சொன்னாரு. வலியிருந்தாதான் கவலைப்படணும் வலியில்லாதவரை எதைப்பற்றியும் கவலைப்படாதீங்கன்னு சொன்னாரு.


நன்றி சொல்லிட்டு வந்துட்டோம். ஆனா அந்த டாக்டர் குணமும் பேச்சும் மனசுக்குள்ள பசுமையா தங்கிடுச்சு. அவருக்காகதான் இந்த பதிவை போடுறேன். அவர் பேர் தெரியாது இன்னமும். அந்த மருத்துவமனை பேர் போட்டு தான் சேவ் பண்ணி வெச்சுருக்கேன். தங்கமான மனுஷர். எவ்வளவு பொறுமையா கணிவா விளக்கிச் சொன்னாரு. மருத்துவரின் முக்கிய பண்பே இதுதானே. பேஷண்ட்கிட்ட புரியாத பாஷைல பேசிட்டு. தெரியாத நோய் பேரை சொல்லி பயப்படுத்தாம வேண்டியதை மட்டும் செஞ்சு கொடுக்குற டாக்டர்களைத் தான் மக்கள் எதிர்பார்ப்பது. அந்த டாக்டரின் கருணை மனசுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. வளமும் நலமும் பெற்று நன்றாக நீடூழி வாழட்டும் அவர்.



இப்படித்தான் நம்ம வாழ்க்கைல சில வினோத நிகழ்வுகளையும் வித்தியாசமான மனிதர்களையும் கடந்து வறோமில்ல? நிகழ்வும் நிகழ்வுக்கு சொந்தமானவங்களும் நினைவுகளா மனசுக்குள்ள தங்கிடுறாங்க. நினைத்தாலே இனிக்கும் பொக்கிஷங்கள் இவை. இந்த டாக்டருக்கு 5 ஸ்டார்ஸ் ரேட்டிங்ஸ் கொடுக்கலாம். இவர் போன்ற அன்பான மனிதர்கள் இந்த உலகத்துல இருக்கும்வரை அபியின் அலும்புக்கும் குறும்புக்கும் அளவே இருக்காது.             

Saturday, 19 November 2022

கிட்சன் கிருக்கல்கள்

வணக்கம் நண்பர்களே. அனுபவம் பகிரலாமா? இந்த வருஷம் கொளுத்துற வெயில்லருந்து தப்பிக்க தேவகோட்டையிலிருக்கும் என் நண்பர்களான தர்மபாலன் மற்றும் லக்‌ஷ்மி ப்ரியா வீட்டுக்கு போயிருந்தேன். கணவன் மனைவி ரெண்டுபேருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். அதிலும் லக்‌ஷ்மி ப்ரியா என் கல்லூரி தோழி. இதுக்கு முன்னாடியும் பலமுறை போயிருக்கேன். எப்போபோனாலும் கொட்டமடிக்காம வரமாட்டேன். நான் செய்யும் குறும்பில் ரெண்டுபேரும் விழி பிதுங்கி நிற்கும் தருணத்தை வெகுவாக ரசிப்பேன். இந்த முறையும் சென்ற சில நாட்களுக்கு வேளைக்கு உணவு உண்டு உரங்கி வீணே பொழுதை கழித்தேன். அப்படியே இருந்துவிட்டால் அபிக்கு என்ன மதிப்பு? ஆரம்பித்தேன் அபியின் அடுக்களை அமர்க்களங்களை.



முன்னாடியே சாதம் வைக்க தெரிஞ்சதால ஆறுமணிக்கு எழுந்து அருசி களைந்து, தண்ணீர் நிறப்பி, அடுப்பை பற்றவைத்து, சாதம் வைப்பேன். உப்பு சேர்த்து மூடி வெச்சுடுவேன். அப்புறம் ஸ்கூல் போகும் தர்மபாலனுக்கு சுடுதண்ணி வைப்பேன். லெமன் சாதம் செய்யும்போது லெமன் பிழிந்து வைப்பேன். இதுவரைதான் பெரும்பாலும் என் அன்றாட வேலை. சாதம் வடிக்கத் தெரியாது. பயம் முயன்று பார்க்கவும். என் கைகள் ஓரளவுக்குமேல் சூடு பொறுக்காது. நெருப்பு கத்தி என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால பெரிய பெரிய வேலையெல்லாம் ப்ரியா தலையில கட்டிடுவேன். அவளும் என்னைப் புரிஞ்சிகிட்டு செய்வா.



காபி டீ போட்ட தருணங்களெல்லாம் மிகவும் சுவையானது. இதுக்கு முன்னாடி போனபோது கடுங்காப்பி கலக்குறேன்னு காபி பொடியை அதிகமா கொட்டிட்டேன். சர்க்கறை சொல்லவே வேண்டாம். காபி கலந்த நான் அதை குடிக்க முடியாமல் நைசா சின்கில் ஊத்திட்டேன். ஆனா பாவம் அவங்க வீணாக்கக்கூடாதுன்னு ஒரு சொட்டு மிச்சம் வெக்காம குடிச்சிட்டாங்க. அதிலும் தர்மபாலன் இனிமே வீட்ல எனக்கும் சேர்த்து காபி போடாதிங்கப்பான்னு கோபமா டம்பலரை வெக்கும்போது என்னால சிரிப்பை அடக்க முடியல.



இப்போ போனபோது பால் காபி போட்டேன். அருமையா வந்துச்சு. சிலநேரம்தான் கேவலமா இருந்துச்சு. இரண்டு முறைதான் டீ போட்டேன். இரண்டாம் முறை அவ்வளவா நல்லா இல்லைன்னு கமெண்ட் வந்துச்சு. முதல்முறை டீ போட்டு அதை வடிகட்டாம தர்மபாலனுக்கு கொடுத்துட்டேன். வடிகட்ட பயம். கீழ சிந்திட்டா? அதிலும் என் பட்டுக்கையில பட்டுட்டா மீ பாவமில்லையா? அதனால அப்படியே கொடுத்துட்டேன். ப்ரியா தூங்கிட்டு இருந்ததால அவ எஸ்கேப். குடிச்சவரோ சூப்பரா இருக்கு. நல்லா கொதிச்சிருக்கு ஆனா டீத்தூல்தான் அப்படியே இருக்குன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் தோணும்போதெல்லாம் காபி போடுவேன்.



ஒருநாள் எனக்கும் ப்ரியாவுக்கும் வாய்க்கா தகறாரு வந்துடுச்சு. ரெண்டுபேருமே சாப்பிடல. ரெண்டுபேருக்கும் பயங்கற பசி வேற. என்னால பொறுக்கமுடியாம காபி போட்டு பிஸ்கேட் எடுத்துவந்து படுத்திருந்த அவகிட்ட வெச்சேன். திமிர்பிடிச்சவ. கோபத்துலயும் கொட்டிகிட்டா. அன்னைக்குன்னு பார்த்து காபி சூப்பரா வந்துச்சுப்பா. நானும் அப்படித்தான் என்ன சண்டை, கோபமா இருந்தாலும் சாப்பிடாம இருக்கமாட்டேன். சாப்பிட்டுட்டு சண்டை போடுவோம் என்ன கெட்டுப்போச்சு. யூடியூப் உபயத்துல லெமன் சாதம் மசாலா அறைத்து செய்தோம். புதினா சாதம், தேங்கா பால் சாதம் செய்தோம். ஆறுமணிக்கு ஆரம்பிப்போம். எட்டேகால் எட்டரைக்குள்ள முடிக்கணும். ரொம்பவே சேலஞ்சிங்கா இருக்கும்.



மசாலா கடல செய்தோம். எட்டுமணி நேரமா கடலப்பருப்பு ஊரவெச்சு, காயவெச்சு, உப்பு, மிளகாய் தூல், பூண்டு, கறுவேப்பிலை எல்லாம் சேர்த்து மசாலா ரெடி பண்ணி, கடலப்பருப்பை வறுத்து இதுல போட்டு மிக்ஸ் பண்ணோம். டேஸ்ட் ஓகே ஆனா கடிக்கவே முடியல. கஜினி முகமது படையெடுத்த மாதிரி விடாம எள்ளடை செய்ய ட்ரை பண்ணோம். அது எள்ளுப்பூரியாகி எங்களைப் பார்த்து கேலி செஞ்சது.

அந்த நேரத்தில் வந்த தர்மபாலன் நண்பர்கள். மச்சான் இது என்னடா கொஞ்சம் சாப்பிட்டு பாரேன். எள்ளடையா எள்ளுப்பூரியான்னு பட்டிமன்றம் நடத்தி, பால் விளையாடி, பல்லு போச்சேன்னு பயந்துகிட்டே சாப்பிட்டாலும் பயபுள்ளைங்க காலி செஞ்சிடுச்சிங்க.



அப்புறம் என்ன ஒரே குஷிதான். என்ன செஞ்சாலும் காலியாகுதேன்னு அடுத்த ஆட்டத்துக்கு தயாரானோம். நெய்யில்லாத மைசூர்பாக். நெய் போட்டு செய்யலாம்னு ப்ரியா சொன்னதுக்கு, வேண்டாம் நெய் திகட்டும். எண்ணெய்ல செய்யலாம் சொல்லிட்டேன். கடலெண்ணெயும் நல்லெண்ணெயும் சேர்க்கக்கூடாதுன்னு சொல்லாம விட்டுட்டேன். பாவிமக கடலெண்ணெய கலந்துட்டா. கலந்த பிறகு இது ரீஃபைண்ட் ஆயிலான்னு வடிவேல் பாணில கேட்டு என்ன யூஸ். விளைவு மைசூர்பாக் டேஸ்ட்ல இருந்தாலும் கடலெண்ணை வாசம் சும்மா கும்முன்னு தூக்குச்சு. பீஸ் போட்டு சாப்பிட வேண்டியதை உதிர்த்து சாப்பிட்டோம். அதை அதிகமா காலி பண்ணது சோதனை எலியான திரு தர்மபாலனே.



மைசூர்பாக் செய்யும்போது தெரியாத வேலையெல்லாம் செய்ய சொல்றாளேன்னு ப்ரியா புலம்பிகிட்டே செஞ்சா. ஜாலியா இருந்தது. செய்முறையை சொல்ல சொல்ல அவ செய்வா. மாவு பிசையிறது, அடுப்பு வேலையெல்லாம் அம்மையார் தலையில கட்டிட்டு, அடியேன் இப்படி செய், அப்படி செய்னு சொல்லி, பேசிகிட்டே செய்வோம். செய்யிற பண்டத்தைவிட செய்யிற அனுபவம் சுவையா இருக்கும். எள்ளடை செய்யும்போது, நாங்க தட்டி தட்டி தர, தர்மபாலனோட தம்பி எண்ணெய்ல போட்டு எடுத்தாரு. எத்தனை நாள்தான் தனியா செய்யிறது? அதான் அவரையும் இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தோம்.



லஸ்ஸி, பூந்தி ரைத்தா செய்தோம். இதெல்லாம் கொஞ்சம் பரவால்லாம வந்தது. ஒருநாள் ப்ரியா சிஸ்டம்ல வேலையா இருந்தா. எனக்கு போரடிச்சது. வத்தல் வறுக்க கூப்பிட்டேன். வரமாட்டேன் சொன்னா. போடி நானே செஞ்சிக்குறேன்னு வீம்பா போயி அடுப்பை பற்றவைத்து, எண்ணெய் சட்டில எண்ணை காயவைத்து வத்தல் கூட போட்டுட்டேன். ஆனா அது படபடன்னு பொறியறதைப் பார்த்துப் பயம் வந்துடிச்சு. அப்புறம் என்ன? அவ வந்துதானே ஆகணும். புலம்பிகிட்டே வந்து செஞ்சா. அட நானும் ஹெல்ப் பண்ணேனே கவர்ல இருந்து வத்தல் எடுத்து எண்ணெய்ல போட்டேன். எப்புடி.



அடுப்பில்லாம ஸ்வீட் செய்யலாம்னு யூடியூப்ல பார்த்தேன். உடனே பொட்டுக்கடலை, சர்க்கறை சேர்த்து அறைத்து, ஏலக்கா போட மறந்து, நெய்யிலேயே மாவு பிசைந்து பால்கோவா போல தட்டி காயவெச்சோம். கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிட்டா பால்கோவா போலவே சுவையா இருந்தது. இதையும் அதிகமா சாப்பிட்டது சோதனை எலிதான். எனக்கும் ப்ரியாக்கும் ஸ்வீட் பிடிக்காது.



ஐஸ்கிரீம் செய்யலாம்னு அடுத்த லூட்டிக்கு தயாரானோம். அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர் பண்ணதுல ப்ரியா கடுப்பாகி. போடி இதுக்கப்புறம் எதையாவது செய்ய சொன்னா செய்யமாட்டேன்னு போய்ட்டா. எனக்கும் கோவத்துல அவளைக் கூப்பிட விருப்பமில்லாம நானே அடுப்புல வெச்சு கிண்டிட்டு இருந்தேன். நான் எதையாவது எடுக்க சொல்லாதன்னுதான சொன்னேன். அடுப்புல வெக்க கூப்பிடாதன்னு சொன்னேனா. எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு எப்படியோ போன்னு சொல்லிட்டு போயிட்டா. நானே செஞ்சு, ஆறவெச்சு, மிக்சியில அடிச்சு. இதுவரைக்கும் எல்லாமே நல்லாதாம்ப்பா போச்சு. டிஃபன் பாக்ஸ்ல ஊத்தும்போது நிறைய கீழ சிந்திடுச்சு. அழுகைன்னா அழுகை அப்படி ஒரு அழுகை வந்துச்சு. மிச்சம் இருந்ததை ஃப்ரிட்ஜ்ல வெச்சேன். நைட் சாப்பிடும்போது சூப்பரா இருந்துச்சு. எல்லாரும் விரும்பியே சாப்பிட்டாங்க.



ஒருநாள் மிளகா கிள்ளி சாம்பார் வெச்சோம். இன்னொரு நாள் மண் சட்டி பாண வாங்கி வெச்சிருந்தேன். அதுல சமைக்கலாம்னு மாடிக்கு எடுத்துட்டு போய் அடுப்பு பற்ற வெச்சா எரியவே இல்ல. அருசி பருப்பு வீணாக கூடாதுன்னு கீழ வந்து கேஸ்ல வெச்சேன். பாணை அளவு தெரியாம அருசி பருப்பு அதிகமா போட்டதால தண்ணி பத்தாம சாதம் வேகல. வேற பாத்திரத்துல மாத்தி தண்னி அதிகமா வெச்சு வேக வெச்சா ப்ரியா. நானே இரண்டுமுறை உப்பு போட்டிருந்தேன். சதிகாரி அதை கவணிக்காம திரும்பவும் உப்பு போட்டுட்டா. ஆசையா வாயில வெச்சா, சே என்ன கொடுமை. உப்புல சாதம் கொஞ்சம் கம்மி. அப்புறம் என்ன குப்பை தொட்டிதான் நாங்க செஞ்சதை சாப்பிட்டுச்சு.



கேழ்வரகு கஞ்சி செய்யலாம்னு நினைச்சோம். கேட்ட பொருளையெல்லாம் எடுத்துக்கொடுத்துட்டு ப்ரியா துணி துவைக்க போயிட்டா. நானே ஆரம்பிச்சு நானே செஞ்சேன். கஞ்சிக்கும் களிக்கும் இடைப்பட்ட நிலைல வந்துச்சு. சுவையாதான் இருந்துச்சு. டம்பலர்ல ஊத்தி குடிக்க வேண்டியதை தட்டுல போட்டு சாப்பிட்டோம். கடைசியா நான் சென்னைக்கு வர அன்னைக்கு செஞ்சது தேங்காபால் சாதம். தேங்கா பால் எடுக்க தேங்கா அறைக்கும்போது பாதிக்குமேல கீழ சிந்திடுச்சு. தேங்கா பால்ல தண்ணி கலந்து செஞ்சாலும் டேஸ்டாவே இருந்துச்சு. தேங்கா பால் சிந்தினது கவலையா இருந்துச்சு.



காய்கறில சிலது கட் பண்ணுவேன். சிலது கட் பண்ணமாட்டேன். தோல் சீவ வராது. பூண்டு உரிக்கிறது இஞ்சி பூண்டு பேஸ்ட் அறைக்கிறதுலாம் செய்வேன். மாங்கா மாம்பழம் கட் பண்ண கத்துகிட்டேன். ப்ரியாதான் சொல்லி தந்தா. வெண்டக்கா ஃப்ரை பண்ணோம். நல்லாதான் இருந்துச்சு. நாலுபேருக்கு லெமன் ஜூஸ் போடணும். நாற்பது பேருக்கு போட்டு, பத்துநாளா வெச்சு வெச்சு குடிச்சோம். டேங்கு வாங்கி கலந்து குடிச்சோம். சாப்பாடு, நொறுக்கு தீனி எல்லாம் பத்தாம. அடிக்கடி சத்துமாவு கிண்னம் கிண்ணமா சாப்பிடுவோம். 



இப்படியே கோடைக்காலம் குளிர்ச்சியா கழிஞ்சது. யார் எங்க இருந்தாலும் மறக்கமுடியாத நினைவுகள் இது. இப்படி செஞ்சோம் அப்படி செஞ்சோம்னு சொல்லிட்டு, எப்படி செஞ்சோம்னு ரெசிபி சொல்லலையேன்னு பார்க்கறீங்களா. போங்கப்பா ரெசிபியெல்லாம் யூடியூப்ல பாத்துக்கோங்க. நாங்க மட்டும் யூடியூப் பாத்து கஷ்டபட்டு செஞ்சோம். நீங்க என்கிட்டருந்து சுட்டுக்குவீங்களா. முடியாது. எங்க நட்பின் இலக்கணத்தை கிட்சன்ல கிருக்கியிருக்கோம். எப்படி?


Friday, 14 October 2022

மனிதத்தின் மரணம்.

            கண்ணா, சுபத்ரா ரெண்டுபேரும் சாப்பிட வாங்க என்று தன் பிள்ளைகளை அழைத்துவிட்டு, தன் கணவன் வாசுதேவனையும் சாப்பிட அழைத்து வந்தாள் தேவகி. அனைவரும் சாப்பிட்டபின் பாத்திரங்களை கழுவி ஒதுங்கவைத்து தன் அறைக்குச் சென்றாள். கட்டிலில் கணவன் பலத்த யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்க, வாசுதேவன் தன் மனைவியிடம் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர்களின் பள்ளி படிப்பு, கல்லூரி சேர்ப்பது, தங்களின் நிதி நிலமை என்று அனைத்தும் பேசிவிட்டு உரங்கினர்.



மறுநாள் காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருக்க மனைவி தந்த காலை உணவை உண்டுவிட்டு சுவரொட்டி ஒட்டும் தன் வேலைக்கு கிளம்பி சென்றார் வாசுதேவன். "ஏங்க இந்த டிரெயினேஜ் நாலுநாளா அடைச்சிட்டு இருக்கே கார்பரேஷன் ஆஃபிசுக்கு போன் பண்ணி சுத்தம் செய்ய வரசொல்லலாமில்லையா. குழந்தைங்க இருக்க இடம். இன்ஃபெக்‌ஷனானா என்ன செய்யிறது? நாந்தான் வேலை பளுவில் மறந்துடறேன். நீங்க கொஞ்சம் பாருங்களேன்” என்று தன் பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். ”சரிங்க பார்க்கிறேன். நானும் மறந்துதான் போயிடறேன். இப்பவே போன் செஞ்சிடறேன்” என்றுவிட்டு போன் செய்ய சென்றார் மற்றொருவர்.

போன் செய்த சற்றுநேரத்தில் டிரெயினேஜ் சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மை பணியாலர்கள்  வந்தனர். ஒருவர் உள்ளே இறங்கி சுத்தம் செய்துகொண்டிருக்க, மற்றொருவர் மேலிருந்து உதவியபடி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறை இருந்தபோதும் ஆங்காங்கே இப்படி நடப்பதுண்டு. எந்த சட்டங்களையும் ஒழுங்காக பின் பற்றாதவர்களாலும், அவர்களை கடுமையாக கண்டித்து சட்டங்களை பின் பற்ற வலியுறுத்தாத அரசு அதிகாரிகளாலும்தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.



ஒரு சராசரி மனிதனின் சிந்தனை எப்பொழுதும் குடும்பம், வேலை, பணம், உணவு உரக்கம் இவற்றை மட்டுமே சுற்றிவரும். பசிக்கோ ருசிக்கோ உணவு உண்டால் போதும் அது செறித்து அடுத்த வேலை உணவு கிடைத்தால் போதும் என்பது மட்டுமே பெரும்பாலானோர் கொள்கை. இதுதான் கசப்பான எதார்த்தமான உண்மை. இப்படி டிரெயினேஜ் அடைப்பு வந்தால் மட்டுமே அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறது, அதற்காக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஞாபகம் வரும். 

தன் துருநாற்றத்தை தானே தாங்க இயலாது அடுத்தவரை சுத்தம் செய்ய அழைப்பர்.  25 சதவிகிதம் வீட்டில் சமைத்து, 75 சதவிகிதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்டதெல்லாம் கழிவுகளாய் வெளியேறிக்கொண்டிருந்தது. இது போதாதென்று குட்டி குட்டி காகிதங்கள், முடி, சிகரட் துண்டங்கள், பாலித்தின் பொருட்கள், சின்ன சின்ன நெகிழி பொருட்கள், பெண்களின் நேப்கின்கள் என்று அனைத்து அறுவருப்பு பொருள்களையும் அழகாக தன்னை அழுக்குப்படுத்திக்கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.



சட்டென்று விஷ வாயு தாக்க மூச்சுத் திணறியது. “ஐயோ! காப்பாற்றுங்கள்!” என்று அலறித் துடித்தார். விஷவாயு தாக்கியதில் தடுமாறி தன்னிலை இழந்தார். சாக்கடை கழிவுகள் வாய், மூக்கு, கண், காது என்று அனைத்து உறுப்புகளிலும் புகுந்து உயிரை சூரையாட தொடங்க, வாந்தியும் இருமலும் ஏற்பட்டு கண்கள் செருகி மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். முறையான பாதுகாப்பு இல்லாததால் உடனே விஷவாயு மூளையையும் தாக்கிவிட, மரணத்தை மடமடவென்று நெருங்கிக்கொண்டிருந்தார். உடனே மேலே நின்றிருந்தவர் குதித்து காப்பாற்ற முயல,அவரும் அந்த மரண வேதனையில் சிக்கிக்கொண்டார். . உயிர் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். யார் இறந்தாலும் இறப்புதான் உரியவர்க்கு அது இழப்புதான். அப்படி இருக்கையில் இவர்களை மட்டும் முறையாக பாதுகாக்காமல் இருப்பது என்ன ஞாயம்?



வெளிநாடுகளில் தனிமனித சுதந்திரத்தைப் பற்றியோ அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியோ யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை. யார் சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் தலையிடுவதில்லை. ஆனால் சமூக ஒழுக்கத்திற்கு சின்ன கேடு வந்தாலும் சும்மா விடுவதில்லை. எல்லா துறைகளில் பணிபுரிபவருக்கும் முறையான பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆனால் நம் இந்திய நாட்டில் தனிமனிதரைப் பற்றி புறணி பேசவே சரியாக இருக்கிறது. அண்டைநாட்டின் கலாச்சாரம் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களைப் போல் சமூகக் கட்டுப்பாடு வேண்டாமோ.



தன் வேலைகளை முடித்துக்கொண்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வாசுதேவன். அப்போது பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று ஓடிச்சென்று பார்த்தார். பார்த்தவர் எதையும் யோசிக்காமல் குடும்பம் உயிர் அனைத்தையும் துச்சமாய் எண்ணிவிட்டு உடனே குதித்துவிட்டார் அவர்களைக் காப்பாற்ற. 

இயற்கையான ஒரு விஷயத்தைக் கேலிக்கூத்தாக்கி கைக்கொட்டி சிரித்திருக்கிறோம். ஆனால் அது கேலி செய்யும் விஷயமல்ல கேடு செய்யும் விஷம் என்பதை மறந்து போனோம். வாயு பிரச்சனைகளைப் பற்றியும் அதன் தீர்வு பற்றியும் ஒவ்வொரு மனிதனும் மருத்துவரை அனுகியும் சமூக ஊடகங்களிலிருந்தும் தெரிந்துகொள்கின்றனர். தன்னைக் காத்துக்கொண்டால் மட்டும் போதுமா? தன் நாட்டைக் காக்க வேண்டாமா? உலகிலேயே மிகக் கொடிய விஷமென்றால் அது மனிதந்தான். உடலளவிலும் சரி. உள்ளத்தாலும் சரி. மனித விஷத்திடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற மனிதர்களான அரசாங்க அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்? எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறையும், அது தொடர்பான சட்டங்களும் வந்தபின்னும்  இன்றளவும் நிகழும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு என்ன முடிவு? கேள்விக்குறிதான்.



அங்கு இருந்தவர்கள் போலிசுக்கு தகவல் கொடுக்க, மீட்புப் பணி உடனடியாக நடைபெற்றது. மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு,அவர்களின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

அடுக்கலையில் வேலையாக இருந்த தேவகி அண்ணி என்ற அன்பான அழைப்பில் வெளியே வந்து பார்த்தாள். தன் கணவருடன் வேலை செய்யும் ஒருவர் நின்றிருந்தார். ”வாங்க தம்பி. காஃபி எடுத்துட்டு வரேன் உள்ள வாங்க. அவர் எங்கே? இன்னும் அவருக்கு வேலை முடியலையா?” என்று கேட்டபடி காஃபி எடுக்க உள்ளே செல்லபோனாள். அதை தடுத்த அவர், “வேண்டாம் அண்ணி. வெளிய போகனும் நீங்களும் வாங்க. கொஞ்சம் அவசரம்.” என்று பதட்டமாய் அழைத்தார். அவர் முகத்திலிருந்த பதட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளே கிலி பரவியது. நடுக்கத்துடன், “எ.எங்கே போகனும் தம்பி? யாருக்கு என்ன?” என்று திக்கித் திணறியபடி கேட்டாள்.

“அது. வந்து. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரை போகணும் அண்ணி வாங்க ப்ளீஸ். எல்லாம் சொல்றேன். இப்போ வாங்க” என்று தழுதழுத்த குரலில் அழைக்க, அதற்குமேல் எதுவும் கேட்காமல் கிளம்பிவிட்டாள். மனமெல்லாம் பாரமாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். உள்ளே செல்ல செல்ல தேவகிக்கு பயம் அதிகரித்தது. அங்கே தன் கணவரை சுயநினைவற்ற நிலையில் கண்டதும் பயமும் பதட்டமும் உச்சத்தை அடைந்து கதறலாய் வெளி வந்தது. “ஐயோ! என்னங்க. என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிங்க. எந்திரிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று பதறித் துடித்தாள். வாசுதேவனின் உடன்பிறவா சகோதரரான அவர் நடந்ததைச் சொல்ல, அழுது கரைந்தாள் மனிதநேயத்தின் மறுவுருவான வாசுதேவனின் காதல் மனைவி.  



சிகிச்சைப் பலனின்றி அந்த இரண்டு தூய்மை பணியாளர்களும் முதல் நாளே இறந்துவிட, மறுநாள் வாசுதேவனின் உயிரும் விண்ணில் பறந்தது. அந்த 24 மணிநேரமும் தேவகி தன் சுயத்திலேயே இல்லை. பித்துப்பிடித்தவள் போல் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதிசயம் நிகழ்ந்து மீண்டும் தன் காதல் கணவன் தன்னிடமே வந்துவிடமாட்டாரா என்று ஏங்கினாள். விதி போடும் கணக்கிலிருந்து தப்பிவிட முடியுமா? அவளின் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்க்கவில்லை. உழைப்பு, நட்பு, மனிதநேயம் மூன்றையும் ஒன்றாக விழிங்கிக்கொண்டது மரணம்.

மூவரின் உடலும் போஸ்ட்மாட்டம் செய்து அவரவர் குடும்பத்திடம்  ஒப்படைத்தனர். மருத்துவமனையே அதிரும்படி வெடித்து அழுதார்கள் அவர்களின் குடும்பத்தினர். அப்பாவியான தேவகியையும், அவளின் இளங்கன்றுகளையும் பார்க்கும்போது அனைவருக்குமே கண்கள் கலங்கியது. தனியொரு பெண்ணாய் தன் பிள்ளைகளுடன் அமரர் ஊர்தியில் கணவனின் உடலோடு அவரது சொந்த ஊரான மதுரைக்கு பயணப்பட்டாள். தங்களுடன் வருகிறேன் என்ற தன் கணவரின் மானசீக சகோதரரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இடைவிடாது அழுத  பிள்ளைகளை இறுக்கி அனைத்துக்கொண்டு புழுவாய் துடித்தாள். 



மதுரையில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் தன் பக்கத்து வீட்டு தோழியான தேவகியை காதல் மணம் புரிந்துகொண்டார். இரண்டு வீட்டாருமே அவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். தன் நண்பரின் உதவியுடன் அவர்கள் குடியிருக்க வாடகை வீட்டை பார்த்துவிட்டார். அந்த நண்பரின் உதவியுடனே தனக்காக வேலையும் தேடிக்கொண்டார். தன் மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினார். அவள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே தன் கஷ்டங்கள், வாங்கும் கடன்கள், வரும் செலவுகள் பற்றியெல்லாம் பெரிதாக பகிர்ந்துகொள்ளமாட்டார். அவரை பொருத்தவரை அவளும் பிள்ளைகளும் சந்தோஷமாக இருந்தால் போதும்.

கணவனின் காதல் சிறையில் ஆசையாய் அடைப்பட்டுக்கொண்டவள் உலகம் தெரியாத பெண்ணாகவே வாழ்ந்தாள். இனி அவளின் எதிர்காலம் என்ன? 



வாசுதேவனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு திரும்பிவிட்டாள். வீட்டின் உரிமையாளர் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியவர குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த வீட்டின் மூத்த மகனான மகேஷ் அவனால் முடிந்தவரை அவர்களுக்கு மன ஆறுதல் அளித்து, பெரும்பாலான நேரத்தை அவர்களுடனே செலவிட்டான். எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்லிக்கொடுத்தான். 

அவர்களின் ஆறாத்துயர் பற்றி முகநூலில் கட்டுரை வெளியிட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துக்கொடுத்து உதவினான். கணவனின் கடன் பெரிய அளவில் இருப்பது தெரியவர மேலும் கலங்கினாள் அவள். தையல் கலை தெரிந்திருந்ததால் தையல் எந்திரங்கள் வாங்கி வேலை செய்யலாம் என்று மகேஷ் ஆலோசனை கூற அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. வேலைநேரத்தில் இறந்ததால் ஒப்பந்தக்காரர்களே தூய்மைப் பணியாளர்களின் மனைவிகளுக்கு அவர்களின் சார்பில் வேலை கொடுத்துவிட,   வாசுதேவன் பணியாளர் இல்லாததால் வெறும் பத்து லட்சத்தோடு நிறுத்திக்கொண்டது அரசு.



“சாப்பிடு சுபாக்குட்டி. ஏன் இப்படி படுத்துற? இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று தன் மூத்தமகளை கடிந்துகொண்டிருந்தாள். “ என்னால சாப்பிட முடியல அம்மா! எனக்கு அப்பா வேணும். படிக்கமுடியல, தூங்கமுடியல, விளையாட முடியல. எல்லா இடத்துலையும் அப்பாதான் தெரியிரார். நான் இனி அப்பாகிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கமாட்டேன். நல்லா படிச்சு நல்ல பொண்ணா இருப்பேன். எனக்கு அப்பா மட்டும் கூட இருந்தால் போதும்மா.” என்று தன் அன்னையின் மடி சாய்ந்து அழுதாள் வாசுதேவனின் செல்லக்குட்டி சுபத்ரா.

தேவகியின் செல்ல மகனாக கண்ணனும் வாசுதேவனின் பாசக்கிளியாக சுபத்ராவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். சந்தோஷத்தால் கட்டிய அழகான குருவிக்கூட்டைப் பிரித்ததில் விதிக்கு என்ன லாபமோ. சுபத்ராவின் அழுகையை கேட்டபடி வந்த மகேஷ், “அப்பா உன் கூடவேதான் இருக்கார். உன்னை தெய்வமாய் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார். உன் சந்தோஷத்தில் அவர் கண்கள் சிரிக்கும். உன் துக்கத்தில் அவரின் இதயம் இரத்தம் வடிக்கும். நீ நல்லா சாப்பிட்டு நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு ஆத்ம நிம்மதி கிடைக்கும். சாப்பிடு.” என்று தேற்றினான். அவன் பேசுவது கொஞ்சம் புரிந்தாலும் அழுது துடித்தாள் பெண். 

மகளின் அழுகையை காணக்காண தேவகிக்கும் அழுகை பொங்கியது. “உங்க அப்பா போனபோதே நானும் போயிருப்பேன். உங்களுக்காக மட்டும்தான் உயிர் வாழ நினைக்கிறேன். நீங்களும் இப்படி பண்ணா நான் என்ன செய்வேன். உங்க அப்பா வேணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா. நானும்தான் அவர் அன்புக்கு ஏங்குறேன். என்ன செய்யறது நம்மை இப்படி விட்டுட்டு போயிட்டாரே பாவி மனுஷன்” என்று மகளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள். “என்ன இது? அவ சின்ன குழந்தை. அவளுக்கு நீங்க ஆறுதல் சொல்லணும். நீங்களே சின்ன பிள்ளை போல அழுதா அவளுக்கு யார் ஆறுதல் சொல்றது. உங்க பிள்ளைகளுக்காக நீங்களும், உங்களுக்காக அவங்களும் வாழ்ந்தே ஆகணும். முதல்ல கண்ணை துடைச்சிட்டு அவளை சமாதானபடுத்தி சாப்பிட வையுங்க.” என்று சற்று அழுத்தமாகவே கூறினான் மகேஷ். பிள்ளைகளை அதட்டி உருட்டி சாப்பிட வைத்துவிட்டு பெயருக்கு தானும் உண்டுவிட்டு எழுந்தாள். அவர்களுக்கு மேலும் சமாதானம் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, இவர்களும் உரக்கத்தைத் தழுவினர்.



பிள்ளைகளுக்காக ஓரளவு தேறிக்கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள தொடங்கியிருந்தாள் தேவகி. வாசுதேவன் வாங்கியிருந்த கடனை ஓரளவு அடைத்துவிட்டாள். தையல் எந்திரங்கள் வாங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை வங்கியில் பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியாக போட்டுவிட்டாள். நாட்கள் அதன் போக்கில் செல்ல, விதி விடுவேனா என்று துறத்தியது. “டேய் ஸ்கூல்லருந்து வந்ததிலிருந்து போன் பாக்குற. ஒழுங்கா வெச்சிட்டு போய் படி” என்று சேட்டைக்கார கண்ணனை மிரட்டினாள் தேவகி. “அம்மா, இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ்.” என்று சொல்லி சொல்லியே நேரத்தை கடத்தினான் அந்தக் குறும்புக்காரன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொங்கி எழுந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக போனைப் பிடுங்கிக்கொண்டு நன்றாக வெளுத்து வாங்கிவிட்டாள். கோபம் அடங்கியதும் பிள்ளையை அடித்து திட்டிவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவனை கொஞ்சி கெஞ்சி சாப்பிட தின்பண்டம் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள். சற்று நேரத்தில் கண்ணன் சைக்கிளை எடுத்து போவது தெரிந்தது. பிள்ளை விளையாடிட்டு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.



வெகுநேரம் சென்றும் பிள்ளை வராததை எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது. வாசலிலேயே விழிவைத்து காத்திருந்தாள். அப்போது தன் நண்பர்கள் சூழ இரத்த களரியோடு வந்தான் கண்ணன். “டேய். கண்ணா என்னடா இதெல்லாம் என்ன ஆச்சுடா. ஐயோ கடவுளே” என்று கத்தினாள். “அவனை நாய் கடிச்சிடிச்சு ஆண்ட்டி” என்றான் வந்த நண்பர்களுள் ஒருவன். நாயின் கோரதாண்டவத்தை தன் செல்ல பிள்ளையின் காலில் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். “பாவி. சொன்னா கேட்டாதானே. இப்படி வந்து என் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டிட்டியே.” என்று புலம்பியபடி உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள். சிகிச்சை அளிக்கப்பட்டது. மகனின் வலியை காணக்காண துடித்தது அந்த பேதை உள்ளம். ஆயிரக்கணக்கில் செலவழிந்தபோதும் மகன் சரியானால் போதும் என்றிருந்தது. ஒருமணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.



“அம்மா. ரொம்ப வலிக்குது அம்மா ஏதாவது பண்ணுங்க. என்னால தாங்க முடியல. ரொம்ப ரொம்ப எரியிது. வலிக்குது அம்மா.” என்று துடித்தது ஏழாம் வகுப்புப் படிக்கும் அந்தச் சின்ன குறுத்து. மகனின் தலையை கோதிக்கொடுத்து, ”சரியா போய்டும். அப்பா நம்ம கூட சாமியா இருக்கார். அவர் உன் வலி போக்குவார். நம்மை கலங்க விடமாட்டார்” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள். பதினோறாம் வகுப்பு படிக்கும் சுபத்ரா தம்பியின் இன்னொரு அன்னையாகி அவனின் கைப்பிடித்து ஆறுதல் கூறினாள். “கவலப்படாதடா தம்பி நீ சீக்கிரம் சரியாய்டுவ. அம்மா போல நானும் உன்னை என் உயிராய் பார்த்துப்பேன். நம்ம சீக்கிரம் விளையாடலாம். இந்தா சாப்பிடு” என்று தன் கையிலிருந்த இட்டிலியை தம்பிக்கு ஊட்டினாள். மகளின் அக்கரையிலும் அன்பிலும் அன்னையின் கண்கள் பனித்தது. இந்த பாசமும் புரிதலும் இவர்களிடம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று தன் வாசுவிடம் வேண்டிக்கொண்டாள்.

மேலும் நான்கு இட்டிலிகளைக் கொண்டு வந்து தாயின் அருகே அமர்ந்து அவளுக்கும் ஊட்டினாள் சுபாக்குட்டி. ”சாப்பிடுங்க அம்மா. எங்களுக்காக. ப்ளீஸ். அப்பாதான் இல்லை. எங்களுக்கு நீங்களாவது கடைசிவரை வேணும் அம்மா.” என்று மகள் கண்கள் கலங்க, துக்கம் தொண்டையை அடைத்து உணவு உள்ளே செல்ல மறுத்தாலும், பிள்ளைகளுக்காக உண்டாள். பின் சுபத்ராவையும் சாப்பிடவைத்து இருவரையும் தன் மடிசாய்த்து தூங்க வைத்தாள். உரக்கம் வருமா அவளுக்கு? கணவனின் புகைப்படத்தைப் பார்த்து உள்ளம் ஊமையாய் அழுதது. இன்னும் இதுபோல எத்தனையோ பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் அவள் தனியே எதிர்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் இருக்கும்போது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தும், தனிமையில் கணவனின் நினைவுகளுடன் போராடியும் நாட்களை கழிக்க வேண்டும். கைம்பெண்ணின் சடங்குகள் ஒழிந்திருக்கலாம். ஆனால் காதல் பெண்களின் உள்ளத்தை மாற்ற இயலுமா?

அவளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியில் சரி செய்ய முடியும். அதற்கு மற்றவரும் முன் வரலாம். ஆனால் கட்டியவனின் அன்பு? மறு காதலும் மறுமணமும் மருந்தாய் இருக்கலாம். அது அவரவர் உள்ளத்தையும், உள்ள சூழலையும் பொருத்ததாயிற்றே. லட்சத்தில் ஒரு வாய்ப்பாக அவள் மறுமணம் புரிந்தாலும், அதுவரை அவளின் நிலை? தன் காதல் கண்ணாளனின் புகைப்படத்தைப் பார்த்தபடி கண்களில் வழியும் நீரோடு உரங்கிப்போனாள். ஜன்னலிலிருந்து வீசிய சில்லென்ற காற்று அவள் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுச் சென்றது.

முற்றும்.


 

Monday, 15 August 2022

காலதேவனின் தீர்ப்பு.


நதிக்குத் துணை இரு கரைகள் மட்டும்தான். ஒரு நல்ல சிந்தனையாளனுக்குத் துணை, அவனைப் போல் சிந்திக்கும் சக மனிதந்தான். என்ற வரிகளுக்கேற்ப ஒரே அலை வரிசையில் சிந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, பழகி காதல் கொண்டால் எப்படி இருக்கும்? காமம் கடந்த காவியக் காதலாக இருக்கும். காதலர்களின் உடல்கள் அழிந்தாலும், அவர்களின் உள்ளமும், அதில் பொங்கிவந்த காதல் வெள்ளமும், என்றும் வாழும். அழகான அரிதான காதலென்றால் அது இதுதான்.



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல, அன்பு, பண்பு, அழகு, அறிவு , ஒழுக்கம், சமூக அக்கறை, என்று அனைத்தையும் வார்த்தெடுத்த தங்கச் சிலைகளாக மனிதர்கள் பிறப்பது எல்லாக் காலத்திலும் மிக மிக அரிதான ஒன்று. அப்படி அரிதாகப் பிறந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், உயர்ந்த காதலையும், குருஞ்சி மலர் என்னும் நாவலில் தமிழ் தூரிகை கொண்டு ஓவியம் வடித்திருக்கிரார் என் உள்ளத்தைத் தன் எழுத்துக்களால் உரையவைத்து, உருகவைத்த எழுத்தாளர் திரு நா. பார்த்தசாரதி அவர்கள்.



அரவிந்தன்: அரவிந்தன் என்பதர்க்கு அறிவார்ந்த விந்தை மனிதன் என்று பொருள். கம்பீரமான அழகும், கவர்ந்திழுக்கும் புன்னகையும், கருணை உள்ளமும், வற்றாத அருவி போன்ற அறிவும் கொண்டவனாக இருப்பினும், அகந்தையோ, ஆணவமோ சிறிதும் இல்லாமல், அன்பு, அறம், அகிம்சை இவை மூன்றும் தானும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் போதிக்கும் விந்தை மனிதன். சாப்பிடுவதில்கூட, சமூகத்திற்குப் போகத்தான் தனக்கு என்று நினைக்கும் தன்னலமற்ற இளைஞன்.



பூரணி: பூரணி என்பதற்கு பூரணத்துவம் என்று பொருள். தங்கப் பதுமை போன்ற அழகும், தேனருவி போன்ற தமிழும் கொண்ட தன்மானம் நிறைந்த பெண்ணாய்த் திகழ்பவள் பூரணி. பண்புக்கும் பெண்மைக்கும் இலக்கணமாய், உடன் பிறந்த தம்பி தங்கைக்கு இளம் தாயாய், அவர்களுக்கு அமுதளிப்பதில் அன்னபூரணியாய் வாழ்ந்து, சமூக நலனுக்கும், தமிழ் பணிக்கும், தன்னைப் பூரணமாய் அர்ப்பணித்தவள் பூரணி.



பண்பின் சிகரங்களான இவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், கடந்துவந்த இன்ப துன்பங்களும், கடக்க முடியாத மெல்லிய உணர்வுகளின் கோர்வையே இந்த குறிஞ்சி மலர் கதை.



தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த பேராசிரியரும் பூரணியின் தந்தையுமான அழகிய சிற்றம்பலத்தின் இறப்பிற்கு பிறகு கவலைகளை மட்டுமே தன் ஆதரவாக கொண்டு, குடும்ப பொறுப்பை தலையிலும், பசி மயக்கத்தை உடலிலும், பாச மயக்கத்தை உள்ளத்திலும் கொண்டிருந்த நேரத்தில்தான் மீனாட்சி அச்சகத்தில் பணிபுரியும் சமூக நலம்விரும்பியான அரவிந்தனை சந்திக்கிறாள் பூரணி. தந்தையின் புத்தகங்களை வெளியிடும் நிமித்தமாக தன்னை காணவரும் அரவிந்தனை திருடி தன் உள்ளத்துக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள் அவள். தமிழர் பண்பு பட்டினியால் தெருவில் மயங்கிக்கிடந்தபோது  தன் கவியுள்ளம் பொங்க பாடும் அரவிந்தன், அவளை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பக்தியும் காதலும் கலந்த உள்ளத்தை அவளுக்காய் அற்பணிக்கிறான்.



அதன்பிறகு இருவரின் இதயத்திலும் காதலோடு உயர்ந்த கருத்துக்களும் மணத்தது. இரசாயன மாற்றம் நிகழும் பேச்சுக்களை பேசி மகிழும் சராசரி காதலர்களாக இல்லாமல் சமூக சிந்தனைகளைத் தூண்டும் சீறிய கருத்துக்களைப் பேசினர். புற அழகையும் உள்ளத்து உணர்வுகளை எழுதுவதில் கூட எழுத்தாளர் தமிழோடு சுவையாக விளையாடி இருப்பது என்னைக் கவர்ந்தது. எண்ணங்களால் பாலம் அமைத்து இருவரும் கைக்கோர்த்து நடந்தனர். மணமாலையை மனதுக்குச் சூட்டி உவகைக் கொண்டனர்.

காதலன் காதலியை கௌரவித்து உயரத்தூக்கிப் பார்த்து ரசிப்பதே உண்மைக் காதல். கருத்துப் புதையலை தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் காதலியை உலகறிய செய்ய பாடுபடும் அரவிந்தன், உலகை நேசிக்கும் அரவிந்தனின் உடல் நலனையும் உள்ளத்து நலனையும் பேணிக்காக்க தவிக்கும் தாயாய் பூரணி. இதைவிட இலக்கிய காதலுக்கு அடையாளம் வேறென்ன வேண்டும்?



அழகிய கொடிகளாக இருப்பினும் அது நன்றாக படர கொழுகொம்பு துணையாக வேண்டும். அதுபோல அரவிந்தனும் பூரணியும் வாழ்வில் உயர்ந்தோங்க துணை புரிந்த கொழுகொம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. "களவுக்குப் போகும் பணத்தை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா, பூட்டுக்கு மேலே பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா” என்று நினைக்கும் வள்ளண்மை கொண்ட மங்கலேஸ்வரி அம்மா பூரணிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் இன்னொரு தாயானார். முதலாளியாக சம்பளத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடாமல் அரவிந்தனுக்கு தேவையானதைச் செய்து தோள்கொடுக்கும் தோழனாய், தாங்கிப்பிடித்து நல்வழிப்படுத்தும் தகப்பனானார் மீனாட்சி சுந்தரம்.



நெருங்கிய தோழிகளாக இருப்பினும் இம்மியளவும் என் கவலைகளை யாரிடமும் வெளியிடமாட்டேன் என்று தன்மானம் காக்கும் பூரணியின் தேவைகளை தானாக புரிந்துகொண்டு நாங்கள் எங்கள் தோழிக்கு செய்வோம் இது எங்கள் கடமை. இதை மறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை என்று உரிமைகீதம் பாடும் கமலாவும் காமாட்சியும் பூரணி சாய்ந்துகொள்ளும் தோள்களானார்கள். அமைதிக்கு இலக்கணம் அரவிந்தன் என்றால், புரட்சிகரமான கருத்துக்களுக்கு இலக்கணம் முருகானந்தம். முரட்டுத் தோற்றமாக இருந்தாலும் மென்மையான மனம் கொண்ட முருகானந்தம், எதிர்மறை கருத்துக்களை நாங்கள் கொண்டிருந்தாலும் எங்கள் நட்பை எவரும் பிரிக்க இயலாது என்று சொல்லி நட்பிற்கு இலக்கணமானான்.



அன்னையாய் வாழும் அக்காவிற்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் அவள் கஷ்டங்களை புரிந்து பாசத்தை மட்டுமே பரிசளிக்கும் தம்பி தங்கை பூரணியின் குழந்தைகளானார்கள். பூரணியின் சொற்பொழிவையும் அவள் அன்பான அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் மங்கலேஸ்வரியின் மகள்களான வசந்தாவும் செல்லமும் பூரணியின் உடன்பிறவா சகோதரிகளானார்கள். நல்லவர் நல்லவரோடு சேரும்போது நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு நல்லதொரு சான்று மேலே குறிப்பிட்டுள்ள கதா பாத்திரங்கள்.



அழகான பறவைகள் மீட்டும் அனுராகங்களுக்கிடையில் அபஸ்வரம் தோன்றுவதைப் போல இக்கதையிலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். கடைசிவரை கோபம் கொள்ளக்கூடாது, குறுநகைக்கொண்டே வாகைசூட வேண்டும். அகிம்சையே அரவிந்தனின் கொள்கையென வாழ்ந்த அரவிந்தனின் உள்ளத்தையே உலுக்கிப்போடுகிறது இவர்களின் செயல். சில மனிதர்கள் தன் வேலையை தானும் ஒழுங்காக செய்யமாட்டார்கள், அதே வேலையை அடுத்தவர்கள் முறையாக செய்ய நினைத்தாலும் விடமாட்டார்கள். இந்தக் கதையில் வரும் புதுமண்டபத்து அச்சகக்காரரை போல. பர்மாவிலிருந்து சூதும் சூட்சுமத்தையும் சம்பாதித்துக் கொண்டுவருகிறார் பர்மாக்காரர். இவர்களின் வரவால் அழகாய் அமைதியாய் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அரவிந்தன் பூரணி வாழ்க்கையே ஆட்டம் காண்கிறது. நேர்மைக்காக இவர்களிடமிருந்து அரவிந்தன் பெறும் கொடுமையான பரிசுகள் ஏராளம்.



உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கும் அரவிந்தன் பூரணியை மணம் முடித்துக்கொள்வதுதான் மகத்தான லட்சியம் என்று வற்புறுத்துகிறார்கள் அவர்களின் நலம்விரும்பிகள். எண்ணத்தால் வாழும் வாழ்க்கை மட்டும் சில காலத்திற்கு போதும் என்கிறான் அரவிந்தன். என்னவன் எண்ணம் எதுவோ அதுவே என் எண்ணம் என்கிறாள் பூரணி. மனிதவெள்ளத்தின் நடுவே ஒளிதீபம் ஏந்திச் செல்லும் கனவு காணும் பூரணி ஒருபுறமும், மனிதகுலத்தில் பிறந்த சராசரி பெண்ணாக தன் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் பூரணி ஒரு புறமுமாக அரவிந்தனின் இதயத்தில் ஆட்சி செய்து அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவிட்டார்கள். இதில் யாருடைய கனவு நிரைவேறிற்று? இரண்டு பூரணிகளுள் அரவிந்தன் அடைந்த பூரணி யார்? உயரே செல்லும் போட்டியில் வெற்றிப்பெற்றது யார்? இதையெல்லாம் நான் சொன்னால் சுவை குன்றிவிடும். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது சுதந்திரமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படி கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் என்பதே சுதந்திரம். இதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் தரணியே பண்பட்டு விளங்கும்.



ஆண்டவன் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் காலம் என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. பூமி சுழலும்போது மாறுவது காலங்கள் மட்டுமல்ல அனைவரது கோலங்களும்தான். சில காலம் இன்பத்தில் மிதந்தவர் பல காலம் துன்பத்திற்கு ஆளாகலாம். பல காலம் துன்பத்தில் உழன்றவர் சில காலமாவது இன்பமாய் வாழலாம். இது காலதேவனின் கணிக்க முடியா தீர்ப்பு. நடமாடும் மனிதர்களான நாம் அனைவருமே ஓடும் காலச்சிறையில் ஆயுள் கைதிகள். சுதந்திரமாய் சுற்றிவரும் பூமியில் நாம் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதிகள். இந்த அழுத்தமான உண்மையை உணர்வோர் மட்டுமே இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சமநிலை இதயத்தோடு இறுதிவரை இவ்வுலகில் உய்ய முடியும்.



தமிழென்னும் உளிகொண்டு காலத்தின் மதிப்பையும், காதலின் மகத்துவத்தையும், பண்பாட்டின் புனிதத்தையும், மனிதநேயத்தின் மாண்பையும் எல்லோரது இதயத்திலும் அழியா சிற்பமாய் செதுக்கிய எழுத்தாளர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


                             

Saturday, 13 August 2022

உலகத்தொடு ஒட்ட ஒழுகல்

வணக்கம் நண்பர்களே. இந்த விமர்சனக் கட்டுரை எனது நெருங்கிய நண்பரான திரு. தர்மபாலன் எழுதியது. கண்ணன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் அவர், பேச்சு, பாட்டு, பகுத்தறிவு சிந்தனை, மொழித்திறன் பொது அறிவுக் கூர்மை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குபவர். அவர் எழுத்துலகிலும் தடம் பதிக்க முடிவு செய்து எழுதியிருக்கும் முதல் பதிவு இது. படித்துவிட்டு தங்களின் மேலான கருட்துக்களைச் சொல்லுங்கள்.


உலகத்தொடு ஒட்ட ஒழுகல்.

அனைத்தையும் துறந்துவிட்ட பட்டினத்தடிகள், ஒருமுறை வயலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தண்ணீர் எடுக்கப் போன இரண்டு பெண்களில் ஒருத்தி அவரைப் பார்த்து, இவர் எவ்வளவு பெரிய துறவி தெரியுமா என்று கேட்டாள். அதற்கு இரண்டாமாவள் இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய துறவி இல்லை, அப்படி உண்மையான துறவியாக இருந்திருந்தால் வயலில் படுத்து வரப்பில் தலை வைத்து உறங்கமாட்டார் என்று சொன்னாள். அந்தப் பெண்கள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டு போனதைக் கவனித்த பட்டினத்தடிகள் உடனடியாக வரப்பிலிருந்து தலையை எடுத்து வயலில் வைத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பிவரும்பொழுது இதைக் கவனித்த இரண்டாம் அவள், நீ சொன்னதைக் கேட்டு தனது தவறைத் திருத்திக் கொண்ட இவர் உண்மையான துறவிதானே என்று கேட்டாள். அதற்கு முதல் பெண் இப்போதும் நான் இவரை ஒரு துறவி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன், ஏனென்றால், இவர் மற்றவர்கள் பேசிக் கொண்டு போவதையெல்லாம் ஒட்டு கேட்கிறார் என்று சொன்னாள். அப்படியானால், துறவு என்பதன் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பது பற்றி ஆராயும் விமர்சனக் கட்டுரைதான் இது.



பொதுவாக, துறவு என்பது உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதைக் குறிக்கும். திருக்குறள்கூட அவ்வாறுதான் சொல்கிறது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்பதுதான் அந்த குறள். ஆனால் இந்தக் கருத்தை வேறுவிதமாக அணுகுகிறார் தமிழ் சிறுகதை உலகின் மகத்தான ஆளுமையான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய துறவு என்ற சிறுகதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.



சிதம்பரத்திலுள்ள ஒரு தெருவில் இரண்டு பக்கத்துவீட்டுப் பெண்கள். அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அவ்வீட்டு வாசலில் அமர்ந்தபடிப் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. பங்கஜம் மற்றும் மரகதம் என்ற அவ்விரு பெண்கள் நிகழ்த்திய உரையாடலின் சாரம் என்பது பங்கஜத்தின் கணவர் சதாசிவம் பிள்ளை மற்றும் அவளது மூத்த மகன் சோமுவைப் பற்றியது. குறிப்பாக சோமுவைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறாள் பங்கஜம். அதற்குக் காரணம் அவனது மிதமிஞ்சிய பக்தி. எட்டாம் வகுப்புத் தேர்வில் அவனுக்கு ஏர்ப்பட்ட தோல்விக்குப் பிறகு, அவனது தந்தையின் கண்டிப்பான உத்தரவு அவன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது. விளையாட்டு உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கும் அவனுக்குக் கிடையாது. அவனது மற்ற இரண்டு தம்பிகளும் தங்கை ராஜியுடன் விளையாடிக் கொண்டிருக்க சோமுவிற்கு மட்டும் எப்போதும் படிப்புதான். மகனின் நிலை கண்டு இரக்கமுற்ற தாய் பங்கஜம், ஒரு நாள் சோமுவை அழைத்து கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபட்டு வருமாறும் அப்பாவிடம் தான் சொல்லிக் கொள்வதாகவும் கூறுகிறாள். சதாசிவம் பிள்ளைக்கும் இந்த யோசனை பிடித்துப் போகவே, தினமும் தானே அவனைக் கோயிலுக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அந்தத் தருணத்தில் அங்கு நடைபெற்ற சாமி அருளாணந்தரின் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவால் பெரிதும் கவரப்படுகிரான் சோமு. அங்கு அந்த சொற்பொழிவு ஒரு மாதம் நடைபெற்றது. விளைவு, 15 வயது மட்டுமே நிரம்பிய சோமுவிற்கு ஏற்பட்ட அதீத பக்தி. இதனை எழுத்தாளரின் வார்த்தைகளில் பார்க்கலாம்.



15 வயது என்பது ஒரு மனிதனுக்குப் பித்துப் பிடிக்கிற வயது. அது, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ, சமயப் பித்தாகவோ, ஏன் பெண் பித்தாகவோகூட இருக்கலாம். நம் சோமுவிற்குப் பிடித்திருப்பது வேதாந்தப் பித்து. சாமி அருளாணந்தரின் சொற்பொழிவைக் கேட்கத் தொடங்கிய பிறகு அவனது பக்தி என்பது சாதாரணமாக தோன்றி, ஜீவகாருண்யத்தில்  வளர்ந்து, இறுதியில் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதில் போய் முடிகிறது. சோமுவைப் பொருத்தவரை, இவ்வுலகிலுள்ள எல்லாம் பொய். வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். படித்த படிப்பு, பார்த்த வேலை, சேர்த்த செல்வம் உட்பட இவ்வுலகிலுள்ள எதுவுமே நிரந்தரமில்லை. மனிதனால் வெல்ல முடியாதது மரணம் மட்டுமே. அப்படியானால், பிறந்த இம்மண்ணில், பல்வேறு பாவங்களைப் புரிந்து மீளா நரகத்தில் வீழாதிருக்க, இமயமலையில், பனிப்படலத்திற்கு நடுவில் தவமிருக்கும் லோக குருவின் பாதங்களைச் சரணடைவதுதான் ஒரேவழி என்று முடிவு செய்து, தனது உடைமைகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இமயமலைக்குப் பயணமாகிறான் சோமு.



அதிகாலை எழுந்து, சிதம்பரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று, தான் இத்தனை காலம் சேமித்துவைத்த ஒரு ரூபாயை, அங்கிருந்த ஒரு டஜன் பண்டாரங்களுக்குத் தானம் செய்த பிறகு, குளத்தங்கரைக்குச் சென்று தலையை மொட்டையடித்த பின்பு தனது நெடும்பயணத்தைத் தொடங்குகிறான் சோமு. கதை முழுவதையும் விளக்குவது என்பது இக்கட்டுரையின் நோக்கமில்லையென்றாலும், சோமு தன்னுடைய பயணத்தின்போது சந்தித்த சில காட்சிகளைப் பற்றிக் கூறுவது இந்தத் திரனாய்விற்கு அவசியமாகிரது. குறிப்பாக, சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அவன் எதிர்கொண்ட பரங்கிப்பேட்டை சந்தை. திருவிழாபோல் காட்சியளித்த மக்கள் கூட்டம், வேடிக்கை பேசி வம்புவளர்க்கும் மனிதர்கள், கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அவ்வாறு விற்கப் பட்ட சோமுவிற்க்குப் பிடித்த தின்பண்டங்களான நாவல் பழம், வேர்க்கடலை, பட்டாணி போண்றவையென, வாழ்வின் ஒட்டுமொத்த உயிர்ப்பையும் அங்கு சந்திக்கிறான்.



அவனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஜனசந்தடி மிகுந்த அந்த சந்தையில் ஒரு மரத்தடியில் நாவல் பழம் விற்கிறாள் ஒரு பெண். அந்தப் பெண்ணிடம் வம்பு பேசி நாவல் பழம் வாங்கித் திண்ணுமொரு வயதான கிழவர், சோமுவிடமும் சில பழங்களை எடுத்துக் கொடுக்க, அவன் அதை முற்றிலும் நிராகரிக்கிறான். ஆனால் விடவில்லை கிழவர், அவனை ஆதரவுடன் அழைத்துப் பழங்களைக் கொடுக்க வேறுவழியின்றி அவற்றை வாங்கி உண்கிறான். அதற்குமேலும் அங்கு நிற்க முடியாமல் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறான்.



நேரம் செல்லச் செல்ல சோமுவிற்குப் பசியெடுக்கிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்ட சோமுவால் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாமென்றால் கையில் காசு இல்லை. அவ்வளவுதான், வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையையும் தாண்டிவிடலாமென்ற அந்தச் சிறுவனின் எண்ணம் சடுதியில் நொறுங்கித் தவிடுபொடியாகிரது. இனிமேல் ஒரு அடிகூடத் தன்னால் எடுத்து வைக்க முடியாது என்று உணர்ந்த சோமு, ஒரு ஆலமரத்தடியில் அமர்கிறான். அப்போது நன்கு இருட்டிவிட்டது. தன்னைச் சுற்றித் தானே போட்டுக்கொண்ட வாழ்வியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் தானே அவிழ்த்த பின்பு நிஜ உலகத்திற்கு வருகிறான். இருட்டு மேலும் கவிழ்ந்துகொள்ள, அவனை பயம் தொற்றிக்கொள்கிறது. அப்போது அவன் கண்ட ஒரு காட்சி, அவனை அங்கிருந்து மிரண்டோடச் செய்கிறது.



பாம்பு ஒன்று, அங்கிருந்த கடலைக் கொல்லையிலிருந்து மேலேரி, சாலையைக் கடந்து, போகிற போக்கில் ஒரு தவலளையைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு வேறு திசையில் செல்கிறது. அதே பாம்பு தன்னைத் துரத்துவதாக எண்ணிக்கொண்ட அந்தச் சிறுவன், எழுந்த வேகத்தில் மொட்டைத் தலை மரத்தில் இடிக்க, விரைந்தோடத் தொடங்குகிறான். எவ்வளவு தூரம், அல்லது எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ தெரியாது. இறுதியில் சுயநினைவிழந்து, மயங்கிச் செம்மண் புழுதியில் விழுகிறான்.



நீண்ட நேரத்திற்குப் பிறகு, மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுக் கண் விழிக்கிறான். நடுப் பாதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் அந்தச் சிறுவனை வண்டிக்காரர்கள் தங்களது வண்டியில் ஏற்றிக்கொள்கிரார்கள். வண்டியிலிருந்த கிழவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். நீ சந்தையில் பார்த்த பையனல்லவா என்று சொன்னா கிழவரைப் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டிருந்த இன்னோரு இளைஞன், இவனை உனக்கு முன்னமே தெரியுமா என்று கேட்கிறான். அதற்கு அந்தக் கிழவர், தெரியாமலென்ன, இவனும் உன்னைப்போல ஒரு பேரந்தான் எனப் பதில் சொல்கிறார். அவனைப் பற்றிய எல்லா விபரங்களையும் பரிவுடன் விசாரிக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் உதரிவிட நினைக்கும் சோமுவும், எல்லோரையும் தனது சொந்தமாகக் கருதும் கிழவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது நம் சோமுவிற்கு, எந்நேரமும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அம்மா, கண்டிப்பிலும் கொஞ்சம் கனிவு காட்டும் தந்தை, தன்னுடன் பாசத்துடன் விளையாடும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை ராஜி, இழந்த தலைமுடி, உண்ணும் சுவையான உணவு, தூங்கும் பஞ்சு மெத்தை மற்றும் தலையணை, தன்னிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பிடித்த தின்பண்டங்கள், எல்லா நிணைவுகளும் ஒருசேர ஏற்படவே, தேம்பியழுதபடிக் கிழவரைப் பார்த்துத் தன்னை வீட்டில் கொண்டுவிடுமாறு வேண்டுகிறான். இந்த அளவில் நாம் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, அதன் மையக்கருத்தை சற்று ஆராயலாம்.



நம்மில் பலர், துறவு என்பது, அனைத்தையும் துறந்துவிடுவது, என்று கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சார்ந்திருக்கும் அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள், சமூகம், இயற்கை, போன்ற எல்லாவற்றையும் நேசிப்பதுதான் உண்மையான துறவு. ஒருமுறை, பெரியார் சொன்னார், எனக்கு நாட்டுப் பற்றும் கிடையாது, மொழிப் பற்றும் கிடையாது, எனக்கு இருப்பதெல்லாம் மானுடப்பற்று ஒன்று மட்டுமே. அந்தவகையில் பார்த்தால், பல வருடங்கள் தான் சார்ந்திருந்த இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடிய பெரியாரும் ஒரு துறவிதான். இதனைத்தான், யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.



வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், என்று பாரதியாரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்று வள்ளலாரும், சொல்வதன் உண்மைப் பொருள் இதுதான். உலகம் கடந்த மனித நேயம், அதனையும் கடந்த உயிர் நேயம், இவ்விரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்குமானால், அவரும்கூட உண்மையான துறவிதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இக்கதையின் நிறைவுப் பகுதியில், தன்னை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்ட அந்த வண்டிக்கார இளைஞனை நன்றியுணர்வோடு பார்க்கும் சிறுவன் சோமு, நாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும் என்று, பதிலுக்கு நட்பும் பரிவும் காட்டும் அந்த வண்டிக்கார இளைஞன், வீட்டிற்குச் சென்ற பிறகு, சோமுவிடம் முன்பைவிட அதித பாசம் காட்டும் அவனது பெற்றோர் மற்றும் தம்பி தங்கை போன்றவை, வாழ்வின் மகோந்நதத்தை சோமுவிற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.



எனவே ஒவ்வொரு மனிதனும், தான் சார்ந்திருக்கும் இயற்கையையும், தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களையும் நேசிப்பதுதான் உன்மையான துறவு என்பது இக்கதை நமக்குக் கூறும் செய்தியாகும்.

Monday, 8 August 2022

பிறந்தநாள் கொண்டாட்டம்

                            


நாள், 25/07/2022. இரவு பதிணொன்றரை மனியலவில், ஸ்மைலிங் ஸ்டார்ஸ் என்ற கூகுல் மீட்டில் ஒவ்வருவராக இனைந்துகொண்டிருந்தனர். ”வாடா முணி, எங்க எல்லாரும்? உடனே போய் கூட்டிட்டுவா. டைம் ஆயிட்ட்இருக்கு” என்றாள் சங்கீதா. முணியின் அழைப்பின் பேரில், ஒருவர் பின் ஒருவராக இனையத் தொடங்கினர். ராஜா இன்பதாசன், பாபுல்நாத், தர்மபாலன், கங்காராஜ், லக்‌ஷ்மி ப்ரியா, அநுசுயா, என நன்பர்கள் ஒருபக்கம் கூகுல் மீட்டில் குழுமிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம், வீட்டில் கேக் வெட்டுவதர்க்கான ஏர்ப்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரந்தநாள் நாயகிய்ஆன அவள், கேக் வெட்டவும், நன்பர்களின் வாழ்த்து மழையில் நனையவும், ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.



அந்த அரை மணி நேரத்தை, அனைவரும் அரட்டையடித்தபடிக் கழித்துக் கொண்டிருக்க, கடிகார முள் சரியாக நல்லிரவு பண்ணிரெண்டு மணி காட்டியபோது, அந்தக் கோலாகலமான பிரந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிற்று.  தோழர்களின் கர ஒலியும், வாழ்த்தொலியும், ஒருசேர ஒலிக்க, வெட்டிய கேக் எடுத்து, அனைவருக்கும் ஊட்டி, தானும் உண்டாள் அந்த 33 வயதுக் குழந்தை.



 தான் வாங்கிய புத்தாடையையும், ப்லூடூத் ஹெட்செட்டையும் அவளுக்கு பரிசளித்தான் தர்மபாலன். நேற்றே தான் வாங்கி வந்திருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டு தைத்து வாங்கி வந்த மற்றொரு உடையை பரிசளித்தாள் அவளது தோழி ப்ரியா. மூவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முகத்தை கேக்கால் அலஞ்கரித்து மகிழ்ந்தனர். வாழ்த்துகளுடன் கூடிய பேச்சொலியோடும், சிரிப்பொலியோடும், அந்த நாளை நிரைவு செய்தாள், இன்னமும் குழந்தை மனம் மாராத அந்தப் பெண்.



 மரு நாள் அதிகாலையில் ஏராளமான வாழ்த்துச் செய்திகளைச் சுமந்துவந்த அலைபேசியழைப்புகள் அவளது தூக்கத்தைத் தொல்லை செய்ய, எழ முடியாமல் தூக்கத்திலிருந்து எழுந்து, அண்றைய நாள் கொண்டாட்டன்களுக்குத் தயாரானாள் அவள்.

புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புதுப்பொலிவோடு அவளுக்குப் பிடித்த கடவுள் கண்ணனை காண சென்று வந்தாள். வீட்டிலேயே தயாரித்த இட்லி, பொங்கல், வடை கேசரி போன்ற பலமான காலை உணவை உண்டுவிட்டு, வருபவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்வித்து தானும் மகிழ்ந்திருந்தாள்.



 மதியம் பன்னிரண்டு மணியளவில் அவளது தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சங்கீதா போன் செய்தாள். “சொல்லு அக்கா, பாப்பா சாயந்திரம் உனக்காக லௌலி ரோசஸ் க்லப்ல ஒரு ப்ரோகிராம் இருக்கு. உன்னை நீ ஃப்ரீ பண்ணிக்கோ டா. எதுக்கு அக்கா இதெல்லாம் வேண்டாமே.” என்றாள் வெட்க பூ பூத்தபடி. “என் அன்பு தங்கச்சிக்கு நாங்க கொடுக்குற பரிசு இது. வேண்டாம் சொல்லக்கூடாது. கொன்னுடுவேன் ஒழுங்கா நேரத்துக்கு வந்து சேரு.” என்று செல்லமாய் மிரட்டிவிட்டு காலை கட் செய்தாள் சங்கீதா.

அதன்பிறகு தனது தோழர்களான தர்மபாலன் மற்றும் ப்ரியாவுடன் ஹோட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி, சிக்கன்65, வஞ்சரமீன் வருவல், ஐச்கிரீமை சாப்பிட்டுவிட்டு, தர்மபாலன் பரிசாய் தந்த ப்லூடூத் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி உறங்கிப்போனாள்.



மாலையில் எழுன்ந்து ரிஃப்ரெஷ் செய்துவிட்டு, காஃபி பிச்கேட் பருகிய பின் சங்கீதா ஏற்பாடு செய்திருந்த ப்ரோகிராமிற்கு தயாரானாள். க்லப்ஹௌசிற்குள் சென்றபோது கங்காராஜ் இன்று பிறந்தநாள் காணும் செல்வி rj அபிநயாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பாட்டுப்போட்டி முதல் 3 பரிசு என்று அறிவித்துக்கொண்டிருந்தார். ஆம் அன்று என்னுடைய பிறந்தநாள்தான். 

முதல் முறையாக, நிறைய வாழ்த்துகளுடனும், நிறைய ஆச்சரியங்களுடனும், கோலாகலமாக அந்த நாள் கொண்டாடப் பட்டுக்கொண்டிருந்தது. பங்கேற்பாலர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். நடுவர் திருமதி சுசிலா வந்தவுடன் விழா தொடங்கியது. நடுவரின் வாழ்த்துப் பாடலும், வழக்கமான வரவேர்ப்புரையும் வாழ்த்துரையும், மேலும் சில பாடல்களும், விழாவை அலங்கரிக்க, 4 சுற்றுகளுடன் நடுவர் போட்டியை இனிதே நடத்திக் கொடுத்தார்.



 இடையில், என் பிரந்த நாள் சிரப்பாக, நான் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கியிருந்தேன். எனக்குப் பிடித்த தலைவர்களான, சிவாஜி, s.p.b., சிவகுமார், விஜெய் போண்றவர்களிடம், ஆசிர்வாதம் வாங்குவதைப் போண்றதான ஒலிக்கோப்பு அது. என்னையும் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தும் வண்ணம், சங்கீதா க்லப்பில் அந்த ஒலிக்கோப்பை ஒலிபரப்பினார். இருதியாக, எனது நண்றிகளையும், சந்தோஷ்அங்களையும் வார்த்தைகளால் வடித்து, ஒரு சிரு உரையை வழங்கிணேன். முணீஷ்வரனின் நண்றி உரையோடு, நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.



விடிந்தது முதல், அந்நாள் முடியும்வரை, மகிழ்ச்சியில் என்னை திளைக்கவைத்து, துக்கம் கொஞ்சமும் அணுகாமல் பார்த்துக்கொண்ட என் சுற்றமும் நட்பும் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். யான் பெற்ற இன்பத் துளிகளை எழுத்துகளால் கோர்த்து, நீண்ட நெடிய நாட்களுக்குப் பிரகு, உங்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறேன். என் வலைப் பதிவு உட்பட, யார் வலைப் பதிவையும், பார்க்க முடிவதில்லை. வலைப் பதிவுக்குள் சென்று நெடுநாட்களாகிவிட்டது. சில சொந்த வேலைகள் காரனமாக, எழுதுவதும் படிப்பதும் அப்படியே நின்றுவிட்டது. மீண்டும் மனதையும், மூளையையும் தூசு தட்டி புத்துணர்வோடு புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மெருகேருகிரதா என்று பார்ப்போம். நன்றி. 

Thursday, 21 October 2021

யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல

வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து நான்கு மாதங்களாகுது. படிச்சு எழுதி அதற்கு மேலயே ஆகுது.

இந்த இடைப்பட்ட மாதங்கள்ள எனக்கு வேலை கிடைச்சிருக்கு. ஆன்லைன் ரேடியோ ரேடியோ ப்லாக்‌ஷீப்ல. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை அன்புடன் அபினு கவிதை ஷோ பண்ணேன். கவிதை சொல்லி அதுக்கு தொடர்பான விஷயங்கள பேசுறது. இப்போ ஆடியோ புக்ஸ் போடுற ஷோ குடுத்துருக்காங்க. அது  இன்னும் ஒலிபரப்பாக ஆரம்பிக்கல. ப்லே ஸ்டோர்ல bs value செயலி இன்ஸ்டால் பண்ணி உள்நுழைவு செய்து, மைக் லைவ் ரேடியோனு வரும், கிலிக் பண்ணா ரேடியோ பேனர் ப்லே இல்ல லைவ் ரேடியோ வரும். அத கிலிக் பண்ணனும். சர்வதேச உரிமம்.

சின்ன சின்ன மின்மினிகள் என்ற மின்நூல் வெளியிட்டேன். கவிதை தொகுப்பு. கூகுல்மீட்ல ஒரு சிறிய விழா நடத்தி வெளியிடப்பட்டது. அதன் அமேசான் லின்க் கீழே.

சின்னச் சின்ன மின்மினிகள்


முதல்ல ஒரு பழைய ஃபோன் வாங்கி தொலைச்சிட்டு மறுபடி புது ஃபோன் வாங்கியிருக்கேன். கிலப்ஹௌஸ், அலுவலகம்  மூலமா நிறைய புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. சொல்லிக்கிற அளவு இதுதான் நடந்தது.

கிலப்ஹௌஸ்ல அறிமுகமான ஒரு நண்பரின் கவிதையோடு இந்த பதிவை முடிக்கிறேன்.


யாரோ அனுபவிச்சவன் எழுதுனது போல 


என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது


எவனோ ஒருவன் போல் நான்

அமர்ந்து கொண்டிருக்கிறேன்


தாடி வளர்க்கும் வயதும் இல்லை

போடி என்று சொல்ல மனமும் இல்லை..


என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்


அவரோடு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்கிறாள்


கன்னத்தில் முத்தமிட மறுத்தவள்


அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டுக்

கொண்டிருக்கிறாள்


அழகான கூரைப் புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்

இருக்கும் நெற்றியில்

நெற்றிச்சுட்டி


நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்


அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது


அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை

அணிந்திருக்கிறாள்


அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல


யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள்


இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்


ஏமாந்தவன் எதிரிலே இருக்க


இன்னொருவனுடன் உனக்குத் திருமணம்


இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்து விட்டு எரிகிறது


அவள் கழுத்திலே தாலி கட்டப் போகும் கணவன் இருக்கிறான் பாசத்தோடு


உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்

கங்காராஜ் MA. B.ED. MPHIL

     

Thursday, 3 June 2021

'மனம் புதிது'

புதிது, புதிது, புதிது, மனம் புதிது.

அதனினும் புதிது கடுகாய் சிறுத்தமனம்.

கண்ணுக்கு தெரியா மனமே,

கண்முன் நடக்கும் அநீதிகளை உள்வாங்கியும் உறங்கிக்கொண்டிருக்கும்

உன் குணம் புதிது.

உலகைஏ உலுக்கிப்போட வேண்டிய நீ

உன் சுற்றத்தின் சுகம் பேணும் நிலை புதிது.

நாள் மட்டும் புதிதல்ல

நொடிக்குநொடி உன் துடிப்பும்

புதிதென்பதை என்றுணர்வாய்.

ஆழ்மனம் அநீதியை எதிர்க்க துடிக்க

வெளிமனம் அதை வேடிக்கை பார்க்கும் விதத்தை

மாற்ற வேண்டும் என்பதை என்றுணர்வாய்.

குவலயத்தின் சுருக்கம்போல் குறுகிப்போகாமல்

விசாலமாகி விதியை மாற்றவேண்டும் என்பதை என்றுணர்வாய்.

கடுமையாய் உழைப்பவன் எவனோ

அதை எளிமையாய் கொள்ளை கொள்பவன் எவனோ.

எத்தனை பானங்கள் உலகிலிருந்தும்

உயிரை குடிப்பது ஏன்?

இனமே இனத்தை தின்பது ஏன்?

விரும்பிப்படற வேண்டிய வஞ்சிக்கொடி

வேட்டைக்கு உட்படுத்தப்படுகிறது.

மலர் மட்டுமா கசக்கப்படுகிறது

மொட்டுக்கள் கூட புசிக்கப்படுகிறது.

ஒரு ஆணை அவனிக்குக் கொடுப்பவளும் பெண்,

அவனைக் கட்டிக்கொண்டு கொண்டாடுபவளும் பெண்,

அவனைத் தந்தையாக்க தரணிக்கு வருபவளும் பெண்

இருந்தும் ஏன் இந்த தீராக்காமப்புண்

துடிப்பான பெண்ணை துடிக்கவைப்பதா ரசனை?

அழகுப்பதுமையை அழவைத்து சிரிப்பதா பெருமை?

எழுமனமே எழு.

இந்த வக்கிரங்களை வேறோடு சாய்க்க

வீறுகொண்டெழு.

அன்புக்குப் பஞ்சமுண்டு

அழிவுக்கு இட்டுச்செல்லும் லஞ்சத்திற்கு பஞ்சமில்லை

அதை வாங்கவும் கொடுக்கவும்

ஒருவரும் அஞ்சவில்லை

தலைமையில் பிழையிருந்தது அக்காலம்

தலைமையே பிழையாகிப்போனது இக்காலம்.

தலைவர்களின் கொள்கையெல்லாம் மேசைக்கு அழகூட்டும் அழகு சாதனம்.

வரவில்லை வரியுண்டு.

பணியில்லை  பரிட்சையுண்டு.

அறிவை வளர்க்க படித்தது அக்காலம்

அரக்க பறக்க படிப்பது இக்காலம்/

அம்மிக்குழவியின் தாளமும் ஆட்டுக்கல்லின் ராகமும் அழிந்தே  போனது.

குளிர்சாதனப்பெட்டியெல்லாம் குயவனுக்கு எதிரியானது.

குளீரூட்டப்பட்ட அறையெல்லாம் ஜன்னல் காற்றுக்கு ஜென்ம விரோதியானது.

துரித உணவெல்லாம் சத்துள்ள உணவை சப்பென்றாக்கிவிட்டது.

குளிர்பானங்கள் பழச்சாறை போ போ என்றது.

கடிதங்கள் குடும்பத்தின் அங்கமானது அக்காலம்.

மின்னஞ்சல் வேலைக்காரியானது இக்காலம்.

அம்மா அழைத்தால் அலட்சிய பார்வை

அலைபேசி அழைத்தால் அவசரப்பார்வை.

சில பாடல்கள் நம்மை உருகவைத்து உறையவைக்கும்.

சில பாடல்கள் நம்மை சலனப்படுத்தி சறுக்கவைக்கும்.

அறிவுக்கு தொடர்பற்ற நிகழ்ச்சிகளும் ஆபாச காட்சிகளும்

அழகு மனதை அழுகச் செய்யும்.

எழுமனமே எழு.

சீர்குலைந்திருப்பதை சீர்படுத்த

சினந்து எழு

அன்று பாப்பா விளையாட ஓடும்.

இன்று பாப்பா தொலைக்காட்சியை நாடும்.

அன்று பாப்பாவின் பிடிப்பு கல்வியில்.

இன்று பாப்பாவின் பிடிப்பு கணினியில்.

அன்று பாப்பாவுக்கு பால்புட்டி வேண்டும்.

இன்று பாப்பாவுக்கு சிரம் பேசி வேண்டும்.

அன்று பாப்பாவின் உணவு காய்கறி பழங்கள்.

இன்று பாப்பாவின் உணவு கடைவீதி பண்டங்கள்.

அன்று பாப்பாவின் முணுமுணுப்பு பாடப்பாடல்கள்.

இன்று பாப்பாவின் முணுமுணுப்பு படப்பாடல்கள்.

எழு மனமே எழு.

குழந்தை சிற்பத்தை  செதுக்க

பொங்கி எழு.

சுற்றித்திரியும் சிட்டுக்குருவி  எங்கே?

பட்டுப்பூச்சி தோட்டத்தில் உலவும் காட்சி எங்கே?

இயற்கை மருத்துவம் தந்த காடுகள் எங்கே?

இளைப்பாற மரங்கள் எங்கே?

மண்ணின் ஊர்வனத்திற்கு உணவாகும் அரிசிமாக்கோலங்கள் எங்கே?

மண்வாசம் அள்ளித்தரும் பொன்னான காற்று எங்கே?

நீரைத் தந்து பயிரை வளர்த்து

உயிர் வாழச் செய்யும்

மழைதான் எங்கே?

எழு மனமே எழு

இயற்கை இன்பத்தை மீண்டும் பெற

புதிதாய் பிறந்து எழு  

விழித்தெழு மனமே விழித்தெழு.

விடியலுக்காய் காத்திராமல்

அதை நீயே உருவாக்கு.

அழகு மனமே,

நீ அழிய பிறக்கவில்லை.

அநீதிகளை அழிக்க பிறந்தாய்.

அகக்குரூரங்கள் அகல அகல,

புறக்கொடுமைகள் புறங்காட்டி ஓடும்.

ஒருமுறை வீசி மறையும் தென்றல்

மறுமுறை வீசும்போது அந்த தென்றல் புதிது;

ஒருநாள் உதித்து மறையும் கதிர்

 மறுநாள் உதிக்கும்போது  அந்த கதிரவன் புதிது;

ஒருமுறை தேய்ந்து வளரும் நிலவு

மறுமுறை வளரும்போது அந்த நிலவு புதிது;

ஒருபொழுது பூத்து வாடும் மலர்

 மறுபொழுது பூக்கும்போது அந்த மலர் புதிது;

ஒருமுறை நீ உன் வக்கிரங்களை ஒழித்துவிட்டால், மனமே நீ என்றும் புதிது.

பொங்கட்டும் உள்ளம். பூக்கட்டும் புதுமை.













 

Saturday, 17 April 2021

எமனுக்கோர் எச்சரிக்கைக் கடிதம்.


அறிவற்ற காலனே, அந்தக் கலைவாணரை உன் சொந்தமாக்கியபோது ஆறுதல் பரிசாய் ஆண்டவன்

இந்தச் சின்னக் கலைவானரைத் தந்தான்.

இதுவுமா உனக்கு வேண்டும்?

உனக்கென்ன அத்தனை உயிர்பசியா?

உரிய கருத்துக்களால் எம் நகைச்சுவைப் பசியாற்றியவரை நயவஞ்சகமாய் எடுத்துக்கொள்ள!

அவர் இதுவரைச் சிரிக்க மட்டுமே அனுமதியளித்தார். அழுவதற்கும் அனுமதிக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டுப் பறித்துக்கொண்டுப் போவதுதானே!

கதைக்கத் துணை வேண்டுமென்றா கவித்துவப் பேச்சாளரைக் களவு செய்தாய்!

நீ சிரிக்கத்தானா எல்லோர் நெஞ்சிலும் நெருப்பள்ளிக் கொட்டினாய்!

எமனே! எக்காளமிட்டுச் சிரிக்காதே! விவேக்கை ஜெயிக்க உனக்கு விவேகம் போதாது.

வெற்றிக்கொண்டது விவேக்கை அல்ல. போனால் போகட்டுமென்று அவரே உனக்குப் பிச்சையிட்ட பாழுடலை!

அழுகும் உடல் யாருக்கு வேண்டும். அழகான மனதும், அவர் சிரித்தப்பொழுதும், சிரிக்கவைத்தச் சுவடுகளும் என்றும் எமக்கே.

மாண்டவர் பிரிவுத் துயரில் சிக்கி மீளமுடியாதோரெல்லாம், மாபாதகா என்றுனைச் சபிக்கையில், அந்த சாம்பலின் தாப நெருப்பு என்றேனும் உன்னைத் தாக்காமலா போய்விடும்!

கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து மண்ணுலகை ஆக்கிரமிக்க உனக்கென்ன மண்டைக்கணமோ!

கூற்றுவனே! எனக்கென்று நீயிருக்க உனக்கென்று ஒருவன் வராமலா போவான். காலக்கயிற்றால் எம்மைக்கட்டியிழுக்கும் உனக்கும் ஓர் காலன் கெடுவைப்பான். காத்திரு எந்த நொடியும்.

இப்படிக்கு. எந்த நொடியிலும் உன்னால் வஞ்சிக்கப்படலாம் என்ற நிஜத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும்  மண்ணுலகப் பிரதிநிதி. 

Wednesday, 14 April 2021

'கலாவின் காலை வணக்கம்'.



விடியும்போதே கலா தன் காதலன் நினைவுடனே கண்களை மெல்லத் திறந்தாள். எதிரே நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் காதலன் புகைப்படத்தில் அவளைப்பார்த்தபடி காதலாக சிரித்தான்.

2 நிமிடம் அவள் அதன்மீதிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பார்க்க பார்க்க கண்களிலும் இதழ்களிலும் சிரிப்பு வழிகிறது.

ஒரு  நிமிடம்தான் பின்பு பெருமூச்சுவிட்டுக்கொண்டாள். ச்செ இந்த கவின் ஏன் இப்படி செய்கிறான்? ஒரு காலத்தில் என்னை எப்படியெல்லாம் அன்போடு பார்த்துக்கொள்வான். தினமும் எனக்கு காலை வணக்கம் சொல்லி என்னை எழுப்பிவிடுவானே. இப்போது என்பொழுது அவன் நினைவுடனே தனிமையாக விடிகிறதே என்று நினைத்துக்கொண்டாள். அவன் முகம் அவளுக்கு ப்ரகாசத்தை கொடுத்தாலும் அவனின் நினைவுகள் அவள் மனதுக்கு வேதனையை கொடுத்தது.

அவள் அன்னை வட்சலா கலாவுக்கு காபியும் காலை உணவும் அவள் அறைக்கே எடுத்து வந்தாள்.

”ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா? பொம்பளப்பிள்ளையா லட்சனமா சட்டுனு எழுந்துக்காம இப்படி கவினைப்பாத்துட்டே எவ்ளோ நேரம்தான் படுத்துட்டுருப்ப? எழுந்து கிளம்பித்தொலை. எல்லாம் கல்யானத்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம்” என்றபடி உணவு மேசையில் வைத்துவிட்டு சென்றாள்.

”ஆமாம் உன் மாப்பிள்ளை மன்மதன் பாரு? அழகு சொட்டுது அதான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு தெரியும் போய் வேலையப்பாரும்மா” என்று கத்தினாள். 

கலாவும் கவினும் கல்லூரி காதலர்கள். அதோடு கலாவின் அப்பா ராகவனும் கவினின் அப்பா ராஜசேகரும் தொழில்முறை நண்பர்கள். வட்சலாவும் கவினின் அம்மா அபிராமியும் உயிர் தோழியர். குடும்ப நட்பும்,  இருவரும் ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம் என்று வளர்ந்ததால் அவர்களின் நட்பு கல்லூரியிலிருந்தே காதலாய் மாறியது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளப்போகின்றனர்.

 முன்பெல்லாம் கவினும் கலாவும் அலைப்பேசி நிருவனத்திற்கு பெருத்த லாபம் ஈட்டித்தருவார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். கலாவுக்கு காலை வணக்கம் சொல்லாமல் கவினின் பொழுதும் அதை கேட்காமல் கலாவின் பொழுதும் விடியாது. அதை கலா மிகவும் ரசித்தாள். போகப்போக பேசும் நேரம் மிகவும் குறைந்து போனது. காலை வணக்கம் சொல்வதும் நிறுத்தப்பட்டது.

 கவின் பெங்கலூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்திலும் கலா அதே நிறுவனத்தின்  சென்னைக்கிளையில் பணிபுரிந்ததால் பார்த்துக்கொள்ளும் நேரங்கள் குறைவுதான். தொலைப்பேசிதான் அவர்களுக்கு எல்லாம். ”நீ எனக்கு காலை வணக்கம் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது சொல்லு” என்று கவினுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவன் சொல்லவில்லை. நாட்கள் போகபோக அவள் மனம் வேதனையும் கோபமும் கொண்டது. அதனால்தான் இந்த சலிப்பெல்லாம்.

மனதில் எரிச்சல் மூண்டாலும், கடமையின் காரணமாக அலுவலகம் கிளம்பிச் சென்றாள் கலா. மாலையில் அவளை அழைத்த கவின் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு வெகுநேரம் பேசினான். அவள் மனதுக்கு நெருக்கமான வகையில் கலா நினைத்தபடி உன்மையான அன்பொழுக பேசினான். இதுதான் நேரம் என்று நினைத்து கலா கேட்டே விட்டாள்.

"கவின் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். "என்னமா" என்றான் அவனும் அன்புடன். "உங்களுக்கு உன்மையாவே என்னை பிடிச்சிருக்கா? எனக்கு எது பிடிக்கும்னு சொன்னாலும் நீங்க செய்யறதில்ல. ஒரு காலை வணக்கம்கூட சொல்லுறதில்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கவின். நான் உங்கள் அன்பை பெரிதும் இழக்கிறேன்" என்றாள் அழுகையை அடக்கியபடி.

"ஒரு விஷயம் நடக்கலனா அது ஏன் நடக்கலனு யோசிச்சுப்பாரு. நான் உனக்கு உர்ச்சாகமான குரலில் காலை வணக்கம் சொல்லும்போது நீ மெதுவான குரலில் சோர்வாக சொன்னால்  எனக்கு எப்படி சொல்லத்தோனும்? நீ எந்த மனநிலையில் இருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும். அதனால்தான் பெரும்பாலும் நான் சொல்வதில்லை." "சரி இதற்கு பதில்  நேரில் சொல்கிறேன்" என்றாள் கலா.

அதன்பிறகு 2 வாரங்கள் கழித்து ஒரு பூங்காவில் காலை 10 மணியளவில் இருவரும் சந்தித்தனர். சிறப்பான அலங்காரத்துடன் வந்திருந்தாள் கலா. கலாவின் கண்களுக்காக மட்டுமே தன்னை பார்த்து பார்த்து அழகு செய்துகொண்டு வந்திருந்தான் கவின். மல்லிகை பூச்சரத்தை நீட்டி காலை வணக்கம் சொல்லி கலாவை ஏறிட்டான் அவன்.

அவள் முகம் நானத்தால் சிவந்து விழிகள் மூடின. குரல் காற்றில் கலந்தபடி மெதுவான காலை வணக்கத்தை அவள் இதழ்கள் வெளியிட்டது. கவின் அந்த அழகு முகத்தையும் அவனுக்காகவே தேக்கிவைத்து வைத்து தினமும் காலை வெளியிட்ட அந்த மோன நிலையை அவன் அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டான். திரும்ப திரும்ப பார்த்தான். சே இதையா சோர்வு கவலை என்று நினைத்தேன்? கலாவின் கன்னத்தை கிள்ளி மன்னிப்பு வேண்டி இனி இந்த வெட்கத்திற்காகவே தினமும் சொல்கிறேன் என்ற வாக்குறுதி தந்தான்.

அன்றிரவு அந்த புகைப்படத்தை அவன் நாட்குறிப்பில் ஒட்டிவிட்டு, காதலியின் நானச்சிறையில் காலை வணக்கம் கூடவா அடைப்பட்டுவிட்டது? என்று எழுதினான்.

முற்றும்.












 

Saturday, 10 April 2021

’மறுபடியும்’.

வணக்கம் நண்பர்களே! உங்களுக்கு இரண்டு சந்தோஷமான விஷயங்கள் சொல்லப்போறேன். 1. சென்ற மாதம் நூல்விமர்சனக் கட்டுரைகள் புத்தகத்தை அமேசானில் வெளியிட்டேன். அதன் லின்க்

மதிமாலை


2. மறுபடியும் நான் வானொலி தொகுப்பாளராகிவிட்டேன். ரேடியோ ப்லாக்‌ஷீப் என்ற ஆன்லைன் வெப்ரேடியோல திங்கள் முதல் சனிவரை இந்திய நேரப்படி இரவு 8 முதல் 9 மணிவரை என் நிகழ்ச்சி. அன்புடன் அபி. கவிதை நிகழ்ச்சி. சர்வதேச அலவில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம்.

உங்க ஃபோன்ல playstore போய் bs value செயலி instaul பண்ணுங்க. எந்த கட்டணமில்லாம இலவசமா கேட்கலாம்.

நிகழ்ச்சிப் பற்றிய கருத்துக்களை abi.idi.0603@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். instagram ல ரேடியோ ப்லாக்‌ஷீப் தேடினா என் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வரும். நாளையிலிருந்துதான் நிகழ்ச்சி ஆரம்பம்.

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள். தவராமல் நிகழ்ச்சியை கேளுங்கள். 

Saturday, 3 April 2021

’உயிரிலே கலந்தவள்.’


காலை ஏழுமணிக்கே கண்விழித்து, முதல்வேலையாக தன் பக்கத்துவீட்டு உயிர் தோழியான கமலியைக் காணச் சென்றுவிட்டாள் லில்லி. பக்கத்து வீடு என்பதால் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே அவரவர் வீடு செல்வர். மற்றபடி, 5 வயது லில்லியும் 3 வயது கமலியும் இணைபிரியா தோழிகள். 7 வயது மகள் பூந்தளிரும் 5 வயது மகள் லில்லியும் பூவிழிராஜன் பூங்கொடி தம்பதியர் பெற்ற இரண்டு தங்கங்கள். பூவிழிராஜன் கூலிவேலை செய்ய, பூங்கொடி இல்லத்தரசியாக கோலோச்சுகிறாள்.

“வாடா லில்லிகுட்டி கமலி பாப்பா இன்னும் எழுந்துக்கலை. அவ எழுந்துக்குறதுகுள்ள நாம போய் பால் வாங்கிட்டு வரலாம் வா” என்று கமலியின் பெரிய அக்கா செவ்வந்தி அவளைத் தூக்கிக்கொண்டு பால் பூத்திற்குச் சென்றாள். கமலிக்கு ஒரு வயதாகியிருக்கும் நிலையில், உடல்நலக்கேட்டால் அவள் தந்தை முத்தழகன் தவறியிருக்க; நர்சிங் படித்த தாய் முல்லையோ ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து தன் மாமியாரின் உதவியுடன் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்கிறாள். பால் வாங்கிக்கொண்டு வந்தபோது கமலி தூங்கி எழுந்துவிட்டிருந்தாள். லில்லியை அவளுடன் விளையாடவிட்டுவிட்டு செவ்வந்தி அவள் முதல் தங்கை ரோஜாவுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.

காலையில் தொடங்கிய அவர்களின் விளையாட்டு மதியம் ஒருமணிக்கு கமலியின் பாட்டி குறிஞ்சி உணவு உண்ண அழைத்தபோதுதான் முடிவுக்கு வந்தது. சாதத்தில் சர்க்கரைக் கலந்து சாப்பிட வேண்டுமென்று கமலி அடம்பிடிக்க, லில்லி அவளை கேலி செய்து சிரித்தாள். லில்லியையும் பாட்டி சாப்பிடச்சொல்ல, அவள் தன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு ஓடினாள். வீட்டிற்கு வந்தவள் கமலி சாதத்திற்கு சர்க்கரைக் கேட்டதை தாய் பூங்கொடியிடம் சொல்லிச் சிரித்தபடி சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் தொடங்கிய விளையாட்டில் சிறிதுநேரத்திலேயே செவ்வந்தியும் ரோஜாவும் சேர்ந்துகொள்ள, இரவுவரை அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது. ஒருகட்டத்திற்குமேல் பொறுக்கமுடியாத கமலியின் பாட்டி தன் மூன்று பேத்திகளின் கண்களில் துளியோண்டு அமர்தாஞ்சலத்தைத் தடவ, அவர்கள் அழுதுகொண்டே உறங்கிவிட்டனர். அவர்கள் உறங்கிய பின்னரே வீட்டிற்கு வந்த லில்லியும் எப்போதடா காலை வரும் கமலியைப் பார்க்க என்று நினைத்தபடி உறங்கினாள்.

இப்படியே இரண்டு வருடங்களும் பசுமையாகக் கழிய, ஒருநாள் கமலியின் குடும்பம் அவர்கள் வீட்டைக் காலி செய்துகொண்டிருந்தனர். லில்லியால் அவர்களின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. கண்களில் ஏக்கம்வழியப் பார்த்திருந்தாள். இயல்பிலேயே லில்லிக்கும் கமலிக்கும் அபார ஞாபகசக்தி இருந்ததால் இந்த இரண்டு வருட நட்பும் அதன் நினைவுகளும் அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பொருட்களனைத்தும் பேக் செய்துவிட்டதால் ரோஜா லில்லியின் கரும்பலகையைக் கேட்டாள். மறுக்காமல் லில்லி எடுத்துவந்து தந்தாள். அவர்கள் காலி செய்த சில மாதங்களிலேயே லில்லியின் குடும்பமும் காலி செய்துவிட, இரு குடும்பத்திற்கும் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிற்று.

லில்லி எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது கமலி தன் அன்னையுடன் லில்லியைக் காண வீட்டிற்கு வந்தாள். “இந்தக் கமலி பாப்பா லில்லியைப் பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சது. நீங்க இங்க பக்கத்து தெருவில்தான் இருக்கிங்கன்னு கேள்விபட்டேன். அதுதான் வந்தோம்” என்றாள் முல்லை. பூங்கொடி சிரித்தபடி அவர்களுக்கு தேநீர் கொடுத்தாள். “லில்லிக்கும் கமலின்னா கொள்ளைப் பிரியம். இன்னும் மறக்காம அவளைப் பற்றியே பேசிட்டிருப்பா” என்று தன் மகளின் தலையைச் செல்லமாகக் கோதினாள் பூங்கொடி. லில்லிக்கும் கமலிக்கும் தங்கள் நட்பை நினைத்துப் பெருமையாக இருந்தது.

பேசுவதற்கு நிறைய இருந்தாலும் இருவரையும் வெட்கம் தடுத்தது. புதிதாகப் பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. சிறிதுநேரத்தில் கமலி கிளம்பிவிட, லில்லிக்கு துக்கமாக இருந்தது. அதன்பிறகு பலவருடங்கள் தோழியர் இருவரும் சந்திக்கவே முடியவில்லை. லில்லி பள்ளிப்படிப்பும், பட்டப்படிப்பும் முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள். ஊடகத்துறையில் ஒளித்திருத்துபவரான முகிலரசனுடன் திருமணமாகியிருந்தது. 

லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. தன் நண்பர்கள் அனைவரிடமும் கமலியுடனான நட்பைச் சொல்லி மகிழ்வாள். வாடகை வீட்டில் வசித்ததால் ஊர் மாறி ஊர் சென்றதில் மறுபடியும் சந்திக்கமுடியவில்லை. முகவரியைத் தொலைத்தவர்களால் அகத்தில் மலர்ந்த நட்பைத் தொலைக்கமுடியவில்லை. கமலி என்ற பெயரைக் கேட்டாலே லில்லி அவர்களின் பின்னணியை விசாரித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.

சிறுவயது தோழி கமலியின்மீது வைத்துவிட்ட அலாதி பாசத்தினாலேயே லில்லிக்கு தன் அலுவலகத் தோழியான கமலியை ரொம்ப பிடிக்கும். அவள் என்ன தவறு செய்தாலும் அவளை மன்னித்து அப்படியே ஏற்றுக்கொள்வாள். முகநூலில் கமலியின் விவரங்களைப் பகிர்ந்தும் கமலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தன் தோழி கமலி எங்கேயோ சந்தோஷமாக இருக்கிறாள். எப்படியாவது அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்போடு லில்லி தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தாள். தாய் வீட்டில் சிறிது நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமென்று வந்திருந்த வேளையில் ஒருநாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லில்லி நிதானமாக எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு காலை உணவையும் உண்டுவிட்டு டீவி பார்ப்பதும், அலைபேசியில் தன் கணவனுடன் சேட் செய்வதுமாக  நேரத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். தந்தை பூவிழிராஜன் காலையிலேயே வெளியே சென்றுவிட்டிருக்க, தாய் பூங்கொடியும் லில்லியும் மட்டுமே வீட்டிலிருந்தனர். பூந்தளிரை விழுப்புரத்தில் தனியார் அலுவலகத்தில் பெரிய பதவியிலிருக்கும் பூவண்ணனுக்கு மணமுடித்திருந்தனர். மதியம் ஒருமணிக்குமேல் “லில்லியம்மா,” என்று அழைத்தபடி சிலர் உள்ளே வந்தனர். யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் போல என்று லில்லி தன் அறையில் அமர்ந்தபடி நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர்கள் லில்லியின் அறைக்கே வந்துவிட்டிருந்தனர்.

“லில்லி, என்னை யார்னு தெரியுதா?” என்று கேட்டவளை லில்லி சற்றுநேரம் உற்றுநோக்கிவிட்டு தெரியவில்லை என்றாள். ”நாந்தான் ரோஜா கமலியின் அக்கா” என்றதும் லில்லியால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. இன்ப அதிர்ச்சி தாக்கியதில் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். “வாங்க அக்கா. எப்படி இருக்கிங்க?” “நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்க? இவன் என் தம்பி கணியமுதன். இவங்க என் குழந்தைகள்” என்று ரோஜா தன்னுடன் வந்தவர்களை அறிமுகபடுத்தினாள். லில்லிக்கு கணியமுதனைத் தெரியாதபோதும் அவர்களின் உறவுக்காரனாக இருப்பான் போல என்று எண்ணிக்கொண்டு ஒரு ஹாய் சொல்லிவைத்தாள். ”அம்மா வரலையா அக்கா?” “அவங்களுக்கு கொஞ்சம் வேலைம்மா. இன்னொருநாள் வரேன்னு சொன்னாங்க.”

ரோஜா லில்லியின் படிப்பு மற்றும் வேலைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்பொழுதே கணியமுதன் செவ்வந்திக்கும் ஃபோன் செய்ய, அவளும் தன் குழந்தைகளுடன் ஆவலாய் லில்லியைக் காண வந்தாள். அவர்களையும் லில்லி அன்போடு உபசரித்தாள். இத்தனை வருடம் கழித்தும் தன் கமலியின் குடும்பம் அவள்மேல் அதே நேசத்துடன் இருப்பதை எண்ணி பெருமையாக இருந்தது லில்லிக்கு. அவர்களைப் பற்றி கேட்டபோது இங்குதான் பக்கத்து தெருவில் அவர்களது மாமியார் வீடு என்றனர். எங்கெங்கோ அலைந்துவிட்டு மறுபடியும் பக்கத்து பக்கத்து தெருவிலிருந்தும் இத்தனை வருடம் பார்க்கமுடியவில்லை என்பதைச் சொல்லிச் சிரித்துக்கொண்டனர். ”நேத்து அம்மாவை கோவிலில் பார்த்தேன்மா. அதுதான் அவங்ககிட்ட வீடு எங்கேன்னு கேட்டேன். இங்கேயே இருந்ததால இன்னைக்கே உன்னைப் பார்க்கலாம்னு வந்தோம்” என்றாள் ரோஜா.

“நீ ரொம்ப வருஷமா தேடிட்டு இருந்த உன் தோழியை உன்கிட்ட கொண்டுவந்து சேர்த்துட்டேன் பார்த்தியா?” என்று சிரித்தாள் லில்லியின் தாய் பூங்கொடி. அனைவரும் சிரிக்க, நேரம் அழகாக கழிந்தது. ”கமலி எங்கே அக்கா? அவ ஏன் வரலை? என்னை மறந்துட்டாளா?” லில்லியின் ஆர்வத்தைப் பார்த்த ரோஜா சிரித்துக்கொண்டே, “அவ உன்னை மறக்குறதா? நீ வேறம்மா. அவ உன்னைப்பத்தி பேசாத நாளே இல்லை. அவளை தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருக்கோம். இன்னும் இரண்டு வாரம் கழிச்சு இங்க வருவா” என்றாள். “பாட்டி எப்படி இருக்காங்க அக்கா?” “பாட்டி இறந்துட்டாங்க” என்றான் கணியமுதன்.

“நான் கமலியை எங்கெல்லாமோ தேடினேன். முகநூலில் அவள் விவரங்களைப் பகிர்ந்தேன். ஆனால் முழுத் தோல்வி எனக்கு.” அதற்கு கணியமுதன், “கமலியும் அப்படித்தான். ஏதோ ஒருவிதத்தில் அவளைக் கவரும் பெண்களிடமெல்லாம் அவர்கள் பெயர் லில்லியா எனக் கேட்பாள். உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். வார்த்தையே வரவில்லை. அப்புறம் எனக்கு ஒரு காதலியிருக்கா. இன்னும் சில மாதங்களில் கல்யாணம். அவகிட்டையும் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன். அவளுமே உங்களைத் தேடினா. இப்போ அவகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா” என்றான். இவன் ஏன் இவ்வளவு ஆர்வமாக பேசுகிறான்? இவனை நான் இதற்கு முன் பார்த்ததாக நினைவே இல்லையே. இவனுக்கு எப்படி என்னைப்பற்றி தெரியும்? எப்படி என்னைப் பிடிக்கிறது? ஒருவேளை கமலி சொல்லியிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டாள் லில்லி.

அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தாள் பூங்கொடி.  “கமலி ஃபோன் நம்பர் இருக்கா? தரமுடியுமா?” லில்லி ஆவலாய் கேட்டாள். கணியமுதன் எண்களைச் சொல்ல, அதை  சந்தோஷமாகவே தன் அலைபேசியில் பதிவு செய்துகொண்டாள். அதற்குமேல் லில்லியின் முழுகவணம் அவர்களிடத்தில் இல்லை. வெளியே கேட்பதற்கு மட்டும் பதில் உரைத்தாலும், உள்ளுக்குள் கமலியிடம் பேசும் தருணத்தைப்பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தாள். தன் குரலைக் கேட்டதும் கமலி எப்படி ரியாக்ட் செய்வாள். அவளிடம் என்ன பேசலாம்? என்று யோசித்தாள். “எல்லோரும் ஒருநாள் வெளியே சென்று வரலாம்” என்று செவ்வந்தி சொன்னபோது கமலியும் இங்க வரட்டும் சேர்ந்து போகலாம் என்றுவிட்டாள். “ஒருநாள் எங்க வீட்டுக்கு வாம்மா” என்று ரோஜா அழைத்தபோது கமலியுடன் அவர்கள் வீட்டில் செலவழிக்கப்போகும் நேரங்களை எண்ணி மகிழ்ந்தாள்.

பூங்கொடியிடம் சொல்லிவிட்டு கமலியின் குடும்பம் வாசலுக்குச் சென்றுவிட கணியமுதன் மட்டும் லில்லியின் அறையில் தேங்கிநின்றான். “லில்லி, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. உங்க அம்மா அப்பாகிட்ட கூட சொல்லக்கூடாது” என்று தயக்கமாகச் சொல்ல, லில்லிக்கு படபடப்பாக இருந்தது. “என்ன? என்ன சொல்லணும்?” என்றாள் பயத்துடன். “அது. வந்து. இப்போ கணியமுதன்தான் கமலி” என்றான். அவளுக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ விவரீதம் என்றுமட்டும் உள்ளுணர்வு சொல்லியது.

“என்ன சொல்றீங்க. எனக்கு புரியலை.” “கமலிதான்மா கணியமுதனா மாறியிருக்கா.” அப்பொழுதும் அவளால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒருவேளை கமலி இறந்துவிட்டாளா? அவள் ஆவி இவனுள் புகுந்துவிட்டதா? என்று நினைத்துக்கொண்டு, “ஏன் அப்படி?” எனக் கேட்டாள். “மருத்துவர்கள் ஆண்களுக்கான அறிகுறிகள்தான் அதிகம் தெரிகிறது. அதனால் அப்படி மாறிவிடுவதுதான் நல்லது என்றார்கள். எத்தனையோ மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே இந்த முடிவு” என்றபோதுதான் அவன் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ந்தாள். உடல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவனை நன்றாக பார்த்தாள். அவளால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் கண்களுக்கு அவன் ஒரு ஆணாக மட்டுமே தெரிந்தான்.கிட்டதட்ட 20 வருடங்களுக்குமேல் கடந்துவிட்டதால் லில்லிக்கு கமலியின் முகம் நினைவிலில்லை. அவள் பெயரும் அவளுடன் பழகிய நினைவுகளும் இதயத்தில் பதிந்த அளவு முகமோ சாயலோ பதியவில்லை.

திருநிறைச் செல்வி, திருமதி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டிய என் கமலி திருநம்பியாக மாறிவிட்டாளா? கடவுளே என்ன கொடுமை இது? உள்ளுக்குள் வருந்தினாலும் மேலே விசாரித்தாள். “அப்போ கமலியைத் தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருப்பதாகச் சொன்னது?” ”அது. இந்த ஊர் உலகத்துக்கு. எங்க பேர் கெட்டுடக்கூடாதுன்னு அப்படி சொல்லி வெச்சுருக்காங்க. என்னால் உன்னிடம் பொய் சொல்லமுடியவில்லை. உனக்கு மட்டும் நான் என்னைக்கும் கமலிதான். உன்னைப் பார்த்ததும் கமலியா உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சிக்கணும் போல இருந்தது. நீ என்னைத் தேடினதைப் பற்றி தெரிஞ்சதும் கண் கலங்கிடிச்சு. ஆனா கணியமுதனா என்னால் எதையும் வெளிப்படுத்தமுடியலை.” “அப்போ நீங்க தந்த நம்பர்?” “அது என் நம்பர்தான்.” “நிஜமாவா?” “ஆமாம்மா. வேணும்னா அழைத்துப்பார்.”

சொல்லியவன் சாதாரணமாகக் கிளம்பிவிட, கேட்டவளோ பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள். மேலே யோசிக்கவே பயமாக இருந்தது. இப்போ என்ன செய்வது? என்ற கவலை வேறு. தாய் பூங்கொடி அவளை சாப்பிட அழைத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தவள் பாத்ரூமிற்குச் சென்று வெடித்து அழுதாள். நூற்றில் ஒன்றாக இது பொய்யாக இருக்கக்கூடாதா? கமலி என்னிடம் சும்மா விளையாடினேன் என்று சொல்லமாட்டாளா என்ற நப்பாசையில் வெளியே வந்து வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் கொடுத்த கமலியின் எண்ணிற்கு அழைத்தாள்.

கணியமுதன்தான் எடுத்தான். “சொல்லும்மா. இப்போ நம்புறியா?” “ம். என்னோட பழகிய நிகழ்வுகள் ஏதாவது ஞாபகம் இருக்கா?” “ஓ! இருக்கே!” “என்ன அது?” “நாம சின்ன வயசுல விளையாடும்போது கதவு லாக் பண்ணிட்டு திறக்கத் தெரியாம விழிச்சோம். கதவை ரொம்பநேரமா தட்டினோம். உங்க அப்பா வந்து சுவறேறி குதிச்சு திறந்துவிட்டு நம்மளை திட்டினார்.” இதற்குமேல் என்ன இருக்கிறது? என்னவென்று விசாரிப்பது? எப்படிப்பட்ட நிகழ்வு இது. எனக்கும் கமலிக்கும் மட்டுமான தனிப்பட்ட நிகழ்வு. இத்தனை வருடமானாலும் மறக்கமுடியாத நினைவு. அதை இவன் குரலில் கேட்கும்படி நேர்ந்துவிட்ட கொடுமையை என்னவென்று சொல்வது?  எங்கேயோ இருந்த தோழியைப் பக்கத்தில் காட்டிவிட்டு, என்பால் அவள் கொண்ட நேசத்தை நிறம் மாறாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு அதை முழுவதுமாக அனுபவிக்கமுடியாமல் செய்துவிட்டாயே விதியே! என்று வெதும்பினாள்.

”உன்னைப் பார்த்ததை எனக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். என் வருங்கால மனைவி மலர்விழியிடமும் சொல்லிவிட்டேன். அவ உன்னைப் பார்க்க துடிக்கிறா. அப்புறம் எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காகிட்ட சொன்னேன். அவங்க என்னடா சின்ன வயசு தோழிய பார்த்த சந்தோஷக்களை அப்படியே உன் முகத்துல சொட்டுதேன்னு சொல்லி சிரிச்சாங்க” என்று சந்தோஷித்தான். லில்லியால் அவன் சந்தோஷத்தில் கலந்துகொள்ளமுடியாமல் வெறும் ம் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். “நானும்தான் என் நண்பர்களிடம் சொல்ல நினைத்திருந்தேன். ஆனா இப்போ என்னன்னு சொல்றது? சின்ன வயசு தோழி கிடைச்ச சந்தோஷத்தை சொல்றதா? அவ இப்படி ஆகிவிட்ட வருத்தத்தை சொல்றதா? எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டாள். என் கமலி எங்கேயோ ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு நினைச்சேனே! இப்படியாகுறவர எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ! யார் யாரெல்லாம் அவளைக் கேலி செஞ்சியிருப்பாங்களோ! அந்த நேரத்தில் நான் அவ பக்கத்தில் இல்லாமல் போனேனே!” என்று நினைத்து அழுதாள்.

லில்லியால் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. கமலிக்கும் கணியமுதனிற்குமிடையில் அவள் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. இரண்டு மூன்றுமுறை கணியமுதனும் மலர்விழியும் லில்லியின் வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்தனர். கணியமுதன் சொன்னதைப் போல் மலர்விழிக்கும் லில்லியைப் பார்த்ததில் சந்தோஷமே.

கணியமுதனைப் பற்றி தெரிந்துகொள்ள லில்லி மலர்விழியிடம் தனியாக அலைபேசியில் பேச நினைக்க, கணியமுதனும் மலர்விழியின் எண்ணைக் கொடுத்தான்.. அந்த அலைபேசி உரையாடலில் கணியமுதனின் பதினைந்தாவது வயதில்தான் அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தது. மலர்விழிமேல்கொண்ட அலாதி காதலே கணியமுதனின் இந்த மாற்றத்திற்குக் காரணமென்று மலர்விழி சொல்ல, லில்லி கொதித்துப்போனாள். வேறு வழியில்லாமல் நடந்ததாக இதுவரை நினைத்திருந்தது வேண்டுமென்றே நடந்ததாக மலர்விழி சொல்வதை லில்லியால் ஏற்கமுடியவில்லை. “அப்படி அவளும் அவள் காதலும்தான் முக்கியமென்றால் அதன்பிறகு என்னை ஏன் சந்திக்க வேண்டும்? என்னை ஏன் இப்படி இரண்டிற்குமிடையில் தவிக்கவிட வேண்டும்? என் கமலி எங்கேயோ இருக்கான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே! அவன் காதல் என் நட்பை மறைச்சுடுச்சா? சே இவன் என் கமலி இல்லை! என் கமலியாக இருந்தால் இப்படி செய்வாளா?” என்று மனதிற்குள் கோபம் கொண்டாள்.

அதன்பின் வந்த நாட்களில் லில்லி கணியமுதனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தாள். பேசுவதைத் தவிர்த்தபோதும் லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. கமலி மட்டும் இருந்திருந்தால் இப்படியா வீட்டிலிருப்போம்? எப்படியெல்லாம் அரட்டையடிப்போம், ஊர் சுற்றுவோம், கடைக்குப்போவோம் என்று வருந்தினாள். லில்லியொன்றும் திருநம்பி திருநங்கைகளை தவறாக நினைக்கும் ரகமல்ல. சகமனிதர்களாக அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் மனம் கோனாமல் பழக வேண்டுமென்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் கமலியின் இடத்தில் கணியமுதனை வைத்துப்பார்க்க அவளுக்கு மனம்வரவில்லை. கமலிமேல் வைத்திருக்கும் அதே நேசத்தை கணியமுதன்மேல் வைக்கவும் முடியவில்லை. நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள் லில்லி. அது. கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரிப்பது என்று!

கணியமுதனிற்கு அழைத்தாள். பரஸ்பர நலம்விசாரிப்பிற்கு பின் “கணியமுதன், நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” “கேளும்மா.” “நீங்க மலர்விழிக்காகவும் அவங்கமேல வெச்சிருக்க அன்புக்காகவும்தான் இப்படி மாறிட்டீங்களா?” “இல்லம்மா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. அவளும் அப்படித்தான் நினைச்சிருக்கா. ஆனா நான் மருத்துவர் சொல்றதைக் கேட்டுதான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்லைம்மா.” லில்லிக்கு யார் சொல்வது உண்மை என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைப் பற்றி மேலே ஆராயவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டாள். அவள்தான் புது முடிவை எடுத்துவிட்டாளே! அதை கணியமுதனின் மனதை புண்படுத்தாமல் சொல்ல வேண்டுமே என்ற யோசனை மட்டும்தான் அவளுக்கு.

“கணியமுதன், நான் ஒன்னு சொன்னா தவறா நினைச்சிக்கமாட்டீங்களே?” “சொல்லும்மா.” “அது. நான் கமலிமேல் நிறைய அன்பு வெச்சுருக்கேன். அவ என் தேவதை. இத்தனை வருஷமா என் கமலி எங்கேயோ சந்தோஷமா இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தேன். மன்னிச்சிடுங்க கணியமுதன். உங்களை என்னால் கமலியாக நினைத்துப்பார்க்கமுடியவில்லை. உங்களை நான் கணியமுதன் என்ற புதிய நண்பனாக நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் உங்களை கமலியாக நினைக்கவோ அல்லது அவள்மேல் வைத்திருக்கும் அதே அளவு பிரியத்தை உங்கள்மீது வைப்பதோ என்னால் முடியாது. என் கமலிக்குன்னு ஒரு தனி இடம் இதயத்தில் இருக்கு. அது அவளுக்கு மட்டும்தான். நா சொன்னது தவறா இருந்தா மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” “பரவாயில்லைமா நீ கமலிமேல் எவ்வளவு பாசம் வெச்சுருக்கன்னு புரியுது. அந்த பாசம்தான் உன்னை இப்படி பேசவைக்குது. நீ என்னை எப்படி நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை. உன்னைப் பார்த்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி. உன் நட்பு மட்டும் இருந்தால் அதுவே போதும்” என்றான். அவனுக்கும் அவள் மனநிலை நன்கு புரிந்தது. கமலியாக இருந்த தன்மேல் அவள்கொண்ட அலாதி அன்பை நினைத்து கண்கள் கலங்கியது.

சிறிதுநேரம் பேசிவிட்டு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு அலைபேசியை அணைத்தாள். மீண்டும் கமலியின் நினைவில் ஒருபாட்டம் அழுது தீர்த்தவள், கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரித்தாள். கணியமுதனை தன் புதிய நண்பன் என்று இதயத்திற்கு கட்டளைப் பிறப்பித்தவள், கமலியைத் தன் உயிரில் கலந்து கரைத்துவிட்டிருந்தாள். இனி அவள் இயல்பாக இருப்பாள். கணியமுதனுடன் சாதாரணமாக பேசி பழகுவாள். அவளைப் பொறுத்தவரை கணியமுதன் என்ற நண்பன் வேறு. உயிரோடு உயிராய் கலந்துவிட்ட அவள் தோழி கமலி  வேறு!



 

Monday, 29 March 2021

’மது கிண்ணத்தில் மங்கையின் கண்ணீர்.’

நேரம் காலை பத்தை நெருங்கிக்கொண்டிருக்க, பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள். தாய் மாலதி கொடுத்த காலை டிஃபனையும் மறுத்துவிட்டாள். அவள் ஏனென்று கேட்டதற்கு ஃப்ரன்ஸ் பார்ட்டி கொடுக்குறாங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு ஓடினாள். சமீபத்தில் அவள் மேற்கொண்டிருக்கும் புதிய பழக்கம் இன்னும் வேகத்தையும் ஆர்வத்தையும் கூட்ட, தன் வெளிநாட்டுக் காரில் பறந்தாள் 25 வயதே பூர்த்தியான மதுமிதா.

மதுமிதா ராஜசேகரன் மாலதியின் ஒரே பெண். அடையாரில் பிரபலமான நகை வியாபாரி என்பதாலும், பரம்பறை சொத்தே கோடி பெறும் என்பதாலும் மதுமிதாவிற்கு பணத்தைச் செலவழிப்பதெல்லாம் தண்ணிப்பட்ட பாடு. ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் செலவழித்தபோதும், அவள் கண்களில் கண்ணீரோ நெஞ்சில் வருத்தமோ என்றுமே கொண்டதில்லை. அதற்காக ராஜசேகரனும் மாலதியும் நவீன நாகரீகத்தில் ஊறியவர்கள். பெண்ணிற்கு செல்லம் கொடுத்தே சீரழித்துவிட்டனர் என்றும் சொல்லிவிடமுடியாது.

நேர்மைக்குப் பேர்போன இருவரும், தங்கள் பெண்ணும் தங்களைப் போலவே இருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். அளவுக்கு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு, அருமைமகள் அதைத் தப்பாகப் பயன்படுத்தமாட்டாள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கிய மதுமிதாவின் தவறா? அல்லது அளவான சுதந்திரத்தை அளிக்காத பெற்றோரின் தவறா? இவர்களில் யார் செய்த தவறோ, ஒரு குடும்பமே அழியக் காரணமாகிவிட்டது.

மனைவி தெய்வானைக் கொடுத்த பழைய சாதத்தையும் பச்சைமிளகாயையும் அமிர்தமாய் எண்ணி உண்டுமுடித்த நாச்சிமுத்து, அவளைத் தன் அருகில் இழுத்து ரகசியமாய் ஒரு பெரிய ஆசையை வெளியிட்டுவிட்டுக் கிளம்பினார். அவர் வெளி வாசலை அடைந்ததும், அவர் பெற்ற மூன்று செல்வங்களும் வழிமறித்து மனு கொடுக்க ஆரம்பித்தனர்.

”அப்பு, நாளைக்கு காலேஜ்ல சேர அப்லிகேஷன் வாங்கப் போவோமா? தேதி முடிஞ்சிடும். அப்புறம் சீட் கிடைக்காது அப்பு. கைல கண்டிப்பா ஒரு 2000ஆவது இருக்கனும் அப்பு” என்றான் அவரின் மூத்தமகன் முத்துப்பாண்டி. கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவன் தலையை வருடி, “சரிய்யா. கண்டிப்பா போவோம்” என்றார் கட்டிட வேலை செய்யும் நாற்பது வயதைத் தாண்டிய நாச்சிமுத்து.

“அப்பு, எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்க. ஒரு 500 ரூபா தரியா? நானும் டூர் போகவா? ஆசையா இருக்கு அப்பு” என்று எதிர்பார்ப்பே உருவாய் கேட்டான் இளயமகன் துரைச்சாமி. மூத்தமகனைப்போல், அவனையும் செல்லம் கொஞ்சிவிட்டு சரி என்று ஒப்புதலளித்தார். கடைக்குட்டி மல்லிகாவோ, கோடைக்காலத்திற்கு ஏதுவாய் பலாப்பழமும் நொங்கும் கேட்க, “என் செல்லச் சர்க்கரைக்கட்டி. நீ கேட்டு நான் மாட்டேனு சொல்வேனா? கண்டிப்பா வாங்கியாரேன் என்றார் சிரிப்புடன்.

மூவரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு, மனைவிக்கு என்ன வேண்டும் என்பதைப்போல் அவளைத் திரும்பிப்பார்க்க, அவள் கண்களில் காதலைத் தவிர வேறெதையும் அவரால் காணமுடியவில்லை. தன் இனிய குருவிக்கூட்டைக் கண் நிறைய நிறப்பிக்கொண்டு, வேலைக்குக் கிளம்பினார் அந்தப் பாட்டாளி.

வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த மதுமிதாவின் கார் ஒரு உயர்தர மதுபாணக்கடையின் முன்பு நின்றது. ஆம்! சமீபத்தில் அவளுக்கு வந்திருக்கும் புதிய பழக்கம் மது அருந்துவதுதான்! அவளுக்காகவே காத்திருந்த இரண்டு ஆண் நண்பர்களும், 3 பெண் தோழிகளும் சேர்ந்து முடிந்தமட்டும் மது அருந்திவிட்டு மதியம் 3 மணிவரை கொட்டம் அடித்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், பீச், பார்க் டிஸ்கோதே என்று இரவு பத்துமணிவரை ஊர் சுற்றிவிட்டு கடைசியாய் ஒரு ரௌண்ட் மதுவையும் அருந்திவிட்டே கடனே என்று வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குக் கிளம்பிய மதுவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அனுப்பிவைத்தனர் சற்று நிதானத்திலிருந்த நண்பர்கள். என்ன பயன்? காரை எடுத்த மதுவிற்கு நேரம் செல்ல செல்ல கண்கள் சொருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல தான் நிதானமிழக்கிறோம் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி காரை ஓட்டினாள். நிதானம் முழுவதுமாய் இழப்பதற்குள் வீட்டை அடைய வேண்டுமென்று நினைத்தவள் காரை முழுவேகத்தில் பறக்கவிட்டாள்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற கார் நடைபாதையருகே அப்பாவியாய் நடந்து சென்றுகொண்டிருந்தவர்மேல் முழுவீச்சில் மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதைந்து, உறுப்புகள் ஆங்காங்கே சிதறி, பூமித்தாய்க்கு உடனடி இரத்த அபிஷேகம் நடக்க, துள்ளத்துடிக்க அந்த உடலைவிட்டு வெளியேறியது உயிர் பறவை. இடிக்கப்பட்டவர் இடுகாட்டில். இடித்தவளோ காற்றுப்பையில் பத்திரமாய். கார் மோதிய அடுத்தநொடி அதிலிருந்த ஏர்பேக் வெடித்து மதுவை தனக்குள் அடைத்துக்கொண்டு வெளியே குதித்து காப்பாற்றியது.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட கொடூரத்தில், மதுவின் போதை முழுவதுமாய் இறங்கிவிட்டிருக்க, அதிர்ச்சியில் சற்றுநேரம்  உரைந்திருந்தவள், கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவள், எதுவும் நடக்கவில்லை என்று மனதிற்குள் உறுபோட்டவாரே உறங்கிவிட்டாள். பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்ததால் அந்நேரத்தில் அவளைக் கேள்விகளால் துளைக்கவும் ஆளில்லாமல் போயிற்று.

உறங்கியவளை விதி விட்டுவிடுமா? சிசி டீவியின் உபயத்தால் அடுத்தநாள் காலையே மதுவின் ரகசியம் அம்பலமாகிவிட, தாய் தந்தையர் அவளை அடித்து துவைத்தனர். ஆனால் அழுதே பழகியிராத மதுவிற்கோ வலித்ததே தவிர, அழுகை வரவில்லை. அதற்கும் சேர்த்தே வாங்கிக்கட்டினாள்.

எவ்வளவு அடித்தும் ஆத்திரம் குறையாத ராஜசேகரன், தான் பெற்ற மகளின் மீது தானே வலிய சென்று புகார் கொடுத்துவிட்டார். தாய் மாலதியும் அதைத் தடுக்கவில்லை.  உள்ளே சென்ற மதுமிதாவோ சிறிது நாட்களிலேயே நண்பர்களின் செல்வாக்கில் வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தவளை கண்டுகொள்வாரில்லை. அவளின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் வெளியே செல்லவும் வழியின்றி வீட்டு சிறையில் கைதியானாள்.

சிறைக் கைதிக்கு எதற்கு வகைதொகையான உணவு? எளிய உணவை மட்டுமே கொடுக்கும்படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டுவிட்டாள் மாலதி. பாலும் தயிரும், பருப்பும் நெய்யும் உண்டு பழகிய மதுவிற்கு காரசாரமான எளிய உணவு தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ததில், உணவு உண்பதையே முடிந்தவரை தவிர்க்க ஆரம்பித்தாள். இத்தனைத் துன்பத்திலும் மதுவின் கண்கள் மட்டும் நனையாமல் அப்படியே இருந்தது. அவள் தவறின் வீரியத்தை ஆழ்மனம் இன்னும் உணரவில்லை போலும்.

சிறிது நாட்கள் கழித்து ஓர் மாலை வேளையில் மதுவை பெற்றோர் அவர்களுடன் வெளியே அழைத்தனர். மறுப்பின்றி அவளும் அவர்களுடன் கிளம்பினாள். கார் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. மாலதி கதவை இரண்டுமுறை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க, கதவைத் திறந்தாள் ஓர் சிறுமி. மதுவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டனர் பெற்றவர்கள்.

உள்ளே சென்ற மது வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட, மின்சாரம் தாக்கியதைப்போல் அதிர்ந்து நின்றாள். பயத்தில் இதயம் படபடவென்று அடித்தது. வீட்டின் ஒரு மூளையில் சட்டத்திற்குள்ளிருந்து தன் குடும்பத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நாச்சிமுத்து. ஆம்! குருவிக்கூட்டின் தலைவனான அதே நாச்சிமுத்து! தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நண்பர் ஒருவரைச் சந்தித்து பிள்ளைகளின் தேவைக்காக பணம் ஏற்பாடு செய்துவிட்டு, கடைக்குட்டியான அவர் பெண் மல்லிகா கேட்ட பழங்களையும், காதல் மனைவிக்கு காதல் பரிசாய் மல்லிகைப்பூவையும் வாங்கிக்கொண்டு நிறைவான மனதுடன் வீட்டை அடைவதற்காய் நடந்து வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர விபத்து நடந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் வீதி விபத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, கருணையுள்ளம் கொண்ட ஓர் மனிதர் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்சையும் போலீசையும் அழைத்தவர், அவர்களுடன் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, நாச்சிமுத்து பர்சிலிருந்த முகவரிக்கு அவர் சடலத்தை எடுத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்ட அடுத்தநொடி வீடே அதிரும்படியான அழுகுரல் எழுந்தது. அன்புச் சங்கிலியின் முதல் கண்ணி அறுந்துவிட்டதே! ஆலமரத்தின் ஆணிவேர் சாய்ந்து அவர்களின் சந்தோஷத்தை அடியோடு வீழ்த்திவிட்டதே!

சடலத்தைச் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்ததெனப் புறப்படாமல், தெய்வானைக்குத் துணை நின்று இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களுக்கு தன் முகவரியைக் கொடுத்துவிட்டு, உதவி வேண்டுமென்றால் தயங்காமல் அழைக்கும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கால் வயிறும் அரை வயிறுமாய் அவர்கள் நாட்களைக் கடக்க, ஒருநாள் மதுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். முதலில் கோவத்துடன் பேசிய அனைவரும், தங்களின் எதிர்காலத்தை எண்ணி பயத்தில் கதறினர். அவர்களைத் தேற்றி, தெய்வானைக்கு நல்ல சம்பளத்தில் முழுநேர வேலையும், மூத்தமகன் முத்துப்பாண்டிக்கு பகுதிநேர வேலையும் போட்டுக்கொடுத்துவிட்டு, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டியதற்கான அவசியத்தையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்போது சென்றவர்கள்தான் இப்போது மகளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ”வாங்க ஐயா. வாங்கம்மா.” தெய்வானை அவர்களை அன்போடு உபசரித்தாள். அவர்களும் தெய்வானையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்களின் நலனை விசாரித்தவாரே உள்ளே வந்து அமர்ந்தனர். அதுதான் எளியவர்கள்! விரோதியாகவே இருந்தாலும் தங்களால் தரமுடிந்த மன்னிப்பை யாசிப்பவர்களிடம் ஒரு கட்டத்திற்குமேல் பகைமைப் பாராட்டமாட்டார்கள். வாழ்க்கையின் பின்னே ஓட சலிக்காதவர்களுக்கு பகையின் பின் ஓடுவது பெறும் சலிப்புதான். மகள் செய்த தவறுக்கு நேர்மையான பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம். அதுவுமில்லாமல் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துத் தன்மானத்தைச் சீண்டாமல், தாங்களே தங்கள் வாழ்வை வாழ வழிகாட்டியவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது.

தெய்வானையின் உபசரிப்பில் அதிர்விலிருந்து மீண்ட மதுமிதா “என்னை மன்னிச்சிடுங்க. தவறு நடந்துடுச்சு. தெரியாம செய்துட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் கல்யாண பொறுப்பை நான் ஏத்துக்குறேன்” என்றாள். அவள் பெற்றோரை இவர்களுக்கு முன்பே தெரிந்ததால் பண உதவிகள் செய்திருப்பார்கள் என்று நினைத்திருப்பாள் போலும்.

தெய்வானை சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் மௌனிக்க, அந்த இடைப்பட்ட வேளையில் முத்துப்பாண்டி மதுவிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான். அவள் அதிர்ந்து என்ன இது? எனக் கேட்க, ”வாங்கிக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொன்னாங்க. நீங்க வருவிங்கன்னு உங்களுக்காக வாங்கி வெச்சோம். நல்ல சரக்கு. குடிங்க” என்றான். அவள் அதைக் கையில் வாங்கி வெறித்துப் பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோரையும் தெய்வானையையும் மாறி மாறி பார்த்தாள்.

தெய்வானை மெல்ல வாய் திறந்தாள். “நீ சொன்ன படிப்பு, வேலை, கல்யாணம் இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஒரு பைசா செலவில்லாம செய்ய வேண்டிய விஷயத்தைச் சொல்றேன் செய்யறியாம்மா?” “சொல்லுங்க.” எங்க வீட்டுக்காரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைக்கனும். முடியுமா?” ”என்ன ஆசை?”

ஒரு நிமிஷம். தெய்வானை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தாள். “இது என்ன தெரியுமா? நான் மணக்க மணக்க வெச்சிருக்க பச்சமொச்ச கச்ச கருவாட்டுக் குழம்பு. எங்க வீட்டுக்கார் போகும்போது. ”இந்தா புள்ள, நீ பச்சமொச்ச கச்ச கருவாட்டுக்குழம்பு வெச்சு எம்புட்டு நாளாச்சு. இன்னிக்கு வையி புள்ள. சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழைச்சிட்டு சாயந்தரம் வந்து ஒங்கையால சோறு உங்குறது அலாதி சந்தோசம். நீ மணக்க மணக்க சோறாக்கி, மனசு நெறைய காதலோட பரிமாறனும். அதே மனசு நெறைய காதலோட உள்ளுக்குள்ள சப்புக்கொட்டி ருசிச்சாலும் வெளிய சின்ன சின்ன கொற சொல்லிகிட்டே சாப்பிடனும். ஏழைங்க நமக்கு இதவிட வேற என்ன புள்ள சந்தோஷம் இருக்கப்போகுது” என்று காதலாய் பார்த்தபடிச் சொல்ல, அந்தக் காதலுக்கு சற்றும் குறையாத காதலுடன் பார்த்தபடி. “சரிங்க செஞ்சி வெக்கறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று விடைகொடுத்தாள்.

அவர் போனதுக்கு அப்புறம் நான் தினமும் இந்த குழம்பு செய்யறேன். அவர் சாப்பிடவே மாட்டுறார். நீ முடிஞ்சா அவரை ஒரு வாய் சாப்பிட வை. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செஞ்சிட்டா மேலே சொன்ன மூனு விஷயத்தை செய்ய அவசியமே இருக்காது.” என்றுவிட்டு விம்மி வெடித்து அழுதாள். பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து அழ, அந்த கதறல் மதுவின் உயிரை உலுக்கியது. சிறிது சிறிதாய் மது ஊற்றி மதுமிதா வளர்த்த பாவமரம் அவர்களின் கதறல் சூறாவளியில் வேறோடு சாய்ந்தது. என்ன சொல்ல முடியும் இதற்கு மதுமிதாவால்? 

மதுமிதா அந்தக் குழம்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அவள் அன்னை இந்த குழம்பு செய்ததும், அந்த மணம் அவளுக்கு பிடிக்காமல் தூக்கி வீசியதும் நினைவுக்கு வந்தது. வாழ்க்கை சின்ன சின்ன ஆசைகளாலும் சந்தோஷங்களாலும் நிறைந்தது. அதை அள்ளிக்கொடுக்கும் ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற உண்மை அவள் மூளைக்கு ஏறி இதயத்தைத் தாக்கியது. இன்னமும் அவள் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணமும், தெய்வானை வைத்திருந்த குழம்பும் பூதாகரமாய் நின்று அவள் செய்த தவறின் முழு வீரியத்தை உணர்த்த, வாழ்க்கையில் முதல்முறையாக கண்ணீர் சிந்தினாள் மது. அவள் கண்களைத் தாண்டி சிதறிய கண்ணீர் துளிகள் மதுகிண்ணத்தில் விழுந்து மதுவோடு மதுவாய் கலந்தது.


 

Saturday, 6 March 2021

- வாழ்க்கைத் தேர்வு

ஒரு மனிதனின் சாமர்த்தியமே அவன் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது. சிலர் அதில் வெற்றி காணலாம். சிலருக்கு அது தோல்வியில் முடியலாம். சிலருக்கு அது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு பாதையை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பப் பாவம். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பூவேலி இருக்கிறது. சில பெண்களுக்கு முள்வேலி இருந்தாலும் அதையே பூவேலியாக நினைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது. விடுபடவும் விரும்பமாட்டார்கள். இந்தச் சமூகமும் இதிகாசங்களும், கலாச்சாரம் என்ற பெயரில் அவர்களை அப்படி பழக்கிவைத்திருக்கிறது? ஒருவேளை அவர்களைப் பிடிக்காமல் வலுக்கட்டாயமாக அந்த பூவேலியிலிருந்து வெளியேற்றினால், யாருமில்லா கானகத்தில் தொலைந்த குழந்தையாய் திக்குத் தெரியாமல், செய்வது அறியாமல் தவியாய் தவிப்பார்கள். மற்றொரு பாதையை வகுத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கண்ணீர் காவியம்தான் இல்லம்தோறும் இதயங்கள். எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய இந்நாவல் எல்லாகால பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். வாழ்க்கைப் பாடம். பெண்மையை மதிக்காதவர்களுக்கும், பெண்மைக்கு துரோகம் செய்பவர்களுக்கும் இது மறக்கமுடியாத, மறக்கக்கூடாத சாட்டையடி. ஆனால், இப்படிப்பட்ட சாட்டையடிகளுக்கு எல்லா அநியாயக்காரர்களும் பணிவார்களா? மிரண்டு பின்வாங்கி பெண்மையின் மேன்மைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குவார்களா? இல்லை. என்ற பதிலிருப்பது வருத்தம்தான்.

எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நிகழத்தான் செய்கிறது. அப்போது வெளியே தெரியாமலும் கவணிக்கப்படாமலும் இருந்த கொடுமைகள் இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால் கவணிக்கப்படுகிறது. கவனிக்கத்தான்படுகிறதே தவிர குறைந்தபாடில்லை. எத்தனை புதுமைப் பெண்களும், புரட்சிப்பெண்களும் உருவானாலும், அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் சாதாரணநிலையில் இருப்பவர்கள்தான். அப்படித்தானே அநியாயக்காரர்கள் நினைக்கிறார்கள். இந்த விமர்சனத்தையும் நாவலையும் படிப்பவர்கள் அப்படி எண்ணிவிடாமல், உங்களையும் ஒருமுறை சுய அலசலில் ஈடுபடுத்தி நிறைகுறைகளைச் சரிபார்த்துக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி. எழுதப்படுகிற எல்லாப் படைப்புகளும் யாராவது ஒருவர் மனதிலாவது தைக்காதா? அவரை நல்வழிப்படுத்தாதா? என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்தான் எழுதப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு செவிசாய்க்கலாமே!

ஒரு பெண்ணின் உலகம் மிகச் சிறியது. திருமணத்திற்கு முன் பிறந்த வீடு. திருமணத்திற்கு பின் புகுந்த வீடு. என்னதான் பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியுலகத்தை எட்டிப்பார்த்தாலும், அவர்களின் பாதுகாப்பாக நினைப்பது இரண்டு வீடுகளைத்தான். சில பெண்கள் வெளியுலகத்தைக் காண விருப்பமில்லாமல் வீட்டையே உலகமாக எண்ணி மகிழ்வர். அப்படி மகிழ்ந்திருந்தவள்தான் மணிமேகலை.

மிராசுதார் அருணாச்சலத்தின் மகளான மணிமேகலை, தன் இளம் பருவத்தில் சொந்தக்காரனும் தோழனுமான வெங்கடேசன் மீது தோன்றிய மானசீகக் காதலை தந்தைக்காகவும் தமயனுக்காகவும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, எஞ்சினியர் ஜெயராஜை மணந்துகொண்டாள். அவளின் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி. வளமான வீடுதான். செல்வத்திலும், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையிலும், வாய் பேச்சிலும் எந்த குறைச்சலும் சொல்லிவிடமுடியாது.

திருமணமாகி 3 வயது மகனிற்கு தாயாகும்வரை மணிமேகலை மகிழ்ச்சியாகவே இருந்தாள். கணவனின் காதல் மழையில் விடாது நனையத்தான் செய்தாள். ஆனால் என்ன செய்வது? வியாதிக்கு ஏழைப்பணக்காரன், மகிழ்ச்சியாக இருப்பவன், சோகமாக இருப்பவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாதே. அவளுக்கும் வந்தது தொழுநோய். ஆனால் அதனாலெல்லாம் அவள் பாதிக்கப்படவில்லை. பெருவியாதியைவிட ஒரு பெரும் வியாதியான சந்தேகம் இருக்கிறதே. அதனால்தான் அவள் பாதிக்கப்பட்டாள். ஆரம்பத்திலேயே அவளது நோய் கண்டுபிடிக்கப்பட்டு பூரணமாக குணமாகிவிட்டபோதும், தனக்கும் அது வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால் மணிமேகலை சித்திரவதை செய்யப்பட்டாள்.

நோயைப்பற்றி தெரிந்ததும் மணிமேகலையின் புகுந்த வீட்டார் அவளை அன்போடும் அனுதாபத்தோடும்தான் பார்த்துக்கொண்டனர். ஆனால் மணிமேகலையின் மாமியார் தம்பியான இராமபத்திரனின் மூளைச்சலவையால், மணிமேகலை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வேலை செய்யாமல் இருப்பதில் ஆரம்பித்து, கணவனின் புறக்கணிப்பு, நோய் பற்றிய சந்தேகப் பேச்சுகள், பெற்ற பிள்ளையை அவளிடம் கொடுக்க மறுப்பது, தனியறை, தனி தட்டு என்று முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டாள். வீட்டைவிட்டு விரட்டாத குறைதான்.

அதுவும் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று சிறிதுகாலம் தங்கிவிட்டு வருகிறேன் என்று போய்விட்டு வந்தபின் நடந்தேறிவிட்டது. பிறந்தவீட்டிலும் அவமானப்பட்டு வந்த மணிமேகலை புகுந்த வீட்டாராலும் துரத்தியடிக்கப்பட்டாள். எல்லா வீடுகளிலும் எந்த நிலையிலும் மாறாத அன்புகொண்ட இதயங்கள் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட இதயங்கள் மணிமேகலையின் வீடுகளிலும் இருந்தன. அவர்கள் மணிமேகலையை பெற்ற தந்தையும் மாமனாரும்தான். பாவம் வயது முதிர்ந்த அவர்களால் மணிமேகலைக்கு என்ன செய்யமுடியும் உள்ளுக்குள்ளே மருகி தவிப்பதைவிட?

பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே. அப்படித்தான் இருந்தது கம்பௌன்டர் மணியின் குணச்சித்திரம். மாத்திரைகள் வாங்கிவந்து கொடுப்பதிலும், மணிமேகலைக்காக அனுதாபப்பட்டு அவள் குடும்பத்தாரிடம் பரிந்து பேசுவதிலும், அரக்கோணத்திலிருந்து அவளைச் சென்னை அழைத்து வருவதிலும் உதவிய மணி, மணிமேகலையின் தனிமையானச் சூழலைப் பயன்படுத்திக்கப் பார்ப்பான். மன உறுதிகொண்ட மணிமேகலை தப்பித்துவிட்டாள். ஆனால் நிஜத்தில்? பெண்களின் மிகப்பெரிய பலவீனம் அன்பு. அவர்களின் மிகப்பெரிய பலமும் அதுதான். நேசிப்பதையும், நேசிக்கப்படுவதையும் உயிராய் மதிப்பவர்கள் பெண்கள்.

இதைத்தான் கயவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் அனைவரையும் உலுக்கி உருக்குலைத்துப்போட்ட பொள்ளாச்சி கொடூரங்கள். பலவந்தப்படுத்தி பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது வேறு. ஆனால் பாசத்தையும் பலவீனத்தையும் பயன்படுத்திப் பெண்களைச் சிக்கவைப்பதை எப்படி தவிர்ப்பது?

இரண்டே வழிகள். வறண்டபூமிதான் மழைக்காக ஏங்கும். வறட்சியே இல்லாமல் பார்த்துக்கொண்டால்? அன்பும் பாசமும் கிடைக்காத பெண்கள்தான் அதைத் தேடித் திரிந்து தடுமாறி தடம் மாறுவார்கள். கொடுக்க வேண்டியவர்களே அதைக் கொடுத்துவிட்டால்? பெண்கள் பாதுகாப்பான சுதந்திரத்தோடு இருப்பார்கள் அல்லவா? இந்தக் காலத்துப் பெண்கள் பாசத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. காசு, பணம், கார், பங்களா, உயர் படிப்பு, வெளிநாட்டு உத்தியோகம் என்றுதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அதையெல்லாம் பெண்கள் வாழ்க்கையை வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தான் கேட்பார்களே தவிர, அதையே வாழ்க்கையாக எண்ணிவிடமாட்டார்கள்.

பணத்தைக்கூட பெண்கள் தனியாக சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் பாசம்? எல்லா ஆண்களும் இதை ஒரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அரக்கியின் இதயத்திலும் பாசமெனும் ஊற்று கொஞ்சமாவது ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டால் பாதிக்குமேல் வெற்றிதான். இன்னொன்று, தவறு செய்பவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டப் பெண்ணின் குண அலசலில் ஈடுபடுவது. பெண்ணை இழிவுப்படுத்துவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். என்ன தவறு செய்தாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண் என்ற திமிரில்தான் பல குற்றங்கள் நிகழ்கிறது. ஒரு பெண்ணைப்பற்றி இன்னொரு பெண்ணே இழிவாக பேசும் அழகு நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உரியது.

முள்ளின்மேல் சேலை விழுந்தாலும், சேலையின்மேல் முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று எழுதிவைத்த புண்ணியவான் எவனோ. அல்லது புண்ணியவதி எவளோ?! அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வெறும் சேலைக்கு மட்டுமே பொருந்தும் இந்த வாக்கியத்தைப் பெண்ணுக்குப் பொறுத்தி அவர்களை நம்பவைத்து, அவர்கள்தான் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொடுமையை என்னவென்று சொல்வது? இது மாற வேண்டும். தன்னைச் சுற்றி என்ன தவறு நிகழ்ந்தாலும், அதைத் தைரியமாக வெளியில் சொல்லலாம் என்ற மன உறுதி வரவேண்டும். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்ற பாதுகாப்பும் உத்திரவாதமும் கிடைக்கவேண்டும். தவறு செய்பவர்களுக்கு பயமும் துன்பமுமே வாழ்க்கையாக வேண்டும். சேலைமேல் முள்விழுந்தால் முள்ளுக்குத்தான் சேதம் என்ற புதுமை வரவேண்டும்.

உடன்பிறந்த அண்ணனான இராமலிங்கமும், தம்பி சந்திரனும் காட்டத் தவறிய பாசத்தை, உடன்பிறவா அண்ணன்களான இரத்தினமும், கூத்து கோவிந்தனும் மணிமேகலைக்குக் கொட்டிக்கொடுத்தனர். கோவிந்தனின் உதவியால் மணிமேகலை ஒரு இச்த்தீரியா (hysteria) நோயாளியிடம் வீட்டு வேலைக்கு சேர்ந்தாள். ஒருநேரம் அன்பால் குளிப்பாட்டப்படுவதும், மற்றொரு நேரம் அடிகளாலும் வார்த்தைகளாலும் அபிஷேகிக்கப்படுவதுமாக அவளின் நாட்கள் கழிந்தன. காமாட்சியின் இந்த இருவேறுப்பட்ட ரூபத்தில், மணிமேகலை புரிந்துகொள்வதாக எழுத்தாளர் குறிப்பிட்ட விஷயம் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எதார்த்தம்.

பெண்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஓற் உண்மையும் கூட. ‘டார்லிங்’ என்று சொல்பவரைவிட என்னடி ‘இழவெடுத்தபய மவளே’ என்று சொல்பவரின் அன்பு மாறாத ஒன்றென்று எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் உண்மை. அன்பை அவரவர் அவரவருக்கு தெரிந்தவிதத்தில்தான் வெளிப்படுத்தமுடியும். தேனொழுக பேசுவது உண்மையான அன்புமில்லை. முரட்டுத்தனமாக நடப்பவர்களிடம் அன்பே இருக்காது என்பதுமில்லை. இனிப்பான பேச்சை பல ஆண்கள் பெண்களை தன் வலையில் விழவைக்கப் பயன்படுத்தும் யுக்தி. வாழவைக்கத் தெரிந்தவர்களுக்கு பேசத்தெரியாது. பேச்சு மட்டுமே இருப்பவர்களால் பெண்ணை வாழவைக்கமுடியாது.

மாத்திரை சரியாக எடுத்துக்கொள்ளாததால் மணிமேகலையின் நோய் மீண்டும் கூர்மை பெற, வெங்கடேசனால் செங்கை மாவட்டத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கியவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியிலுள்ள இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். திருமணமான பின்னும் தன்மேல் மாறாத அன்பைப் பொழியும் வெங்கடேசனின் அன்பால் மணிமேகலை உணர்ச்சிமயமானபோது, அவன் கம்பீரத்துடன் அவள் சொன்னதையே திருப்பிச் சொன்னான். அன்பு என்பது ஓர் மாபெரும் சக்தி. அதன் ரூபம் மாறுமே தவிர சக்தி மாறாது. நான் ரூபம்தான் மாறியிருக்கிறேனே தவிர என் அன்பு மாறவில்லை என்றபோது மணிமேகலை அந்த வார்த்தைகளில் உயிர்த்தெழுந்தாள்.

அந்த இல்லத்தின் நிர்வாகியான மதர், தேவதாசிகளைப்பற்றிய ஆய்வுப்படிப்பிற்காக தன் தமக்கை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைச் சந்தித்தபோது, ஆயிரம் தேவதாசிகளைப்பற்றி ஆராய்வதைவிட ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது பின்னாளில் உங்களுக்கே பாதுகாப்பாக அமையும் என்ற அறிவுரைப்படி, தேவதாசிகளைவிட தொழுநோயாளிகளுக்குத்தான் ஆதரவு தேவை. அவர்கள் வாழ விரும்பினாலும் வாழமுடிவதில்லை என்பதை அறிந்து தமிழ்நாட்டில் செங்கை மாவட்டத்தில் அந்த இல்லத்தைத் துவக்கினார். உறுப்புகள் சுகமாக இருப்பவர்களின் கைத்தொழில்களாலும், மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்களின் நன்கொடையாலும் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருந்தது. மதரின் இறப்பிற்கு பின் மணிமேகலை தானாகவே முன் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

பணநெருக்கடி வந்தபோது தன் தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும், சேமித்துவைத்திருந்த பணம் அனைத்தையும் இல்லத்திற்கே செலவிட்டாள். அதையும் மீறிய நெருக்கடி வந்தபோது, வெங்கடேசன், இரத்தினம், கூத்து கோவிந்தன் ஆகியோரின் உதவியுடன் கணவனிடம் போராடி 60 பவுன் நகைகளையும் ஜீவனாம்ச பணத்தையும் வாங்கினாள். அண்ணன் தம்பியுடன் போராடி அப்பா அவள் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை வாங்கினாள். ‘அன்னை மார்கிரேட் அருளில்லம்’ என்ற புதிய பெயரில் இல்லத்தைச் சிறப்பாக நிர்வகித்தாள். தொழுநோயாளிகளின் குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு இல்லம் துவங்க வேண்டும் என்ற மணிமேகலையின் புதிய திட்டத்தோடு கதைமுடியும்.

என்னதான் நாம் குணக்குன்றாக இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும் சில இயல்புகளைத் தவிர்க்க முடியாது. துர்நாற்றம் பிடிக்காது, மற்றவர் உபயோகித்ததை உபயோகிக்கப் பிடிக்காது, வாந்தி பிடிக்காது, மனித கழிவுகளை சுத்தம் செய்யப் பிடிக்காது, இரத்தம் பிடிக்காது, தூய்மையாக இல்லாதவரிடம் பழகப்பிடிக்காது, நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கிப்பழகப் பிடிக்காது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் மனதில் ஏற்படும் சஞ்சலங்களைத் தவிர்க்கமுடியாது. மேலே குறிப்பிட்டவையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இருப்பவர்களும் இருக்கலாம். ஆனால் அந்த இயல்புகள் இருப்பது முற்றிலும் தவறு என்றில்லை.

எல்லா நோயாளிகளுக்கு தன் நோயின் வீரியம் தெரியும். அவர்களே நெருங்கிப்பழக விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பது தானும் மனிதர்கள்தான் என்று தன்னைச் சுற்றியிருப்போர் நினைக்க வேண்டும். பரிவோடு ஒரு பார்வை, அனுசரணையான பேச்சு, குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதைத் தருவதால் நமக்கு என்ன நோய் தொற்று வந்துவிடப்போகிறது? வியாதியைப்பற்றி மருத்துவர் சொல்வதை முழுமையாக நாம் நம்புவது மட்டுமின்றி, நோயாளியையும் நம்பவைக்க வேண்டும். ஒரு நோயின் மிகச்சிறந்த மருந்து நம்பிக்கைதான்.

மணிமேகலையின் இல்லத்து நிர்வாகி உயிருடன் இருந்த வேளையில், சமூக சேவை செய்கிறேன் என்று சில பெண்கள் வருவார்கள். நயமாகப் பேசி நன்கொடையும் கொடுக்க முன்வருவார்கள். நிர்வாகி அவர்களுக்கு பழச்சாறு எடுத்துவரச் சொல்வார். முதலில் சரி என்றவர்கள், அங்கு சமைக்கப்படும் அனைத்துமே தொழுநோயாளிகள் சமைத்தது என்று சொன்னதும் ஒவ்வொரு காரணம் சொல்லி தெறித்து ஓடிவிடுவார்கள். மதரும் நாசூக்காக நன்கொடையை மறுத்துவிடுவார்.

சேவை என்பது கட்டாயத்திற்காகவோ, பேர் புகழிற்காகவோ, பகட்டிற்காகவோ செய்வது இல்லை. அது மனமுவந்து மற்றவருக்காக மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட குண இயல்புகளைக் கொண்டவர்களால் எல்லா சேவைகளையும் முகச்சுளிப்பில்லாமல் செய்யமுடியாது. மீறி செய்தால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமல், நிறைவில்லாத சேவையாகதான் இருக்கும். எனவே நம்மால் என்னமுடியுமோ அதை நிறைவாக செய்தாலே போதும்.

கடவுள் பாவங்களைச் சுமக்க தைரியசாலிகள் யாரென்று பார்த்துதான் அதைக் கொடுப்பாராம். இதுவும் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம். மிகுந்த மனவுளைச்சலில் இருந்தபோது நான் படித்த இந்த வார்த்தைகள் எனக்கே ஒரு தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தது. மனக்கஷ்டங்களைத் தாங்கும் அளவுக்கு நான் தைரியசாலி என்று காலமும் கடவுளும் நினைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் தைரியமாக கடந்து, தன்னையும் காத்து, தன்னைப்போன்ற பிறநோயாளிகளையும் காக்கவேண்டும் என்ற வாழ்க்கைப்பாதையை மணிமேகலையால் தேர்வு செய்யமுடிந்தபோது ஏன் நம்மால் முடியாது? நமக்கான வாழ்வை நாமே தேர்வு செய்வோம். அதை வேட்கைக்கொண்டு வெற்றிபெறுவோம்.