Saturday, 20 June 2020

பிறந்தநாள் கேக்.

  வணக்கம் நண்பர்களே.
 இன்னைக்கு நான் ஒருத்தரோட வீட்டுக்கு பிறந்தநாள் கேக் சாப்பிடப்போனேன். அங்க எனக்கு வினோதமான கேக் கிடைச்சது. அதை நான் உங்களுக்குத்  தரப்போறேன். வீட்டுக்குள்ள நுழைந்ததும் அவரோட அம்மா என்னை வரவேற்றாங்க.
”வாம்மா அபி. எப்படிமா இருக்க?” ”நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன்மா.”
“சரி ஆன்ட்டி. இன்னைக்கு உங்கப் பையனோட பிறந்தநாள். கேக் கொடுங்க. கேக் சாப்பிடத்தான் வந்தேன்.” “கேக்தானே கொடுத்துட்டாப் போச்சு. நீ விதவிதமான கேக் சாப்பிட்டிருப்ப. கேசரி கேக் கூட இருக்கு. இட்லியக்கூட இந்தியன் கேக் சொல்லுவாங்க. ஆனா இந்த வீட்டுல வினோதமான கேக் இருக்கு. அதை வினோதமான முறையில் கட்பண்ணித்தருவான் என் பையன்.” ”அப்படியா?” “ஆமாம் வா தரசொல்றேன்.”
அவங்க ஒரு அறை முன்னாடி நின்னு கதவைத் தட்டினாங்க. “தம்பி ரவி,  கதவைத்திற.” “என்னம்மா?” என்று குரல் கொடுத்தபடி ஒருவர் கதவைத் திறந்தார். “தம்பி, இவ எனக்குத் தெரிஞ்சப்பெண்.  உனக்குப் பிறந்தநாள்னு இவகிட்டச் சொன்னேன். கேக் சாப்பிட வந்திருக்கா. கேக் கொடு.”
என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். “பார்த்தியாம்மா? கேக்.” என்று அவர் அம்மா  காட்டியத் திசையில் தலையணை சைசில் நிறைய கனமான  புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இது என்ன ஆன்ட்டி?” புத்தகம் கேக் ஷேப்ல இருந்தாலும். இதை எப்படி கட் பண்ணித்தருவார்?” ”இதோ இப்படித்தான் என்று இன்னொரு இடத்தைக் காட்டினார்.” அங்கே புத்தகங்கள் கட்பண்ணப்பட்டு, கட்பண்ணப்பட்ட பக்கங்களை புத்தகம் வாரியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
“இதை எப்படி ஆண்ட்டி மத்தவங்களுக்குச் சாப்பிடக்கொடுப்பீங்க?” என்று நான் கேட்டதும் ஒரு கணிணி உயிர்ப்பிக்கப்பட்டது.
அதில் கட்பண்ணப்பட்ட பக்கங்கள் புகைப்படமாக எடுக்கப்பட்டு, எழுத்துணரியாக்கம் o.c.r செய்யப்பட்டு, ப்ரூஃப் ரீட் செய்து மின்னூலாக மாற்றியமைக்கப்பட்டது. “இந்த மின்னூல் உனக்கு கேக்தானேம்மா?” “நிச்சயம் ஆன்ட்டி. அச்சுப்புத்தகங்களைப் படிக்க முடியாத அனைத்துப் பார்வையற்றவர்களுக்கும் இது கேக்தான்.”
“இந்தக் கேக்தான்மா என் பையன் நாலு வருஷமா பார்வையற்றவர்களுக்குக் கொடுத்துட்டுருக்கான்.” “சந்தோஷமா இருக்கு ஆண்ட்டி. எனக்கு அதைப்பற்றி விரிவா சொல்லமுடியுமா?” “சொல்லுப்பா ரவி.”
அவர் சொல்லத் தொடங்கினார்.  2016ஆம் ஆண்டு நானும் என் நண்பனும்  வள்ளுவர் கோட்டத்துல இருக்க ரீடிங் செண்டர்குப் போனோம். அது பார்வையற்றவர்களுக்கான ரீடிங் செண்டர். அங்கே நிறைய தன்னார்வலர்கள் வந்து புத்தகம் வாசிப்பார்கள்.  என் நண்பந்தான் என்னைக் கூட்டிட்டுப்போனான். அவர்களுக்குப் புத்தகங்கள் வாசித்துக்காட்ட ஆரம்பித்தேன்.
அப்போது ஒருவர் ஒரு புத்தகத்தைத் தந்து அதை ஒலிப்பதிவு செய்துத் தரச்சொன்னார். குவாலிட்டி  நன்றாக இருக்க வேண்டும். வார்த்தைகள் புரிய வேண்டும் என்றார். நானும் பதிவு செய்து தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு நன்றாக இருந்தது என்றார்.
அதன்பின் நிறைய ஒலிப்புத்தகங்கள் பதிவு செய்தேன். பிறகு சிலர் மின் புத்தகங்களும் படிப்பது தெரிய வந்தது. எது அதிகமாக பயன்படுகிறது என்று சில பார்வையற்றோரைக் கேட்டேன். இரண்டுமே பயன்படும். மின்புத்தகங்கள் கொஞ்சம் அதிகமாகவே பயன்படும் என்றனர்.
ஒரு வலைத்தளம் உருவாக்கி, அதில் எல்லோரிடம் இருக்கும் நூல்களின் பட்டியல்களைப் போடவேண்டும்.  புத்தகம் வேண்டும் என்று  கேட்கும்போது அந்தப் புத்தகம் இருக்கும் தனிநபரிடமிருந்தோ அல்லது சங்கத்திடமிருந்தோ வாங்கிக்கொடுப்பது என முடிவு செய்தேன்.
பட்டியல்கள் சரியாக கிடைக்கவில்லை. அதனால் வாசிப்போம் வாருங்கள் என்ற வலைதளத்தை உருவாக்கிப் பார்வையற்றவர்களை மட்டும் அதில் உறுப்பினராக்கினேன்.
இது பார்வையற்றவர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டியது. மற்றவர்களால் எப்படியும் புத்தகம் படித்துவிட முடியும் என்று, உறுப்பினராகும் விண்ணப்பப்படிவத்துடன்  பார்வையற்றவர்களா என்று உறுதி செய்துகொள்ள  அவர்களின் புகைப்படம் தாங்கிய அடையாள அட்டைக் கேட்டேன்.
நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சிறிது சிறிதாக வரத்தொடங்கினர். 300 ஒலிப்புத்தகங்களும், 300 மின்நூல்களும் வலைதளத்தில் ஏற்றப்பட்டது.
“அவ்வளவு புத்தகங்களும் எப்படி பதிவு செய்தீங்க? எல்லா மின்நூல்களும் இப்படித்தான் உருவாக்கப்பட்டதா?” “இல்லை. மின்நூல்களை முன்பு நிறைய இணையத்தொடர்களிலிருந்தும், இலவசமாக படிக்கக்கூடிய வலைத்தளத்திலிருந்தும் தொகுத்தேன். அப்புறம் பார்வையற்றவர்களிடமிருந்தும் சில புத்தகங்கள் கிடைத்தன.
வாசிப்பாளர்களும், பார்வையற்றவர்களும், என் நண்பர்களும்  நன்கொடை கொடுத்தாங்க. அதில் நிறைய அச்சுப்புத்தகங்கள் வாங்கப்பட்டு o.c.r செய்யப்பட்டன. முன்னூறு புத்தகங்கள்தான் வலைத்தளத்தில் இருக்கும். ஆனால் 5000 புத்தகங்கள் மின்நூலாக இருக்கின்றன. அதன் பட்டியல் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்த்து எந்தப் புத்தகம் வேண்டுமோ அதன் பெயரை vaasippom@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அந்தப் புத்தகம் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.”
““எங்க வீட்டுல தாலாட்டு எது தெரியுமாம்மா? என் பையன் பதிவு செய்த  ஒலிப்புத்தகங்கள்தான். எங்களுக்கு மட்டுமல்ல புத்தகம்  கேட்கிற  எல்லாருமே  அப்படித்தான் சொல்றாங்க.”
“அதில் ஏதாவது ஒரு பதிவை  நான் கேட்கமுடியுமா ஆண்ட்டி?” “இதோ கேளு.”
ஹெட்போனில் எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியான இனிமையான குரலில் எனது இந்தியா புத்தகம் கேட்டது.
“ஆமாம் ஆண்ட்டி. சுகமாய் மனதை வருடிப் படிக்கத் தூண்டுகிறது. வெளியே கேட்கும் எந்தச் சத்தமும் இந்தக் கவணத்தைச் சிதறவைக்காது.” ”அதனால்தான்மா நான் இதைத் தாலாட்டுன்னு சொன்னேன். நிறைய பேர் தூக்கம் வராம புத்தகம் படிப்பாங்க. படிச்சிக்கிட்டே தூங்கிடுவாங்க. ஆனா படிச்ச விஷயம் மனசுல ஆழமா பதியும். அப்படித்தான் இருக்கும் இந்த ஒலிப்புத்தகங்களும்.  நானும் ரொம்பநாள் கழித்து இதையெல்லாம் கேட்க ஆரம்பிச்சிருக்கேன்.”
“300 புத்தகங்களும் நீங்களே  பதிவு செய்ததா?”  “நான் பதிவு செய்த புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்ற வாசிப்பாளர்கள்  வாசித்தது, கிழக்கு ஒலிநூல்கள்,  யூடியூபில் போடப்பட்ட சிலநூல்கள் இருக்கின்றன. ஒலிநூல் வாசிப்புக் குறைந்துவிட்டதாலும், மின்நூலாக மாற்றவே நேரம் சரியாக இருப்பதாலும் ஒலிநூல்கள் 300 புத்தகங்களோடு நிறுத்தப்பட்டன.”
“அப்படியானால் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்த நெட் இணைப்பு வேண்டுமல்லவா?” “ஆமாம்.” “என்னிடம் நெட் இல்லை. ஆனால் படிக்க ஆசையாக இருக்கிறது.” “நான் என் நண்பர்களிடம் ஸ்பான்சர் வாங்கி உங்களுக்கு ஜியோ வைஃபை டிவைஸ் வாங்கித்தரட்டுமா? படிக்கிறீங்களா?”
“வேண்டாம் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” “அப்படியெல்லாம் இல்லை. ஏற்பாடு செய்கிறேன்.”
அதன்படி ஒரு ஜியோ டிவைஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ”மிக்க நன்றி. வேறு எப்படி எங்கே புத்தகங்கள் படிக்கலாம்?” “கிண்டிலில் படிக்கலாம்.”
“அப்படியென்றால்?” “அமேசானில் கிண்டில் என்று ஒரு App இருக்கிறது அதை கணிணியிலோ போனிலோ இன்ஸ்டால் செய்து படிக்கலாம்.” “எப்படி இன்ஸ்டால் செய்து எப்படி படிப்பது என்று சொல்லித்தரமுடியுமா?”
அமேசானில் அக்கௌண்ட் உருவாக்கி, கிண்டில் இன்ஸ்டால் செய்வது, புத்தகம் தரவிரக்குவது, புத்தகம் விலைகொடுத்து வாங்குவது, அன்லிமிடட் போடுவது என்று அனைத்தும் சொல்லித்தரப்பட்டது. “கூகுள் டிரைவில் எப்படி ஃபோல்டர் அல்லது ஃபைல் ஏற்றுவது?” அதுவும் கேட்டதுமே சொல்லித்தரப்பட்டது.
“PDF படிக்க வேறு ஏதாவது வழியிருக்கா?” “பாலபோல்கா என்ற சாஃப்ட்வேர் இருக்கிறது.” ”அதை எப்படி பயன்படுத்துவது?”
 அதைப் பயன்படுத்தவும் சொல்லித்தரப்பட்டது. “என்ன வேலை செய்கிறீர்கள்?” ”IT கம்பெனியில் வேலை செய்கிறேன்.”
”மகத்தான பிள்ளையைப் பெற்றிருக்கிறீங்க ஆன்ட்டி. நன்றி. நான் வருகிறேன்.” “நன்றிம்மா. பத்திரமா போய்ட்டு வா.”.
“படிக்கும் விஷயத்தில் தயங்காமல் எது வேண்டுமானாலும் கேளுங்க. செய்து தருகிறேன்.” “நிச்சயம் கேட்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருகிறேன்.” “நன்றி. போய்ட்டு வாங்க.”
பிறந்தநாள் கேக் எப்படி இருக்கிறது?

பின் குறிப்பு:
வாசிப்போம் வலைத்தளத்தை அமைத்த திரு. ச. இரவிக்குமார் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர்  வீட்டிற்கு சென்றதைத் தவிர மற்ற அனைத்தும் உண்மையாகவே எனக்கு வாசிப்போமிலிருந்து கிடைத்தவை.

17 comments:

  1. அபி
    அருமையான பதிவு

    ReplyDelete
  2. வணக்கம் உண்மையிலேயே இந்தப் பதிவுக்காக ுங்களை வாழ்த்துகிறேன் ில்லை ில்லை ில்லை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நானும் இதுகுறித்து பதிவெழுதலாமென நினைத்திருந்தேன் தவிற்க முடியாத சில காரணங்களால் இயலவில்லை. நிஜமான, உணர்வுபூர்வமான பிறந்தநால் கேக். மனம் முழுவதும் சுவைக்கிறது. வாசிப்போம் ரவிக்குமார் சாருக்கு ிதயம் நிறைந்த, உள்ளம்கணிந்த ின்னும் என்னவெல்லாம் நல்வார்த்தை ிருக்கிறதோ அவை அத்தனையிலும் பிறந்தநால் நல்வாழ்த்துகள்.
    Still am unable to stop this comments. there are lot many things to say about him. but due to situation am force myself to stop this and publishing.

    ReplyDelete
    Replies
    1. thanks fernando. happy about your comment.

      Delete
    2. உங்களால் எப்படி கருத்தை முடிக்க இயலவில்லையோ அதுபோல் என்னால் உங்களின் உணர்ச்சி மயமான கருத்துக்கு பதில் சொல்ல இயலவில்லை. ஃபெர்நாண்டோ. சந்தோஷமாக இருக்கிறது. நன்றி. நன்றி. நன்றி.

      Delete
  3. மிகவும் சிறப்பான விஷயத்தினைச் செய்து வரும் திரு ரவிக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். எங்கள் சார்பிலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் அபிநயா.

    பதிவு நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடர்ந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். நிச்சயம் உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவுகளை எழுதுகிறேன்.

      Delete
  4. நிச்சயம் அருமையான மனிதர் அவர். அவரால் எட்ட மூடியா கனி என்று னாம் நினைத்த பல நூல்கள் கைக்கு எட்டியுள்ளன. வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் அவருக்கு தனிப்பட்ட வகையில். அப்சரன் தனது முதல் பதிவிலேயே அவரை பற்றி குறிப்பிட்டான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார். நான் பொன்விலங்கு படித்தபோது அதுல நா.பா நாவல்களின் பட்டியல் இருந்தது. வாசிப்போம் இல்லாதபோது மூனு நா.பா நூல்கள்தான் இருந்தது. இப்போ 90 சதவிகிதம் வாசிப்போம் லருந்து கிடைச்சிருக்கு. இன்னும் எவ்வளவோ நூல்கள்.

      Delete

  5. அபி, நல்ல பதிவு, இனி யாராவது பிறந்தநாள் என்று அழைத்தால் ஏதேனும் பரிசுபொருளுடன் செல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து அட்டை அல்லது வாழ்த்து கவிதையுடன். பிறந்த நாள் கொண்டாடும் நபரைகூட பார்க்காமல் கேக் கொடுங்கள் கேக் கொடுங்கள் என "கேக்"ற பழக்கத்தை கைவிடுங்கள்!!!!!

    எதிர்பார்த்த கேக் கிடைக்காமல் (இங்கும்)பல்பு வாங்கினாலும் நல்ல செய்தியோடு திரும்ப வந்தது பாராட்டுக்குரியது.

    பலருக்கு நன்மை பயக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் திரு ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும்.

    கோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். ஆனால் நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றது, அவர் அம்மாவிடம் பேசி கேக் கேட்டது அனைத்தும் கற்பனை. இதை ஒரு பதிவாக அப்படியே சொல்லாமல் கொஞ்சம் டெமோ காமிக்க சில கற்பனையைச் சேர்த்தேன். நீங்க எனக்கு பல்ப் கொடுத்துட்டீங்களே.

      Delete
  6. திருமிகு ரவிக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். உங்கள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவிக்கிறேன்.

      Delete
  7. நல்ல பதிவு

    அருமையான கற்பன

    தங்கள் கற்பனை வளத்திற்கு ஆதாரமாய் அமைந்ததை பற்றி கூறுங்களேன்....


    திரு ரவிக்குமார் ஐயா அவர்கள் மிகச்சிறந்த மனிதர். அவரோடு தொடர்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்...




    ReplyDelete
    Replies
    1. நன்றி. என் கற்பனைக்கு ஆதாரம்லாம் பெரிதாய் ஒன்றுமில்லை. அவருக்குப் பிறந்தநாள். பிறந்தநாள்னா கேக். அவர் o.c.r பன்ற குண்டு புத்தகங்கள். அவ்வளவே.

      Delete
  8. அபி, சத்தியமா சொல்றேன். என்னால் இப்புடிலாம் எழுதமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா இப்படிலாம் எழுதாதிங்க நவீன் இன்னும் நல்லா எழுதுங்க.

      Delete