Friday 5 June 2020

என் வாக்கு விற்பனைக்கல்ல.


பணத்தால் உன் குணத்தை விலை பேசும் பதவிப்பிரியரே, என் வாக்கு விற்பனைக்கல்ல.
கோடி கொடுத்தாலும், குடம்குடமாய் கொடுத்தாலும்,
நியாயவிலைப் பொருட்களை நியாயத்திற்கு புறம்பாய்  கொடுத்தாலும்,
புடவை கொடுத்து பெண்ணின் ஆர்வத்தை கவர்ந்தாலும்,
வேட்டி தந்து வளைக்க முயன்றாலும்,
என் வாக்கு விற்பனைக்கல்ல.
என் வீட்டுத் தென்றல் காற்றைப் போல்,
என் வீட்டு நீரைப்போல்,
என் மாடி நிலா வெளிச்சம் போல்,
என் வீட்டில் கேட்கும் கிண்கிணிச் சிரிப்பைப் போல்,
என் சுற்றத்தின் உள்ளத்தில் பொங்கும் உவகைப் போல்,
என் வாக்கும் விற்பனைக்கல்ல.
பெட்டித்தந்து புட்டித்தந்து உன் பெருச்சாளித்தனத்தை கண்டும் காணா பெட்டிப்பாம்பாக்க பார்க்கிறாயா?
பஞ்சத்தில் அடிப்பட்டு மஞ்சத்திலே மடிவேனே தவிர. லஞ்சத்தில் நெஞ்சமிழந்து உன் வஞ்சத்திற்கு வழிவகுக்கமாட்டேன்.
உடமையை விலைப்பேசு விற்றுவிடுகிறேன்.
உரிமையை விலைப்பேசாதே விட்டுக்கொடுக்கமாட்டேன்.
உன்னை நான் நிர்ணயிப்பது அரசியல் சட்டம். என் விலையை நீ நிர்ணயிப்பது உன் ஊழல் வாழ்க்கைக்கு நீ வகுக்கும் ஐந்தாண்டு திட்டம்.
எதற்கு விலை கொடுக்கிறாய்?
எதை விலை பேச முயல்கிறாய்?
வாக்கையா?
அல்ல! அல்ல!
பாரதத்தின் வாழ்க்கையை!
நாட்டின் பாதுகாப்பில் நீக்குபோக்காயிருப்பவர் தான் வாக்கை விலை பேசுவார்.
போக்குவரத்தின் போதும் பொதுநலத்தை நினைப்பவர் தன் நாக்கால் மக்கள் மனதை வெல்வார்.
நரம்பில்லாத நாக்கு நாற்புறமும் சுழலுமாம்,
அல்ல அல்ல,
நன்னாக்கிற்கு நரம்புகள் உண்டு,
அவை உண்மை என்னும் ஸ்ருதி மீட்டும்!
கொள்கை, கடமை, தொண்டு, எனும் மூன்றெழுத்தை மனதில் கொண்டு துணிந்து நில்.
உன்னை எதிர்ப்பவரை வெற்றி கொள்.

13 comments:

  1. Vidya
    Super going great best wishes

    ReplyDelete
  2. Superb ABI good words about the voting importance

    ReplyDelete
  3. அபிநயமே உனது கவிநயம் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நகைச்சுவை நவீன் நண்பரே.

      Delete
  4. அருமையான கவிதை. குழந்தைகளுக்காவது சென்று சேர வேண்டிய கருத்துக்கள். நாளைய வாக்காளர்களையாவது காப்பாற்றலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார்.

      Delete
  5. super Poem everyone should realized that don't cell votes.

    ReplyDelete
  6. தெளிவான சிந்தனை. எளிய நடையில். இன்றைய நிலையில் மிகவும் அவசியமான கருத்து. சமூகத்தை நல்வழிப்படுத்தும் சிந்தனைகள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்�� Mrs Bharathi

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்.

      Delete

  7. சாட்டை கவிதை.

    நாக்கிற்கு நரம்பில்லை என யார் சொன்னது? நரம்பில்லாமல் உண்மையெனும் ஸ்ருதி எப்படி சாத்தியம். அருமையான சிந்தனை.

    தொடருங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் படிக்கும்போது. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete