Thursday, 25 June 2020

பார்வை



பனி இல்லாமல் உறைய வைக்கும்;
பாஷை இல்லாமல் உருக வைக்கும்;
புதுப்புது கவிதை படைக்கச்செய்யும்;
பூலோகம் தன்னை ரசிக்கச்செய்யும்!
வார்த்தைக்கு  வெட்கம் தடைவிதித்தாலும்,
கைஜாடைக்கு கண்ணியம் தடைவிதித்தாலும்,
கண்ணசைவுகள் எண்ணத்தை பிரதிபலிக்கும்!
பாசத்தைக் கண்டால் பக்கத்தில் அழைக்கும்.
வேஷத்தைக் கண்டால் விலக்கி நிறுத்தும்.
ஒவ்வொரு பார்வையிலும் ஓர் அர்த்தம், 
உணர்ந்து கொள்ள ஓர் அகராதி  வேண்டும்.
நூதன உறுப்பே,
நீ நவரசத்தின் சாளரம்.
நேர்த்தியான ஓவியம்.
காதலைச் சுறக்கும் நயனங்களே,
நீ கவிஞனின் கவிதை.
கனவுலகின் தேவதை.
இமைக்குடிசைக்குள் வசிக்கும் விலோசனமே, யார் கற்பித்தப் பாடம் இதழோடு உங்களையும் சேர்ந்து சிரிக்கச்சொல்லி?
வெளிச்சத்தை வீசும் விழியே
அதை விடாது அடைகாக்கும் இமையே
வா வேறோர் பிறவியில் என்னிடம் வா
அழகாய் அலங்கரிப்பேன்!  அருமையாய்  பாதுகாப்பேன்!
அதுவரை இதயத்தில் அந்தரங்கமாய் உன்னை உபசரிக்கிறேன்!

17 comments:

  1. இல்லாதோருக்கு மட்டுமே ஒன்றின் அருமை தெரியும் போல. ஆயிரம் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பார்வையை ஈடு செய்ய முடியாததன் விந்தையை நித்தமும் உணர்பவர் நாம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அரவிந் சார். ஆனா நான் அப்படியெல்லாம் பெருசா வருத்தப்பட்டதில்ல. ரொம்ப பாதுகாப்பா வளர்ந்ததால. நாவல்கள் படிக்கும்போது அவங்க அதுல கண் பேசுவதைப்பற்றிக் குறிப்பிடும்போதுதான் வருத்தமா இருக்கும். அதுனால எழுதுனதுதான் இது.

      Delete
  2. அபி
    அருமை
    வித்யா

    ReplyDelete
  3. அபி மிக அழகான கவிதை ஆனால் இடையில் ஒரு வலியின் அடையாளமும் மறைமுகமான வெளிப்பாடு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வருத்தப்படாதீங்க மேடம். அதுதான் அடுத்தப் பிறவியில வரச் சொல்லியிருக்கோமே அப்போ பார்த்துக்கலாம். வாழ்த்திற்கு நன்றி மேடம்.

      Delete
  4. அடைகாக்கும்
    இமை போலவே
    நம்பிக்கையே வாழ்வு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி சார். நிச்சயம் நம்பிக்கைக்கொள்வோம்.

      Delete
  5. அருமையான‌ கவிதை அபி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை. பாராட்டுகள் அபிநயா.

    மனதைத் தொட்டது உங்கள் கவிதை.

    ReplyDelete
  7. நெகிழ வைக்கும் வரிகள்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை. அருமை.

    ReplyDelete
  9. அற்புதமான கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete