சிட்டிசன் படத்தில் அஜித் தமிழக வரைப்படத்திலிருந்து அத்திப்பட்டி என்ற ஒரு முழுக்கிராமமே தொலைந்து போய்விட்டதைக் குறிப்பிட்டார். அதுபோல
மக்கள் இதயத்திலிருந்தும் கூகுள் ஆண்டவரிடமிருந்தும் நிறைய தியாகிகள் தொலைந்து போய்விட்டார்கள். அப்படி ஒருவர் இருந்திருக்கிறாரா? என்று வியக்கும் வண்ணம் அவர்கள்
ஊர் பேர் எதுவும் தெரிவதே இல்லை. அப்படி தொலைந்து விட்ட தியாகிகளில் ஒருவர்தான் சத்யசேவா கிராம ஆசிரமத்தை நிறுவிய ராஜாராமன் என்ற காந்திராமன். ராகங்களை இசைக்கருவிகளால் வாசிக்கமுடியும் அல்லது மனிதரின் குரலால் பாடமுடியும். ஆனால் ஆத்மாக்களுக்கும் ராகமுண்டு அது உள்ளத்து உணர்வுகளால் இசைக்கக்கூடியது. பரிசுத்தமான இரு உள்ளங்கள் இணைந்து மீட்டிய ராகத்தைத்தான் நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தான் எழுதிய ஆத்மாவின் ராகங்கள் என்னும் நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தை பக்தி செய்யும்
ஒருவரும், தேசபக்தரை பக்தி செய்யும் ஒருத்தியும் உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்ந்த கதையிது. இந்த கதையை முதல்முறை நான் படிக்கும்போது எனக்குள் எழுந்த உணர்வைச்
சொல்ல வார்த்தை இல்லை. இப்படி எத்தனை தியாக தீபங்கள் நமக்கு தெரியாமல் அணைந்துபோய் இந்தியச்சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்கும் என்று தோன்றியது. இந்த நாவலின்
முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இதில் இரண்டு சகாப்தங்கள் வருகிறது. மகாத்மா காந்தியின் போராட்டங்களும், அந்த மகாத்மா காந்தியை பக்தி செய்யும் மகாத்மாவான
காந்திராமனின் போராட்டங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. நா.பா அவர்கள் ராஜு என்ற பெயரில் பத்திரிக்கையாளராக இருப்பதாகவும், காந்திராமனின் இறப்புச்செய்தி
அவருக்கு டெலிப்ப்ரிண்டரில் வருவதாகவும், அதை வெளியிட இரவென்றும் பாராமல் அவர் தன் ஊழியரோடு அலுவலகத்திலிருந்து வெளியிடுவதாகவும் இந்த நாவலின் முதல் அத்தியாயம்
தொடங்குகிறது. 1930ஆம் ஆண்டு. உப்புச்சத்யாகிரகம் நாடெங்கும் பரவி தலைவர்கள் கைதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலமது. அப்போது முதல் 1947ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம்
15ஆம் தேதிவரை அவர்மேற்கொண்ட சுதந்திர போராட்டங்களும், சத்யசேவா ஆசிரமத்தை நிறுவியதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. படிக்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. மே மாதம்
6ஆம் தேதி வெளியிடப்பட்டு 7ஆம் தேதி மதுரைக்கு வந்த சுதேசிமித்திரன் பத்திரிக்கையில் மகாத்மா காந்தி அவர்கள் கைதான செய்தி வருகிறது. இந்நிலையில் ராஜாராமனும்
அவர் நண்பர்களும் அவர்களின் கொதிப்பை வெளிப்படுத்தவும், நாட்டின்மீதுள்ள பற்றால் தாங்களும் ஏதாவது செய்து சிறை செல்ல வேண்டுமென்று அந்நியத்துணிக்கடை மறியல்
மற்றும் கள்ளுக்கடை மறியல் நடத்த திட்டமிடுகிறார்கள். இங்கிருந்துதான் இவர்களின் முதல் போராட்டம் துவங்குகிறது. அந்நியத்துணிக்கடை மரியல் நடத்தி முதல்முறை வேலூர்
சிறையில் சி. வகுப்பில் சிறைக்கைதியாகிறார். தாயின் உடல்நிலை மோசமாக இருந்தபோதும், தாயின் இறப்பிற்கும் பரோலில் செல்ல மறுக்கிறார். அவரின் சிறை அனுபவங்களையும்,
அவர் சந்தித்த தியாகிகளின் நட்பையும் பற்றி நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தன் எழுத்துக்களால் அழகாக அலங்கரித்திருக்கிறார். வேலூர் சிறையின் சுகமான பயனுள்ள அனுபவங்களைப்போல
இரண்டாம் முறை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராஜாராமன் அனுபவிக்கும் துன்பங்களையும் மனமிளகும்படி எழுதியிருக்கிறார். வடக்கு சித்திரை வீதியில் அவர் திலகர் வாசகசாலை இருந்தது. அந்த மொட்டைமாடிக்கு எதிரிலிருக்கும் வீட்டின் மாடியறையிலிருந்த மதுரவள்ளியை சந்திக்க நேர்ந்தது..
முதலில் அவள் வசிக்கும் இடத்தால் அவளையும் தவறாய் புரிந்துகொண்டவர் அவளின் பரிசுத்தமான
அன்பை புரிந்துகொள்கிறார். அவள் அவரை காதலிக்கவில்லை. பக்தி செய்கிறாள் என்பதை உணர்கிறார். ஊரரிய உலகரிய நீங்கள் தேசத்திற்காக தியாகம் செய்யுங்கள், ஊரரியாமல்,
உலகரியாமல், புகழை எதிர்பார்க்காமல் உங்களுக்காக அந்தரங்கமாக தியாகம் செய்யும் என் உரிமையை தடுக்காதீர்கள் என்ற வார்த்தைகளை படிக்கும்போது, எனக்கு நா. பாவின்
பேனாவிலிருந்து வடிவது எழுத்துக்களா அல்லது சித்திரத்துளிகளா என்ற சந்தேகம் கலந்த இனிய ஆச்சரியம் தோன்றுகிறது. தெளியலேது ராமா பக்தி மார்கமு. ராமா உன்னை பக்தி
செய்யும் மார்க்கம் தெரியவில்லையே என்று உருகி உருகிப்பாடி அவரின் உயர்ந்த மனதை ஜெயிக்கிறாளே தவிர, வேண்டாத உணர்வுகளை தூண்டவில்லை. இதுதான் நா. பாவின் சிறப்பு.
காதலை நாகரிகம் என்ற வார்த்தைக்கும் மேலாக தெய்வீகம் பொருந்தியதாக மாற்றும் வல்லமை இருக்கிறது. ஒரு பெண்ணாய் நான் நா.பாவின் இப்படிப்பட்ட உயர்ந்த எழுத்துக்களை
படிக்கும்போது பெருமையடைகிறேன். அவள் என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறாள் என்பதை நாவலை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்தரங்கம் என்ற வார்த்தையை கேட்கும்போதே
பலருக்கும் கற்பனைகளும், கருத்துக்களும் வேறெதையோ நோக்கித்தான் பயணிக்கும். ஆனால் நா. பாவின் அந்தரங்கம் என்ற வார்த்தை இதயத்தின் உள்ளே எவருக்கும் தெரியாமல்
புதைந்துகிடக்கும் அதீத அன்பை மட்டுமே குறிப்பதாகும். இது என்னை வியக்கவைக்கும் விஷயம். அழகு, ரசனை ஆகியவற்றை வர்ணிக்கும்போதும் நாகரிகத்தமிழில் மட்டும்தான்
எழுதுவார். படிக்கும்போது பூக்கள் மணப்பதுபோல இதயத்திலும் நறுமணம் கமழும். இந்த நாவலில் என்னைக்கவரும் வகையில் ஒரு அழகான சோகக்குயிலின் குரலை வர்ணித்து ஒரு
பாடல் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை. எல்லையிலாததோர் காட்டிடை நல் என்று ஆரம்பிக்கும் பாடல். இவர்களின் தெய்வீக காதல் பெண்ணின் தாய்க்கும்,
காந்திராமனுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வந்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. காந்திராமன் 10 வருடங்களுக்கு முன் சுதந்திரம் கிடைக்கும்வரை தானும் தன் நண்பர்களும்
திருமணம் செய்வதில்லை என்று சத்தியம் செய்திருப்பதாகவும், சுதந்திரம் கிடைத்தவுடன் திருமணம் செய்வதாகவும் வாக்களித்தார். சுதந்திரம் கிடைத்துவிட்டது, ஆனால்
இவர்களின் திருமணம் நடக்கவில்லை. ஏன்? சுதந்திர போராட்டத்தில் இறந்துவிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். படித்துப்பார்த்து ஏனென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆத்மாக்களின் ராகங்களை நா. பா அவர்கள் அந்த ஆத்மாக்களிடமே சமர்பித்துவிடுகிறார். அப்படி செய்தபோது அந்த மோன ராகங்களை அவர் கேட்பதைப்போல் உணர்கிறார். படித்துப்பாருங்கள்.
இப்படியும் சில ராகங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Vidya
ReplyDeleteBeautiful
Will read the book and comment
thank you mam.
DeleteSuper Riview! I too Read this such a mind blowing novel.
ReplyDeletethank you fernando.
Deleteமனதைத் தைத்த பதிவு.ஏன் மா இந்த சின்ன வயசுல இத்தன சிந்தனை. அவர் தியாகமே செய்திருக்கவேண்டாம் இப்போது நாடு இருக்கும் நிலையை யோசித்தால்.
ReplyDeleteஉண்மை நவீன். பாவம் அவருக்கு தெரியவில்லை வருங்காலத்தில் நாடு இந்தநிலையை அடையுமென்று. தமிழன் படத்தில் ஒருவர் சொல்வார். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை என்று. அது உண்மை போலும்.
Deleteஅருமையான பதிவு. இந்த பதிவை படித்தவுடன் ஆத்மாவின் ராகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.
ReplyDeleteபதிவில்..
திருமணம் செய்வதில்லை என்று சத்தியம் செய்து இருப்பதாகவும், சுதந்திரம் கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ளுவதாகவும் எழுதி இருந்தீர்கள்.
சற்றே குழம்பிவிட்டேன்.
திருமணம் செய்வதற்கு ஏதடா விடுதலை என்று?
:)
தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களின் வாழ்த்துக்கு நன்றி சார். அவருக்கு தேசப்பற்று அதிகம். அதிலும் அவர் ஒரு போராளி. திருமணம் செய்வது இந்த போராட்டங்களுக்கு தடையாக இருக்கும் அல்லது தேசம் அடிமைத்தனத்தில் வெந்துகொண்டிருக்கும்போது தான் மட்டும் சந்தோஷமாக இருக்கக்கூடாது என்று நினைத்திருக்கிறார். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு வைராக்கியம் இருக்குமே. இது நடக்கும்வரை இதை செய்யமாட்டேனென்று. அப்படித்தான் இவருக்கு இந்த வைராக்கியம். படித்துப்பாருங்கள்.
Deleteபடிக்கத் தூண்டும் அருமையஆன நூல் அரிமுகம். நிச்சயம் படிக்கிறேன். இது போன்ற நல்ல புத்தகங்களை அரிமுகம் செய். முடிந்தால் சி. சு. செல்லப்பாவின் சுதந்திரதாகம் நூலை வாசி. அதன் மின்னூல் வடிவத்திர்க்காக காத்திருக்கிறேன்.
ReplyDeletethank you sir. sure. i will read.
Deleteவணக்கம் மேடம் எனது பெயர் முனிய பிள்ளை இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன் உங்களது இந்த படைப்பானது என்னை போராட்டத்திற்கு ஒரு தூண்டுகோலாக அமைக்கும் நிலையில் என்னை உணர்த்துகிறது இன்னும் பல இதழ்களைப் படித்து உங்களது கட்டுரைகள் மேலும் தொடரட்டும் உங்களது பயணங்கள் தொடங்க வேண்டும் நன்றி
ReplyDelete