வணக்கம் நண்பர்களே.
இன்னைக்கு சிரிக்கலாமா? உங்களை தயார் செய்துக்கோங்க சிரிக்க.
நான் முன்னாடியே சொன்னேனே சொப்புசாமா விளையாடினேன்னு. ஆமா எனக்கு மண் பாண்டங்கள் ரொம்ப பிடிக்கும் விளையாட.
சீக்கிரமா உடைச்சிட்டு புதுசு புதுசா வாங்கிக்கலாம். பசிச்சா கொஞ்சூண்டு சாப்பிட்டு அம்மாகிட்ட அடி வாங்கலாம். இப்படி சின்ன வயசுல நினைச்சது. அப்புறம் நல்ல பிள்ளையா சாப்பிடுவதை விட்டுட்டேன். நிறைய பெயிண்ட் கலக்குறாங்களா அதான் சுவை பிடிக்கல போல.
விளையாடுவதை விடல. விடவும் மாட்டேன். 2009லருந்து 2012வரை நான் ஆஹா வானொலியில வானொலி தொகுப்பாளரா வேலை செஞ்சிட்டு இருந்தேன்.
ஒருநாள் நானும் என் மாமா பெண்ணும் கடைக்கு போனோம். எங்க வீட்டுலருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு சட்டிப்பாணை கடை இருக்கு. எங்களுக்கு தெரிஞ்சக்கடை. எப்படி தெரியும்னு கடைசியா சொல்றேன்.
வேற எதையோ வாங்கதான் போனோம். அந்தக்கட வழியாப்போனதால ஆசையா இருந்தது. கையில 50 ரூபாய்க்கும் மேல இருந்தது.
“உமா வாடி. சட்டிப்பாண வாங்கலாம்.” “அக்கா, நீ என்ன சின்னக்குழந்தையா? அதெல்லாம் வேணாம் வா போகலாம்”
“இல்ல எனக்கு வாங்கனும் வாடி.” பிடிவாதமா அவளை கூட்டிட்டுப்போனேன். இருவரும் கடைக்குள் போனோம். அந்த கடைக்காரர் எங்களை அன்பா வரவேற்று நலம் விசாரிச்சாங்க.
நான் ஒரு இரண்டு மூன்று சட்டிப்பாணைதான் எடுத்தேன். அவங்க இன்னும் கொஞ்சம் எடுத்துக்க சொன்னாங்க. உண்டியல் கூட கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு எங்க அதிகமா காசு கேக்கப்போறாங்களோன்னு.
எல்லாம் முடிச்சுட்டு எவ்வளவுன்னு கேட்கும்போது அவர் சொன்னாரே ஒரு பதில். பரவாயில்லமா நீ சும்மா எடுத்துக்கோன்னு.
ஹா ஹா வானத்துல பறந்தேன். உமாக்கும் |ஆச்சரியமா இருந்தது. சந்தோஷமா வீட்டுக்கு வந்தேன். இதோட விட்டிருந்தா எனக்கு என்ன மதிப்பு இருக்கு?
உமா வீடும் எங்க வீடும் ஒரு தெரு தள்ளிதான். அதுனால நான் எங்க போகனும்னாலும் அவளைத்தான் கூப்பிடுவேன். அப்படித்தான் இன்னொருநாள் அவ வந்தா.
எனக்கு புது சட்டிப்பாண வாங்க ஆசையா இருந்தது. கையில காசு இல்ல. அதான் எங்களுக்கு தெரிஞ்சக்கடைல இலவசமா தரப்போறாங்களேன்னு தைரியமா கிளம்பிட்டேன்.
சும்மா கையில வெச்சிக்க எங்க அம்மாக்கிட்ட ஒரு 10 ரூபா வாங்கிட்டு போனேன். உமாக்கு இது முன்னாடியே தெரிஞ்சதால அவளும் என்னைப்போல அமைதியாதான் வந்தா.
மறுபடியும் ஒரு அன்பான வரவேற்பு. போனமுறைதான் கம்மியா எடுத்துட்டேன். இந்த முறை நிறைய எடுக்கனும்னு எடுத்துக்குட்டேன்.
அதே போல பில்லிங் நேரம். அவர் இப்பவும் சொன்னாரே ஒரு பதில். 80 ரூபாய்மா.
எங்களுக்கு பயங்கற அதிர்ச்சி. எப்படி சமாளிக்கிறது? தயங்கி தயங்கி என்கிட்ட 10 ரூபாய்தான் இருக்கு சொன்னேன்.
இல்லம்மா இப்போ விலை அதிகமாகிடிச்சு சொன்னாரு.
ஆசையா வாங்கின எல்லாத்தையும் வெச்சிட்டு ஒரு பாண ஒரு சட்டி மட்டும் எடுத்துக்குட்டேன்.
வழியெல்லாம் எனக்கு ஒரே யோசனை. அன்னைக்கு சும்மா கொடுத்தாங்களேன்னு. உமாகிட்ட சொன்னபோது, “ஒருநாள் கொடுப்பாங்க எல்லாநாளும் அப்படியா?” உங்களை நம்பி வந்தேனேன்னு ஒரே கேலி.
வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டையும் நடந்ததை சொன்னோம். அப்போ எங்க அப்பா நிதானமா கொடுத்தாரே எனக்கு ஒரு அதிர்ச்சி.
நான் அவனுக்கு துணி தைத்துக்கொடுத்த காசுல மீதி தரனும் அதான் அன்னைக்கு கொடுத்துருக்கான். திரும்பப்போனா எப்படி தருவான்னு கேட்டார்.
இப்போ புரிஞ்சிருக்குமே எப்படி எங்களுக்கு தெரிஞ்சக்கடைன்னு?
எங்க அப்பா தையல்காரர். அந்தக்கடைக்காரர் அவரோட நண்பன். வெளிய சட்டிப்பாணை கடை இருக்கும். உள்ள தையல் கடை இருக்கும். எங்க அப்பா அங்க கொஞ்சநாள் வேலை செஞ்சாரு.
அவர் வேலைல கெட்டிக்காரர். எல்லோருக்கும் குரு போல. அதுனால அந்தக்கடைல எங்க அப்பாவுக்கு ஒரு தனி மதிப்பு.
எனக்காகவே ஆர்டர் கொடுத்து நிறைய சொப்பு செய்ய சொன்னாரு எங்க அப்பா.
அவங்களும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்து தந்தாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த நட்பு.
அந்த நட்பு தந்த தைரியம்தான் என்னை குயவன் கிட்ட குண்டு பல்ப் வாங்க வெச்சிடிச்சு.
செம்ம பல்ப் போங்க. இந்த விஷயத்த தொகுப்பாளர் ரோகினிகிட்ட சொல்ல. அவங்க அப்படிப்போடு ஷோல இதை ஒரு தலைப்பாக்கி இப்படி நீங்களும் யார்கிட்டையாவது பல்ப் வாங்கியிருந்தா கால் பன்னுங்கன்னு சொல்லி ஒருமணி நேர ஷோவ ஓட்டிட்டாங்க.
ஆரம்பத்துல என் பெயர் சொல்லல. பொதுவாதான் சொன்னாங்க. ஹப்பா. என் மானம் தப்பிச்சுடிச்சுன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா அவங்களும் வெச்சாங்களே ஒரு டுவிஸ்ட். ஷோவை முடிக்கும்போது இப்படி அசிங்கப்பட்டது வேற யாருமில்ல உங்க தொகுப்பாளர் அபினயாதான்னு சொல்லி அட்டகாசமா என் மானத்தை வாங்கி ஷோவை முடிச்சிட்டாங்க.
எப்படி?
குண்டு பல்பு... ஹாஹா....
ReplyDeleteபல சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே நாம பல்பு வாங்கிடறோம்...
தொடரட்டும் பதிவுகள்.
நன்றி சார். ஆமாம் இப்படி ஒரு பல்ப் வாங்குவேன்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலை. ஹா ஹா ஆனாலும் சுவாரசியமாதான் இருந்தது.
Deleteநானும் நிறையா பொண்ணுங்க கிட்ட பல்ப் வாங்கியிருக்கேன்.
ReplyDeleteஅதுதான் எனக்கு தெரியுமே நவீன். எனக்கு மட்டுமா தெரியும்? இனிமேலும் நிறைய பல்ப் வாங்க வாழ்த்துக்கள்.
Deleteநன்றி...இனிமேல் ஒரு சேஞ்சுக்கு LED bulb கிடச்சுதுனா பரவாயில்லை. குண்டு பல்ப் has gone out of fashion
Deleteஹா ஹா அப்போ பல்ப் வாங்காம இருக்கமாட்டீங்கன்னு முடிவு பண்ணியாச்சு. உங்க மனவலிமை கண்டு நான் வியக்கிறேன். தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Deleteஅபி
ReplyDeleteஅருமை. நானும் நிறைய பல்பு வாங்கியிருக்கேன்.
வித்யா
அச்சோ மேடம். இந்த உலகம் உங்களைப்போல அப்பாவிகளையுமா விட்டுவைக்கலை? என்ன கொடுமை சரவணன் இது.
Deleteயாரு சரவனன்? அவர் கிட்ட குண்டு பல்பு வாங்கினியா எல் ஈ டீ பல்பு வாங்கினியா சீரியல் பல்பு வாங்கினியா?
Deleteஅது என்ன பல்ப்னு ரஜினிகாந்த்கிட்டையும் பிரபுகிட்டையும் கேட்டு சொல்றேன் அரவிந் சார்.
Deleteஹா ஹா உங்க எஃப்எம் லயும் கன்டன்ட் கிடைக்காம ரொம்ப கஷ்ட படுவீங்க போல...
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சில நல்ல அனுபவங்கள் இப்படி தலைப்பா ஆகுறதுல தப்பில்லை. அனுபவங்களின் தொகுப்புதான் நல்ல வரலாறு. ஆமா அது என்ன உங்க fm லையும்? ஏன் உங்களுக்கும் கண்டெண்ட் கிடைக்கலையா?
Deleteசெம பல்ப்! முண்ணாடியெல்லாம் எனக்குமட்டுந்தான் இப்படி நடக்க்ுதா? அப்படீன்னு குழப்பமா ிருக்கும் இப்போ.................
ReplyDeleteமத்தவங்களுக்கும் கிடைச்சதுல சந்தோஷமா இருக்குமே. சரி. உங்கள் பல்ப் அனுபவங்களை எழுதுவிங்களாம்.
Delete
ReplyDeleteஅதெப்படிங்க இந்த காலத்தில ஒருத்தர் எதையும் சும்மா கொடுப்பார்? அதுல ஒரு உள்குத்து இருக்குமென யோசிக்க கூடாதா? குயவரிடம் வாங்கிய பல்பு உங்கள் தொகுப்பாளினி தோழியிடம் பீஸ் போய்விட்டதே.
சுவாரசிய பல்பு.
நவீன் மற்றும் ஃ பெர்ணாண்டோ பல்பு அனுபவம் அறிய ஆவல். கொஞ்சம் எழுத சொல்லுங்க, நீஙக சொன்ன கேட்பாங்க..
பதிவில் மட்டும்தான் பல்பு என்று நினைத்தால் பின்னூட்டத்திலும் பலர் வாங்கியதை அறிகிறேன். நீங்கள் எல்லோரும் சேர்ந்து "பல்பு வாங்குவோர் சங்கம்" என்று ஆரம்பித்து உங்கள் அனுபவங்களை ஏன் ஊருக்கு வெளிச்சம்போட்டு காட்டக்கூடாது?
என் குட்டி மூளைல அந்த உள்குத்து ஏறலயே. ஹா ஹா என்ன சார் இப்படிக் கிளம்பிட்டீங்களே. சரி உங்கள் ஆசையை ஏன் கெடுக்கனும். நிச்சயம் ஆரம்பிச்சிட்டா போச்சு. நவீன் ஃபெர்நாண்டோ உங்கள் பல்ப் அனுபவங்களை எழுதுங்கப்பா.
Deleteஇதுக்கு அந்த குயவனே பரவாயில்ல போல. அந்த ரோஹினி உங்க மானத்த மாநகர பண்பலைல பரப்பியதுதான் இருக்குரதுலையே பெரிய பல்பு போல.
ReplyDeleteஅதை நான் கூட எதிர்பார்க்கல. ஷோவ முடிச்சிட்டு வந்து என்ன அக்கா இப்படி என் மானத்தை வாங்கிட்டீங்களேன்னு கேட்டா, அழகா சிரிச்சாங்க. nice moments.
Delete